Skip to content

ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் - Page: 5

Az-Zumar

(az-Zumar)

௪௧

اِنَّآ اَنْزَلْنَا عَلَيْكَ الْكِتٰبَ لِلنَّاسِ بِالْحَقِّۚ فَمَنِ اهْتَدٰى فَلِنَفْسِهٖۚ وَمَنْ ضَلَّ فَاِنَّمَا يَضِلُّ عَلَيْهَا ۚوَمَآ اَنْتَ عَلَيْهِمْ بِوَكِيْلٍ ࣖ ٤١

innā
إِنَّآ
நிச்சயமாக நாம்
anzalnā
أَنزَلْنَا
இறக்கினோம்
ʿalayka
عَلَيْكَ
உம்மீது
l-kitāba
ٱلْكِتَٰبَ
இந்த வேதத்தை
lilnnāsi
لِلنَّاسِ
மக்களுக்காக
bil-ḥaqi
بِٱلْحَقِّۖ
சத்தியத்துடன்
famani
فَمَنِ
யார்
ih'tadā
ٱهْتَدَىٰ
நேர்வழி செல்கிறாரோ
falinafsihi
فَلِنَفْسِهِۦۖ
தனது நன்மைக்காகத்தான்
waman ḍalla
وَمَن ضَلَّ
யார்/வழிகெடுகிறாரோ
fa-innamā yaḍillu
فَإِنَّمَا يَضِلُّ
வழிகெடுவதெல்லாம்
ʿalayhā
عَلَيْهَاۖ
அதற்கு பாதகமாகத்தான்
wamā anta
وَمَآ أَنتَ
நீர் இல்லை
ʿalayhim
عَلَيْهِم
அவர்கள் மீது
biwakīlin
بِوَكِيلٍ
கண்காணிப்பவராக
(நபியே!) நிச்சயமாக நாம் மனிதர்களின் நன்மைக்காகவே முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை உங்கள்மீது இறக்கி வைத்தோம். ஆகவே, எவன் இதனைப் பின்பற்றி நடக்கின்றானோ, அது அவனுக்கே நன்று; எவன் (இதிலிருந்து) வழிதவறி விடுகின்றானோ அவன், வழி தவறியதன் பலன் அவனுக்கே தீங்காக முடியும். (நபியே!) நீங்கள் அவர்கள் மீது பொறுப்பாளர் அல்ல. ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௪௧)
Tafseer
௪௨

اَللّٰهُ يَتَوَفَّى الْاَنْفُسَ حِيْنَ مَوْتِهَا وَالَّتِيْ لَمْ تَمُتْ فِيْ مَنَامِهَا ۚ فَيُمْسِكُ الَّتِي قَضٰى عَلَيْهَا الْمَوْتَ وَيُرْسِلُ الْاُخْرٰىٓ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّىۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ ٤٢

al-lahu
ٱللَّهُ
அல்லாஹ்தான்
yatawaffā
يَتَوَفَّى
கைப்பற்றுகின்றான்
l-anfusa
ٱلْأَنفُسَ
உயிர்களை
ḥīna
حِينَ
நேரத்தில்
mawtihā
مَوْتِهَا
அவை மரணிக்கும்
wa-allatī lam tamut
وَٱلَّتِى لَمْ تَمُتْ
இன்னும் இறந்து போகாத உயிர்களையும்
fī manāmihā
فِى مَنَامِهَاۖ
அவற்றின் தூக்கத்தில்
fayum'siku
فَيُمْسِكُ
அவன் தடுத்துக் கொள்கிறான்
allatī
ٱلَّتِى
எதை
qaḍā
قَضَىٰ
விதித்து விட்டான்
ʿalayhā
عَلَيْهَا
அதன் மீது
l-mawta
ٱلْمَوْتَ
மரணத்தை
wayur'silu
وَيُرْسِلُ
இன்னும் விட்டு வைக்கிறான்
l-ukh'rā
ٱلْأُخْرَىٰٓ
மற்றொன்றை
ilā ajalin
إِلَىٰٓ أَجَلٍ
தவணை வரை
musamman
مُّسَمًّىۚ
குறிப்பிட்ட
inna
إِنَّ
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
இதில்
laāyātin
لَءَايَٰتٍ
பல அத்தாட்சிகள்
liqawmin
لِّقَوْمٍ
மக்களுக்கு
yatafakkarūna
يَتَفَكَّرُونَ
சிந்திக்கின்றார்கள்
மனிதர்கள் இறக்கும்பொழுதும், இறக்காமல் நித்திரையில் இருக்கும்பொழுதும் அல்லாஹ்வே அவர்களுடைய உயிரைக் கைப்பற்றுகிறான். பின்னர், எவர்கள் மீது மரணம் விதிக்கப்பட்டதோ அவர்களுடைய உயிரை(த் தன்னிடமே) நிறுத்திக் கொள்கிறான். மற்றவர்க(ளின் உயிர்க)ளை, குறிப்பிடப்பட்ட காலம் வரையில் வாழ அவன் அவர்களிடமே அனுப்பி விடுகின்றான். சிந்திக்கக் கூடிய மக்களுக்கு, நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன. ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௪௨)
Tafseer
௪௩

