Skip to content

ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் - Page: 3

Az-Zumar

(az-Zumar)

௨௧

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ اَنْزَلَ مِنَ السَّمَاۤءِ مَاۤءً فَسَلَكَهٗ يَنَابِيْعَ فِى الْاَرْضِ ثُمَّ يُخْرِجُ بِهٖ زَرْعًا مُّخْتَلِفًا اَلْوَانُهٗ ثُمَّ يَهِيْجُ فَتَرٰىهُ مُصْفَرًّا ثُمَّ يَجْعَلُهٗ حُطَامًا ۗاِنَّ فِيْ ذٰلِكَ لَذِكْرٰى لِاُولِى الْاَلْبَابِ ࣖ ٢١

alam tara
أَلَمْ تَرَ
நீர் பார்க்கவில்லையா?
anna
أَنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
anzala
أَنزَلَ
இறக்கினான்
mina l-samāi
مِنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
māan
مَآءً
மழையை
fasalakahu
فَسَلَكَهُۥ
அதை ஓடவைத்தான்
yanābīʿa
يَنَٰبِيعَ
பல ஊற்றுகளாக
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
thumma
ثُمَّ
பிறகு
yukh'riju
يُخْرِجُ
அவன் உற்பத்தி செய்கின்றான்
bihi
بِهِۦ
அதன் மூலம்
zarʿan
زَرْعًا
விளைச்சல்களை
mukh'talifan
مُّخْتَلِفًا
மாறுபட்ட(து)
alwānuhu
أَلْوَٰنُهُۥ
அதன் நிறங்கள்
thumma
ثُمَّ
பிறகு
yahīju
يَهِيجُ
அது காய்ந்து விடுகிறது
fatarāhu
فَتَرَىٰهُ
அதை நீர் பார்க்கிறீர்
muṣ'farran
مُصْفَرًّا
மஞ்சளாக
thumma
ثُمَّ
பிறகு
yajʿaluhu
يَجْعَلُهُۥ
அதை அவன் ஆக்கிவிடுகிறான்
ḥuṭāman
حُطَٰمًاۚ
காய்ந்த சருகுகளாக
inna
إِنَّ
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
இதில்
ladhik'rā
لَذِكْرَىٰ
ஓர் உபதேசம்
li-ulī l-albābi
لِأُو۟لِى ٱلْأَلْبَٰبِ
அறிவுள்ளவர்களுக்கு
(நபியே!) "நீங்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ்தான், மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்து, அதனைப் பூமியில் ஊற்றுக்களாக ஓடச் செய்கின்றான். பின்னர், அதனைக் கொண்டு பல நிறங்களையுடைய (பலவகைப்) பயிர்களை வெளிப்படுத்துகின்றான். பின்னர், அவை (கருக்கொண்டு) மஞ்சள் நிறமாக இருக்கக் காண்கின்றீர்கள். பின்னர், அதனைக் காய்ந்த சருகுகளாக ஆக்கி விடுகின்றான். நிச்சயமாக இதில் அறிவுடைய வர்களுக்கு நல்ல படிப்பினை இருக்கின்றது." ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௨௧)
Tafseer
௨௨

اَفَمَنْ شَرَحَ اللّٰهُ صَدْرَهٗ لِلْاِسْلَامِ فَهُوَ عَلٰى نُوْرٍ مِّنْ رَّبِّهٖ ۗفَوَيْلٌ لِّلْقٰسِيَةِ قُلُوْبُهُمْ مِّنْ ذِكْرِ اللّٰهِ ۗ اُولٰۤىِٕكَ فِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ ٢٢

afaman
أَفَمَن
எவர்?
sharaḥa
شَرَحَ
விரிவாக்கினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ṣadrahu
صَدْرَهُۥ
அவருடைய நெஞ்சை
lil'is'lāmi
لِلْإِسْلَٰمِ
இஸ்லாமிற்கு
fahuwa ʿalā nūrin
فَهُوَ عَلَىٰ نُورٍ
அவர்/வெளிச்சத்தில்
min rabbihi
مِّن رَّبِّهِۦۚ
தன் இறைவனின்
fawaylun
فَوَيْلٌ
நாசம் உண்டாகட்டும்
lil'qāsiyati
لِّلْقَٰسِيَةِ
இருகியவர்களுக்கு
qulūbuhum
قُلُوبُهُم
அவர்களுடைய உள்ளங்கள்
min dhik'ri
مِّن ذِكْرِ
நினைவை விட்டு
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
fī ḍalālin
فِى ضَلَٰلٍ
வழிகேட்டில்
mubīnin
مُّبِينٍ
தெளிவான
எவருடைய உள்ளத்தை, இஸ்லாமை அடைய அல்லாஹ் விசாலப்படுத்தினானோ அவர், தன் இறைவனின் பிரகாசத்தில் இருக்கின்றார். அல்லாஹ்வை ஞாபகம் செய்வதிலிருந்து விலகி, எவர்களுடைய உள்ளங்கள் கடினமாகி விட்டனவோ அவர்களுக்குக் கேடுதான். இத்தகையவர்கள், பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றனர். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௨௨)
Tafseer
௨௩

