ثُمَّ اِنَّكُمْ يَوْمَ الْقِيٰمَةِ عِنْدَ رَبِّكُمْ تَخْتَصِمُوْنَ ࣖ ۔ ٣١
- thumma
- ثُمَّ
- பிறகு
- innakum
- إِنَّكُمْ
- நிச்சயமாக நீங்கள்
- yawma l-qiyāmati
- يَوْمَ ٱلْقِيَٰمَةِ
- மறுமை நாளில்
- ʿinda rabbikum
- عِندَ رَبِّكُمْ
- உங்கள் இறைவனிடம்
- takhtaṣimūna
- تَخْتَصِمُونَ
- தர்க்கித்துக் கொள்வீர்கள்
பின்னர், மறுமையில் நீங்கள் அனைவரும் உங்கள் இறைவனிடத்தில் நிச்சயமாக (கொண்டுவரப்பட்டு) நீங்கள் (நீதத்தைக் கோரி உங்களுக்குள்) தர்க்கித்துக் கொள்வீர்கள். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௩௧)Tafseer
۞ فَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَذَبَ عَلَى اللّٰهِ وَكَذَّبَ بِالصِّدْقِ اِذْ جَاۤءَهٗۗ اَلَيْسَ فِيْ جَهَنَّمَ مَثْوًى لِّلْكٰفِرِيْنَ ٣٢
- faman
- فَمَنْ
- யார்?
- aẓlamu
- أَظْلَمُ
- மகா அநியாயக்காரன்
- mimman kadhaba
- مِمَّن كَذَبَ
- பொய் சொல்பவனை விட
- ʿalā l-lahi
- عَلَى ٱللَّهِ
- அல்லாஹ்வின் மீது
- wakadhaba
- وَكَذَّبَ
- இன்னும் பொய்ப்பித்தான்
- bil-ṣid'qi
- بِٱلصِّدْقِ
- உண்மையை
- idh jāahu
- إِذْ جَآءَهُۥٓۚ
- அது தன்னிடம் வந்தபோது
- alaysa
- أَلَيْسَ
- இல்லையா?
- fī jahannama
- فِى جَهَنَّمَ
- நரகத்தில்
- mathwan
- مَثْوًى
- தங்குமிடம்
- lil'kāfirīna
- لِّلْكَٰفِرِينَ
- நிராகரிப்பவர்களுக்கு
அல்லாஹ்வின் மீது பொய் சொல்லி தன்னிடம் வந்த (வேதமாகிய) உண்மையைப் பொய்யாக்குபவனை விட அநியாயக்காரன் யார்? அத்தகைய நிராகரிப்பவர்கள் தங்குமிடம் நரகத்தில் அல்லவா (இருக்கின்றது)? ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௩௨)Tafseer
وَالَّذِيْ جَاۤءَ بِالصِّدْقِ وَصَدَّقَ بِهٖٓ اُولٰۤىِٕكَ هُمُ الْمُتَّقُوْنَ ٣٣
- wa-alladhī jāa
- وَٱلَّذِى جَآءَ
- வந்தவரும்
- bil-ṣid'qi
- بِٱلصِّدْقِ
- உண்மையைக் கொண்டு
- waṣaddaqa
- وَصَدَّقَ
- இன்னும் உண்மை என்று ஏற்றார்
- bihi
- بِهِۦٓۙ
- அதை
- ulāika humu
- أُو۟لَٰٓئِكَ هُمُ
- அவர்கள்தான்
- l-mutaqūna
- ٱلْمُتَّقُونَ
- இறையச்சம் உள்ளவர்கள்
உண்மையைக் கொண்டு வந்தவ(ராகிய நமது தூத)ரும், அதனை உண்மையென்றே நம்பியவரும் ஆகிய இத்தகையவர்கள் தாம் இறை அச்சமுடையவர்கள். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௩௩)Tafseer
لَهُمْ مَّا يَشَاۤءُوْنَ عِنْدَ رَبِّهِمْ ۗ ذٰلِكَ جَزٰۤؤُا الْمُحْسِنِيْنَۚ ٣٤
- lahum
- لَهُم
- அவர்களுக்கு
- mā yashāūna
- مَّا يَشَآءُونَ
- அவர்கள் நாடுகின்றதெல்லாம்
- ʿinda rabbihim
- عِندَ رَبِّهِمْۚ
- அவர்களின் இறைவனிடம்
- dhālika
- ذَٰلِكَ
- இதுதான்
- jazāu
- جَزَآءُ
- கூலியாகும்
- l-muḥ'sinīna
- ٱلْمُحْسِنِينَ
- நல்லவர்களின்