اَمِ اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ شُفَعَاۤءَۗ قُلْ اَوَلَوْ كَانُوْا لَا يَمْلِكُوْنَ شَيْـًٔا وَّلَا يَعْقِلُوْنَ ٤٣

ami ittakhadhū
أَمِ ٱتَّخَذُوا۟
எடுத்துக் கொண்டார்களா?
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
shufaʿāa
شُفَعَآءَۚ
பரிந்துரை செய்பவர்களாக
qul
قُلْ
கூறுவீராக!
awalaw kānū
أَوَلَوْ كَانُوا۟
அவர்கள் இருந்தாலுமா?
lā yamlikūna
لَا يَمْلِكُونَ
சக்தியற்றவர்களாக(வும்)
shayan
شَيْـًٔا
எதற்கும்
walā yaʿqilūna
وَلَا يَعْقِلُونَ
சிந்தித்து புரியாதவர்களாகவும்
இவர்கள் அல்லாஹ் அல்லாதவைகளை(த் தங்களுக்குச்) சிபாரிசு செய்பவர்கள் என்று (எண்ணி) எடுத்துக் கொண்டிருக் கின்றனரா? "அவைகளுக்கு யாதொரு சக்தியும், யாதொன்றை அறியக்கூடிய உணர்ச்சியும் இல்லாதிருந்தாலுமா (அவைகளை நீங்கள் உங்களுக்குச் சிபாரிசு செய்பவைகள் என்று எடுத்துக் கொள்வீர்கள்)?" என்று (நபியே!) நீங்கள் அவர்களைக் கேளுங்கள். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௪௩)
Tafseer
௪௪

قُلْ لِّلّٰهِ الشَّفَاعَةُ جَمِيْعًا ۗ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ ٤٤

qul
قُل
கூறுவீராக!
lillahi
لِّلَّهِ
அல்லாஹ்விற்கே
l-shafāʿatu
ٱلشَّفَٰعَةُ
சிபாரிசுகள்
jamīʿan
جَمِيعًاۖ
அனைத்தும்
lahu
لَّهُۥ
அவனுக்கே உரியன
mul'ku
مُلْكُ
ஆட்சி
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِۖ
இன்னும் பூமியின்
thumma
ثُمَّ
பிறகு
ilayhi
إِلَيْهِ
அவன் பக்கமே
tur'jaʿūna
تُرْجَعُونَ
நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
பின்னும் (நபியே!) நீங்கள் கூறுங்கள்: சிபாரிசுகள் அனைத்துமே அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை. (ஆகவே அவனுடைய அனுமதியின்றி, அவனிடத்தில் ஒருவரும் சிபாரிசு செய்ய முடியாது.) வானங்கள் பூமியின் ஆட்சி முழுவதும் அல்லாஹ்வுக்குரியதே. பின்னர், (மறுமையில்) அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௪௪)
Tafseer
௪௫

وَاِذَا ذُكِرَ اللّٰهُ وَحْدَهُ اشْمَـَٔزَّتْ قُلُوْبُ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِۚ وَاِذَا ذُكِرَ الَّذِيْنَ مِنْ دُوْنِهٖٓ اِذَا هُمْ يَسْتَبْشِرُوْنَ ٤٥

wa-idhā dhukira
وَإِذَا ذُكِرَ
நினைவு கூரப்பட்டால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
waḥdahu
وَحْدَهُ
ஒருவனை மட்டும்
ish'ma-azzat
ٱشْمَأَزَّتْ
சுருங்கி விடுகின்றன
qulūbu
قُلُوبُ
உள்ளங்கள்
alladhīna lā yu'minūna
ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ளாதவர்களின்
bil-ākhirati
بِٱلْءَاخِرَةِۖ
மறுமையை
wa-idhā dhukira
وَإِذَا ذُكِرَ
பிரஸ்தாபிக்கப்பட்டால்
alladhīna min dūnihi
ٱلَّذِينَ مِن دُونِهِۦٓ
எவர்கள்/ அவனை அன்றி
idhā hum
إِذَا هُمْ
அப்போது அவர்கள்
yastabshirūna
يَسْتَبْشِرُونَ
மகிழ்ச்சி அடைகின்றனர்
அல்லாஹ்வின் பெயரை மட்டும் தனியாகக் கூறப்பட்டால், மறுமையை நம்பாத அவர்களின் உள்ளங்கள் (கோபத்தால்) சுருங்கி விடுகின்றன. அவன் அல்லாதவை(களின் பெயர்)கள் கூறப் பட்டாலோ, சந்தோஷப்பட்டு (அவர்களுடைய உள்ளங்கள் விரிந்து மலர்ந்து) விடுகின்றன. ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௪௫)
Tafseer
௪௬