اَللّٰهُ نَزَّلَ اَحْسَنَ الْحَدِيْثِ كِتٰبًا مُّتَشَابِهًا مَّثَانِيَۙ تَقْشَعِرُّ مِنْهُ جُلُوْدُ الَّذِيْنَ يَخْشَوْنَ رَبَّهُمْ ۚ ثُمَّ تَلِيْنُ جُلُوْدُهُمْ وَقُلُوْبُهُمْ اِلٰى ذِكْرِ اللّٰهِ ۗذٰلِكَ هُدَى اللّٰهِ يَهْدِيْ بِهٖ مَنْ يَّشَاۤءُ ۗوَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ ٢٣

al-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
nazzala
نَزَّلَ
இறக்கினான்
aḥsana
أَحْسَنَ
மிக அழகிய
l-ḥadīthi
ٱلْحَدِيثِ
பேச்சை
kitāban
كِتَٰبًا
ஒரு வேதமாக
mutashābihan
مُّتَشَٰبِهًا
ஒன்றுக்கொன்று ஒப்பான
mathāniya
مَّثَانِىَ
பலமுறை ஓதப்படுகின்ற
taqshaʿirru
تَقْشَعِرُّ
சிலிர்க்கின்றன
min'hu julūdu
مِنْهُ جُلُودُ
அதனால்/தோல்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yakhshawna
يَخْشَوْنَ
பயப்படுவார்கள்
rabbahum
رَبَّهُمْ
தங்கள் இறைவனை
thumma
ثُمَّ
பிறகு
talīnu
تَلِينُ
மென்மையாகின்றன
julūduhum
جُلُودُهُمْ
அவர்களின் தோல்கள்
waqulūbuhum
وَقُلُوبُهُمْ
இன்னும் அவர்களின் உள்ளங்களும்
ilā dhik'ri
إِلَىٰ ذِكْرِ
நினைவின் பக்கம்
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
dhālika
ذَٰلِكَ
இதுதான்
hudā
هُدَى
நேர்வழியாகும்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
yahdī
يَهْدِى
நேர்வழி செலுத்துகின்றான்
bihi
بِهِۦ
இதன்மூலம்
man yashāu
مَن يَشَآءُۚ
தான் நாடியவர்களை
waman
وَمَن
எவரை
yuḍ'lili
يُضْلِلِ
வழிகெடுக்கின்றானோ
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
famā lahu
فَمَا لَهُۥ
அவருக்கு இல்லை
min hādin
مِنْ هَادٍ
நேர்வழி காட்டுபவர் யாரும்
அல்லாஹ் அழகான விஷயங்களையே (இந்த) வேதத்தில் இறக்கி இருக்கின்றான். (இதிலுள்ள வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடில்லாமல்) ஒன்றை மற்றொன்று ஒத்ததாக (இருப்பதுடன், மனதில் பதிவதற்காக ஒரே விஷயத்தை) மென்மேலும் (பல வகையில்) கூறப்பட்டுள்ளது. எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயப்படுகிறார்களோ, (அவர்கள் அதனைக் கேட்ட மாத்திரத்தில்) அவர்களுடைய உரோமம் சிலிர்த்து விடுகிறது. பின்னர், அவர்களுடைய தேகங்களும், உள்ளங்களும் இளகி அல்லாஹ்வைத் தியானம் செய்ய ஆரம்பிக்கின்றன. இதுவே அல்லாஹ்வினுடைய நேரான வழியாகும். அல்லாஹ் விரும்பியவர்களை இதன் மூலம் நேரான வழியில் செலுத்துகிறான். எவனை அல்லாஹ் தவறான வழியில் விட்டுவிட்டானோ அவனை, நேரான வழியில் செலுத்தக்கூடியவன் ஒருவனுமில்லை. ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௨௩)
Tafseer
௨௪