அவர்கள் விரும்பியதெல்லாம் அவர்களின் இறைவ னிடத்தில் அவர்களுக்குக் கிடைக்கும். ஏனென்றால், (இத்தகைய) நன்மை செய்தவர்களுக்கு இதுவே (தகுதியான) கூலியாகும். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௩௪)Tafseer
لِيُكَفِّرَ اللّٰهُ عَنْهُمْ اَسْوَاَ الَّذِيْ عَمِلُوْا وَيَجْزِيَهُمْ اَجْرَهُمْ بِاَحْسَنِ الَّذِيْ كَانُوْا يَعْمَلُوْنَ ٣٥
- liyukaffira
- لِيُكَفِّرَ
- அகற்றி விடுவதற்காக
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- ʿanhum
- عَنْهُمْ
- அவர்களை விட்டும்
- aswa-a
- أَسْوَأَ
- கெட்டசெயல்களை
- alladhī ʿamilū
- ٱلَّذِى عَمِلُوا۟
- அவர்கள் செய்தவற்றில்
- wayajziyahum
- وَيَجْزِيَهُمْ
- இன்னும் அவர்களுக்கு அவன் கொடுப்பதற்காக
- ajrahum
- أَجْرَهُم
- அவர்களின் கூலியை
- bi-aḥsani
- بِأَحْسَنِ
- மிக அழகிய முறையில்
- alladhī kānū yaʿmalūna
- ٱلَّذِى كَانُوا۟ يَعْمَلُونَ
- அவர்கள் செய்து வந்ததை விட
அவர்கள் செய்த குற்றங்களையும் அல்லாஹ் மன்னித்து, அவர்களுடைய கூலியை அவர்கள் செய்ததைவிட மிக அழகான விதத்தில் கொடுப்பான். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௩௫)Tafseer
اَلَيْسَ اللّٰهُ بِكَافٍ عَبْدَهٗۗ وَيُخَوِّفُوْنَكَ بِالَّذِيْنَ مِنْ دُوْنِهٖۗ وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍۚ ٣٦
- alaysa
- أَلَيْسَ
- இல்லையா?
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- bikāfin
- بِكَافٍ
- போதுமானவனாக
- ʿabdahu
- عَبْدَهُۥۖ
- தனது அடியானுக்கு
- wayukhawwifūnaka
- وَيُخَوِّفُونَكَ
- இன்னும் அவர்கள் உம்மை பயமுறுத்துகின்றனர்
- bi-alladhīna min dūnihi
- بِٱلَّذِينَ مِن دُونِهِۦۚ
- அவன் அல்லாதவர்களைக் கொண்டு
- waman yuḍ'lili l-lahu
- وَمَن يُضْلِلِ ٱللَّهُ
- அல்லாஹ் யாரை வழிகெடுத்து விடுகின்றானோ
- famā lahu
- فَمَا لَهُۥ
- அவருக்கு இல்லை
- min hādin
- مِنْ هَادٍ
- நேர்வழி காட்டுபவர் யாரும்
தன் அடியாருக்கு (வேண்டிய உதவி செய்ய) அல்லாஹ் (ஒருவனே) போதுமானவனல்லவா? (நபியே!) அவர்கள் (தங்கள் தெய்வங்களாகிய) அல்லாஹ் அல்லாதவைகளைப் பற்றி உங்களை பயமுறுத்துகின்றனர். (அதை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம்.) எவனை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகின்றானோ, அவனை நேரான வழியில் செலுத்தக்கூடியவன் ஒருவனுமில்லை. ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௩௬)Tafseer
وَمَنْ يَّهْدِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ مُّضِلٍّ ۗ اَلَيْسَ اللّٰهُ بِعَزِيْزٍ ذِى انْتِقَامٍ ٣٧
- waman
- وَمَن
- யாரை
- yahdi
- يَهْدِ
- நேர்வழி செலுத்தினானோ
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- famā lahu
- فَمَا لَهُۥ
- இல்லை/அவரை
- min muḍillin
- مِن مُّضِلٍّۗ
- வழிகெடுப்பவர் யாரும்
- alaysa
- أَلَيْسَ
- இல்லையா?