قُلِ اللهم فَاطِرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ عٰلِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ اَنْتَ تَحْكُمُ بَيْنَ عِبَادِكَ فِيْ مَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ ٤٦

quli
قُلِ
கூறுவீராக!
l-lahuma
ٱللَّهُمَّ
அல்லாஹ்வே!
fāṭira
فَاطِرَ
படைத்தவனே!
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை(யும்)
wal-arḍi
وَٱلْأَرْضِ
பூமியையும்
ʿālima
عَٰلِمَ
அறிந்தவனே!
l-ghaybi
ٱلْغَيْبِ
மறைவானதை(யும்)
wal-shahādati
وَٱلشَّهَٰدَةِ
வெளிப்படை யானதையும்
anta
أَنتَ
நீதான்
taḥkumu
تَحْكُمُ
தீர்ப்பளிப்பாய்
bayna
بَيْنَ
மத்தியில்
ʿibādika
عِبَادِكَ
உனது அடியார்களுக்கு
fī mā kānū fīhi
فِى مَا كَانُوا۟ فِيهِ
அவர்கள் தர்க்கித்து வந்த விஷயங்களில்
(நபியே! பிரார்த்தனை செய்து) நீங்கள் கூறுங்கள்: "எங்கள் இறைவனே! வானங்களையும் பூமியையும் படைத்தவனே! மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிந்தவனே! உன் அடியார்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் விஷயத்தில் அவர்களுக் கிடையில் நீ தீர்ப்பளிப்பாயாக!" ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௪௬)
Tafseer
௪௭

وَلَوْ اَنَّ لِلَّذِيْنَ ظَلَمُوْا مَا فِى الْاَرْضِ جَمِيْعًا وَّمِثْلَهٗ مَعَهٗ لَافْتَدَوْا بِهٖ مِنْ سُوْۤءِ الْعَذَابِ يَوْمَ الْقِيٰمَةِۗ وَبَدَا لَهُمْ مِّنَ اللّٰهِ مَا لَمْ يَكُوْنُوْا يَحْتَسِبُوْنَ ٤٧

walaw anna
وَلَوْ أَنَّ
இருந்தால்/நிச்சயமாக
lilladhīna ẓalamū
لِلَّذِينَ ظَلَمُوا۟
அநியாயம் செய்தவர்களுக்கு
mā fī l-arḍi
مَا فِى ٱلْأَرْضِ
பூமியில் உள்ளவை
jamīʿan
جَمِيعًا
அனைத்தும்
wamith'lahu
وَمِثْلَهُۥ
அது போல் இன்னமும்
maʿahu
مَعَهُۥ
அதனுடன்
la-if'tadaw
لَٱفْتَدَوْا۟
அவர்கள் பிணையாகக் கொடுத்து இருப்பார்கள்
bihi
بِهِۦ
அதை
min sūi
مِن سُوٓءِ
இருந்து/கெட்ட
l-ʿadhābi
ٱلْعَذَابِ
வேதனையில்
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِۚ
மறுமை நாளில்
wabadā
وَبَدَا
இன்னும் வெளிப்படும்
lahum
لَهُم
அவர்களுக்கு முன்
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
mā lam yakūnū yaḥtasibūna
مَا لَمْ يَكُونُوا۟ يَحْتَسِبُونَ
அவர்கள் எண்ணிப் பார்த்திருக்காத விஷயங்கள் எல்லாம்
(நபியே!) அநியாயம் செய்தவர்களுக்குப் பூமியிலுள்ள அனைத்துமே சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப் போன்றதொரு பாகமும் இருந்தபோதிலும் மறுமையின் கொடிய வேதனையிலிருந்து அவர்கள் தப்பித்துக்கொள்ள அவை அனைத்தையுமே பரிகாரமாகக் கொடுத்துவிடவே நிச்சயமாக அவர்கள் விரும்புவார்கள். (எனினும், அது ஆகக்கூடியதல்ல) அன்றி, அவர்கள் எதிர்பார்க்காததெல்லாம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வெளியாகும். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௪௭)
Tafseer
௪௮