اَفَمَنْ يَّتَّقِيْ بِوَجْهِهٖ سُوْۤءَ الْعَذَابِ يَوْمَ الْقِيٰمَةِ ۗوَقِيْلَ لِلظّٰلِمِيْنَ ذُوْقُوْا مَا كُنْتُمْ تَكْسِبُوْنَ ٢٤

afaman
أَفَمَن
?/எவர்
yattaqī
يَتَّقِى
தவிர்த்துக் கொள்கிறான்
biwajhihi
بِوَجْهِهِۦ
தனது முகத்தால்
sūa
سُوٓءَ
கெட்ட
l-ʿadhābi
ٱلْعَذَابِ
வேதனையை
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِۚ
மறுமை நாளில்
waqīla
وَقِيلَ
கூறப்படும்
lilẓẓālimīna
لِلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களுக்கு
dhūqū
ذُوقُوا۟
சுவையுங்கள்!
mā kuntum taksibūna
مَا كُنتُمْ تَكْسِبُونَ
நீங்கள் செய்து வந்ததை
எவன், மறுமையின் கொடிய வேதனையைத் தன் முகத்தைக் கொண்டேனும் தடுத்துக்கொள்ளப் பிரயாசைப்படுவானோ, அவன் (சுவனவாசிக்கு சமமாவானா?) அநியாயக்காரர்களை நோக்கி நீங்கள் தேடிக் கொண்ட (தீய) செயலைச் சுவைத்துப் பாருங்கள் என்றுதான் கூறப்படும். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௨௪)
Tafseer
௨௫

كَذَّبَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ فَاَتٰىهُمُ الْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُوْنَ ٢٥

kadhaba
كَذَّبَ
பொய்ப்பித்தனர்
alladhīna min qablihim
ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ
இவர்களுக்கு முன்னர் உள்ளவர்களும்
fa-atāhumu l-ʿadhābu
فَأَتَىٰهُمُ ٱلْعَذَابُ
ஆகவே, அவர்களுக்கு வந்தது/வேதனை
min ḥaythu lā yashʿurūna
مِنْ حَيْثُ لَا يَشْعُرُونَ
அவர்கள் உணராத விதத்தில்
(இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும், (நம்முடைய வசனங்களைப்) பொய்யாக்கினார்கள். ஆதலால், (வேதனை வருமென்பதை) அவர்கள் (ஒரு சிறிதும்) உணர்ந்து கொள்ளாத விதத்தில், வேதனை அவர்களை வந்தடைந்தது. ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௨௫)
Tafseer
௨௬

فَاَذَاقَهُمُ اللّٰهُ الْخِزْيَ فِى الْحَيٰوةِ الدُّنْيَا ۚوَلَعَذَابُ الْاٰخِرَةِ اَكْبَرُ ۘ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ ٢٦

fa-adhāqahumu
فَأَذَاقَهُمُ
அவர்களுக்கு சுவைக்க வைப்பான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-khiz'ya
ٱلْخِزْىَ
கேவலத்தை
fī l-ḥayati
فِى ٱلْحَيَوٰةِ
வாழ்விலும்
l-dun'yā
ٱلدُّنْيَاۖ
இவ்வுலக
walaʿadhābu
وَلَعَذَابُ
வேதனை
l-ākhirati
ٱلْءَاخِرَةِ
மறுமையின்
akbaru
أَكْبَرُۚ
மிகப் பெரியது
law kānū yaʿlamūna
لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ
அவர்கள் அறிய வேண்டுமே!
இவ்வுலக வாழ்க்கையிலும் இழிவையே அவர்கள் சுவைக்கும்படி அல்லாஹ் செய்தான். மறுமையிலுள்ள வேதனையோ மிகப் பெரிது. (இதனை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே! ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௨௬)
Tafseer
௨௭

وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِيْ هٰذَا الْقُرْاٰنِ مِنْ كُلِّ مَثَلٍ لَّعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَۚ ٢٧

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
ḍarabnā
ضَرَبْنَا
நாம் விவரித்தோம்
lilnnāsi
لِلنَّاسِ
மக்களுக்கு
fī hādhā l-qur'āni
فِى هَٰذَا ٱلْقُرْءَانِ
இந்த குர்ஆனில்
min kulli
مِن كُلِّ
எல்லா
mathalin
مَثَلٍ
உதாரணங்களையும்
laʿallahum yatadhakkarūna
لَّعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
மனிதர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காக, இந்தக் குர்ஆனில் எல்லா உதாரணங்களையும் நாம் கூறியிருக்கிறோம். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௨௭)
Tafseer
௨௮