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- biʿazīzin
- بِعَزِيزٍ
- மிகைத்தவனாக
- dhī intiqāmin
- ذِى ٱنتِقَامٍ
- பழி தீர்ப்பவனாக
எவனை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறானோ அவனை, வழிகெடுத்துவிடக் கூடியவன் ஒருவனுமில்லை. அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும் பழிவாங்க ஆற்றல் உடையவனுமல்லவா? ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௩௭)Tafseer
وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ لَيَقُوْلُنَّ اللّٰهُ ۗ قُلْ اَفَرَءَيْتُمْ مَّا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اِنْ اَرَادَنِيَ اللّٰهُ بِضُرٍّ هَلْ هُنَّ كٰشِفٰتُ ضُرِّهٖٓ اَوْ اَرَادَنِيْ بِرَحْمَةٍ هَلْ هُنَّ مُمْسِكٰتُ رَحْمَتِهٖۗ قُلْ حَسْبِيَ اللّٰهُ ۗعَلَيْهِ يَتَوَكَّلُ الْمُتَوَكِّلُوْنَ ٣٨
- wala-in
- وَلَئِن
- sa-altahum
- سَأَلْتَهُم
- நீர் அவர்களிடம் கேட்டால்
- man
- مَّنْ
- யார்
- khalaqa
- خَلَقَ
- படைத்தான்
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களை(யும்)
- wal-arḍa
- وَٱلْأَرْضَ
- பூமியையும்
- layaqūlunna
- لَيَقُولُنَّ
- நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்
- l-lahu
- ٱللَّهُۚ
- அல்லாஹ்
- qul
- قُلْ
- கூறுவீராக!
- afara-aytum
- أَفَرَءَيْتُم
- நீங்கள் அறிவியுங்கள்!
- mā tadʿūna
- مَّا تَدْعُونَ
- நீங்கள் அழைப்பவைப் பற்றி
- min dūni l-lahi
- مِن دُونِ ٱللَّهِ
- அல்லாஹ்வையன்றி
- in arādaniya
- إِنْ أَرَادَنِىَ
- எனக்கு நாடினால்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- biḍurrin
- بِضُرٍّ
- ஒரு தீங்கை
- hal hunna kāshifātu
- هَلْ هُنَّ كَٰشِفَٰتُ
- அவை நீக்கக்கூடியவையா?
- ḍurrihi
- ضُرِّهِۦٓ
- அவனது தீங்கை
- aw
- أَوْ
- அல்லது
- arādanī
- أَرَادَنِى
- அவன் எனக்கு நாடினால்
- biraḥmatin
- بِرَحْمَةٍ
- ஓர் அருளை
- hal hunna mum'sikātu
- هَلْ هُنَّ مُمْسِكَٰتُ
- அவை தடுத்துவிடக் கூடியவையா?
- raḥmatihi
- رَحْمَتِهِۦۚ
- அவனது அருளை
- qul
- قُلْ
- கூறுவீராக!