وَبَدَا لَهُمْ سَيِّاٰتُ مَا كَسَبُوْا وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ ٤٨

wabadā
وَبَدَا
வெளிப்படும்
lahum
لَهُمْ
அவர்களுக்கு முன்
sayyiātu
سَيِّـَٔاتُ
தீமைகள்
mā kasabū
مَا كَسَبُوا۟
அவர்கள் செய்தவற்றின்
waḥāqa
وَحَاقَ
இன்னும் சூழ்ந்து கொள்ளும்
bihim
بِهِم
அவர்களை
mā kānū bihi yastahziūna
مَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ
அவர்கள் பரிகாசம் செய்து வந்தவை
அன்றி, அவர்கள் செய்துகொண்டிருந்த (கெட்ட) செயல்களின் தீய பலன் அவர்களுக்கு வெளிப்பட்டுவிடும். அன்றி, அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த வேதனையும் அவர்களைச் சூழ்ந்துகொள்ளும். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௪௮)
Tafseer
௪௯

فَاِذَا مَسَّ الْاِنْسَانَ ضُرٌّ دَعَانَاۖ ثُمَّ اِذَا خَوَّلْنٰهُ نِعْمَةً مِّنَّاۙ قَالَ اِنَّمَآ اُوْتِيْتُهٗ عَلٰى عِلْمٍ ۗبَلْ هِيَ فِتْنَةٌ وَّلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ ٤٩

fa-idhā massa
فَإِذَا مَسَّ
ஏற்பட்டால்
l-insāna
ٱلْإِنسَٰنَ
மனிதனுக்கு
ḍurrun
ضُرٌّ
ஒரு தீங்கு
daʿānā
دَعَانَا
நம்மிடம் பிரார்த்திக்கின்றான்
thumma idhā khawwalnāhu
ثُمَّ إِذَا خَوَّلْنَٰهُ
பிறகு நாம் அவனுக்கு வழங்கினால்
niʿ'matan
نِعْمَةً
ஓர்அருட்கொடையை
minnā
مِّنَّا
நம்மிடமிருந்து
qāla
قَالَ
அவன் கூறுகிறான்
innamā ūtītuhu
إِنَّمَآ أُوتِيتُهُۥ
இது எனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம்
ʿalā ʿil'min
عَلَىٰ عِلْمٍۭۚ
அறிந்ததினால்தான்
bal hiya
بَلْ هِىَ
மாறாக, அது
fit'natun
فِتْنَةٌ
ஒரு சோதனையாகும்
walākinna aktharahum lā yaʿlamūna
وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
என்றாலும்/அவர்களில் அதிகமானவர்கள்/அறியமாட்டார்கள்
மனிதனை யாதேனும் தீங்கு அணுகும் சமயத்தில், (அதனை நீக்கும்படி) நம்மிடமே அவன் பிரார்த்தனை செய்கின்றான். (அதனை நீக்கி) அவனுக்கு நாம் யாதொரு அருள் புரிந்தாலோ, "தான் அதனை அடைந்ததெல்லாம் தன்னுடைய அறிவின் சாமர்த்தியத்தால்தான்" என்று கூறுகின்றான். (அது சரி) அல்ல; அதுவும் (அவர்களுக்கு) ஒரு சோதனையாகும். ஆயினும், அவர்களில் அனேகர் இதனை அறிந்து கொள்வதில்லை. ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௪௯)
Tafseer
௫௦

قَدْ قَالَهَا الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ فَمَآ اَغْنٰى عَنْهُمْ مَّا كَانُوْا يَكْسِبُوْنَ ٥٠

qad qālahā
قَدْ قَالَهَا
திட்டமாக இதைச் சொல்லி இருக்கின்றார்கள்
alladhīna min qablihim
ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ
இவர்களுக்கு முன்னுள்ளவர்களும்
famā aghnā
فَمَآ أَغْنَىٰ
தடுக்கவில்லை
ʿanhum
عَنْهُم
அவர்களை விட்டும்
mā kānū yaksibūna
مَّا كَانُوا۟ يَكْسِبُونَ
அவர்கள் செய்து வந்தவை
இவர்களுக்கு முன்னிருந்தவர்களும், இவ்வாறுதான் கூறிக்கொண்டு இருந்தார்கள். எனினும், அவர்கள் சம்பாதித்ததில் ஒன்றுமே அவர்களுக்குப் பயனளிக்காமல் போய்விட்டது. ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௫௦)
Tafseer