قُرْاٰنًا عَرَبِيًّا غَيْرَ ذِيْ عِوَجٍ لَّعَلَّهُمْ يَتَّقُوْنَ ٢٨

qur'ānan
قُرْءَانًا
குர்ஆனாக
ʿarabiyyan
عَرَبِيًّا
அரபி மொழி
ghayra
غَيْرَ
இல்லாத
dhī ʿiwajin
ذِى عِوَجٍ
குழப்பம், கோணல்
laʿallahum yattaqūna
لَّعَلَّهُمْ يَتَّقُونَ
அவர்கள் அஞ்சுவதற்காக
அன்றி, (அல்லாஹ்வுக்கு) அவர்கள் பயந்து கொள்வதற்காக கோணலற்ற இக்குர்ஆனை(த் தெளிவான) அரபி மொழியில் இறக்கி வைத்தோம். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௨௮)
Tafseer
௨௯

ضَرَبَ اللّٰهُ مَثَلًا رَّجُلًا فِيْهِ شُرَكَاۤءُ مُتَشَاكِسُوْنَ وَرَجُلًا سَلَمًا لِّرَجُلٍ هَلْ يَسْتَوِيٰنِ مَثَلًا ۗ اَلْحَمْدُ لِلّٰهِ ۗبَلْ اَكْثَرُهُمْ لَا يَعْلَمُوْنَ ٢٩

ḍaraba
ضَرَبَ
விவரிக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
mathalan
مَثَلًا
ஓர் உதாரணத்தை
rajulan
رَّجُلًا
ஒரு மனிதன்
fīhi
فِيهِ
அவன் விஷயத்தில்
shurakāu
شُرَكَآءُ
பங்குதாரர்கள்
mutashākisūna
مُتَشَٰكِسُونَ
பிணங்கிக் கொள்கின்றவர்கள்
warajulan
وَرَجُلًا
இன்னும் ஒரு மனிதர்
salaman
سَلَمًا
சரியான(வர்)
lirajulin
لِّرَجُلٍ
ஒரு மனிதருக்கு
hal yastawiyāni
هَلْ يَسْتَوِيَانِ
இந்த இரண்டு நபர்களும் சமமாவார்களா?
mathalan
مَثَلًاۚ
தன்மையால்
l-ḥamdu
ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
lillahi
لِلَّهِۚ
அல்லாஹ்விற்கே
bal
بَلْ
மாறாக
aktharuhum
أَكْثَرُهُمْ
அவர்களில் அதிகமானவர்கள்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்
அல்லாஹ் ஓர் உதாரணத்தைக் கூறுகிறான்: ஒரு மனிதன் பல எஜமான்களுக்கு (அடிமையாக) இருந்து (அவர்கள் ஒவ்வொருவரும், தனக்கே அவன் வேலை செய்யவேண்டுமென்று) இழுபறி செய்துகொள்கின்றனர். மற்றொரு மனிதன் (அடிமைதான்; ஆனால், அவன்) ஒருவனுக்கு மட்டும் சொந்தமானவன். இவ்விருவரும் சமமாவார்களா? (ஆகமாட்டார் என்பதை அறிந்து கொள்வீர்கள். இதற்காக) புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே (என்று துதி செய்வோமாக! இவ்வாறே பல தெய்வங்களை வணங்கும் ஒருவன், ஒரே அல்லாஹ்வை வணங்குபவனுக்கு சமமாக மாட்டான். எனினும்,) அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதனை கூட) அறிந்து கொள்ளவில்லை. ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௨௯)
Tafseer
௩௦

اِنَّكَ مَيِّتٌ وَّاِنَّهُمْ مَّيِّتُوْنَ ۖ ٣٠

innaka
إِنَّكَ
நிச்சயமாக நீரும்
mayyitun
مَيِّتٌ
மரணிப்பவரே!
wa-innahum
وَإِنَّهُم
இன்னும் நிச்சயமாக அவர்களும்
mayyitūna
مَّيِّتُونَ
மரணிப்பவர்கள்தான்
(நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. நிச்சயமாக அவர்களும் இறந்துவிடக் கூடியவர்கள்தாம். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௩௦)
Tafseer