- ḥasbiya l-lahu
- حَسْبِىَ ٱللَّهُۖ
- அல்லாஹ் எனக்குப் போதுமானவன்
- ʿalayhi
- عَلَيْهِ
- அவன் மீதே
- yatawakkalu
- يَتَوَكَّلُ
- நம்பிக்கை வைக்கட்டும்
- l-mutawakilūna
- ٱلْمُتَوَكِّلُونَ
- நம்பிக்கை வைப்பவர்கள்
(நபியே!) வானங்களையும் பூமியையும், படைத்தவன் யார்? என்று நீங்கள் அவர்களைக் கேட்பீராயின், "அல்லாஹ்தான்" என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள். பின்னும், (நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ் எனக்கு யாதொரு தீங்கிழைக்க நாடினால், (நீங்கள் தெய்வங்களென அழைக்கும் அல்லாஹ் அல்லாத) அவை அத்தீங்கை நீக்கிவிட முடியுமா என்பதை நீங்கள் கவனித்தீர்களா? அல்லது அவன் எனக்கு ஏதும் அருள்புரிய நாடினால், அவனுடைய அருளை இவை தடுத்துவிடுமா (என்பதையும் நீங்கள் கவனித்தீர்களா? நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ் (ஒருவனே) எனக்குப் போதுமானவன். நம்பக் கூடியவர்கள் அனைவரும் அவனையே நம்பவும்." ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௩௮)Tafseer
قُلْ يٰقَوْمِ اعْمَلُوْا عَلٰى مَكَانَتِكُمْ اِنِّيْ عَامِلٌ ۚفَسَوْفَ تَعْلَمُوْنَۙ ٣٩
- qul
- قُلْ
- கூறுவீராக!
- yāqawmi
- يَٰقَوْمِ
- என் மக்களே!
- iʿ'malū
- ٱعْمَلُوا۟
- அமல் செய்யுங்கள்!
- ʿalā makānatikum
- عَلَىٰ مَكَانَتِكُمْ
- நீங்கள் உங்கள் தகுதிக்குத் தக்கவாறு
- innī
- إِنِّى
- நிச்சயமாக நானும்
- ʿāmilun
- عَٰمِلٌۖ
- அமல் செய்கிறேன்
- fasawfa taʿlamūna
- فَسَوْفَ تَعْلَمُونَ
- நீங்கள் விரைவில் அறிவீர்கள்
(பின்னும் நபியே!) நீங்கள் கூறுங்கள்: "என்னுடைய மக்களே! நீங்கள் உங்களுடைய நிலைமையில் இருந்துகொண்டு நீங்கள் (செய்யக் கூடியதைச்) செய்து கொண்டிருங்கள். நானும், (என்னுடைய நிலையிலிருந்து கொண்டு, நான் செய்யக்கூடியதை) செய்து வருவேன். (எவருடைய செயல் குற்றம் என்பதைப்) பின்னர், நீங்கள் நிச்சயமாக அறிந்துகொள்வீர்கள்." ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௩௯)Tafseer
مَنْ يَّأْتِيْهِ عَذَابٌ يُّخْزِيْهِ وَيَحِلُّ عَلَيْهِ عَذَابٌ مُّقِيْمٌ ٤٠
- man
- مَن
- யார் ஒருவர்
- yatīhi
- يَأْتِيهِ
- அவருக்கு வரும்
- ʿadhābun
- عَذَابٌ
- வேதனை
- yukh'zīhi
- يُخْزِيهِ
- அவரை இழிவுபடுத்துகின்ற
- wayaḥillu
- وَيَحِلُّ
- இன்னும் இறங்கும்
- ʿalayhi
- عَلَيْهِ
- அவர் மீது
- ʿadhābun
- عَذَابٌ
- வேதனை
- muqīmun
- مُّقِيمٌ
- நிரந்தரமான
இழிவுபடுத்தும் வேதனை யாரை வந்தடைகின்றது? நிலையான வேதனை எவர் மீது இறங்குகின்றது? (என்பதையும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.) ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௪௦)Tafseer