Skip to content

ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் - Word by Word

Az-Zumar

(az-Zumar)

bismillaahirrahmaanirrahiim

تَنْزِيْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِيْزِ الْحَكِيْمِ ١

tanzīlu
تَنزِيلُ
இறக்கப்பட்டது
l-kitābi
ٱلْكِتَٰبِ
வேதமாகும்
mina l-lahi
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்வின் புறத்தில் இருந்து
l-ʿazīzi
ٱلْعَزِيزِ
மிகைத்தவனும்
l-ḥakīmi
ٱلْحَكِيمِ
மகா ஞானவானுமான
அல்லாஹ்வினால்தான் இவ்வேதம் இறக்கப்பட்டுள்ளது. அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் (அனைவரையும் அறிந்த) ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௧)
Tafseer

اِنَّآ اَنْزَلْنَآ اِلَيْكَ الْكِتٰبَ بِالْحَقِّ فَاعْبُدِ اللّٰهَ مُخْلِصًا لَّهُ الدِّيْنَۗ ٢

innā
إِنَّآ
நிச்சயமாக நாம்
anzalnā
أَنزَلْنَآ
இறக்கினோம்
ilayka
إِلَيْكَ
உமக்கு
l-kitāba
ٱلْكِتَٰبَ
இந்த வேதத்தை
bil-ḥaqi
بِٱلْحَقِّ
உண்மையுடன்
fa-uʿ'budi
فَٱعْبُدِ
ஆகவே, வணங்குவீராக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
mukh'liṣan
مُخْلِصًا
தூய்மைப்படுத்தியவராக
lahu
لَّهُ
அவனுக்கு
l-dīna
ٱلدِّينَ
வழிபாட்டை
(நபியே!) நிச்சயமாக நாம், உங்களளவில் இவ்வேதத்தை முற்றிலும் உண்மையைக் கொண்டு இறக்கி வைத்திருக்கின்றோம். ஆகவே, முற்றிலும் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு, பரிசுத்த மனதுடன் அவனை வணங்கி வாருங்கள். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௨)
Tafseer

اَلَا لِلّٰهِ الدِّيْنُ الْخَالِصُ ۗوَالَّذِيْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖٓ اَوْلِيَاۤءَۘ مَا نَعْبُدُهُمْ اِلَّا لِيُقَرِّبُوْنَآ اِلَى اللّٰهِ زُلْفٰىۗ اِنَّ اللّٰهَ يَحْكُمُ بَيْنَهُمْ فِيْ مَا هُمْ فِيْهِ يَخْتَلِفُوْنَ ەۗ اِنَّ اللّٰهَ لَا يَهْدِيْ مَنْ هُوَ كٰذِبٌ كَفَّارٌ ٣

alā
أَلَا
அறிந்துகொள்ளுங்கள்!
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கே
l-dīnu
ٱلدِّينُ
வழிபாடுகள்
l-khāliṣu
ٱلْخَالِصُۚ
பரிசுத்தமான(து)
wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
ittakhadhū
ٱتَّخَذُوا۟
எடுத்துக் கொண்டார்கள்
min dūnihi
مِن دُونِهِۦٓ
அவனையன்றி
awliyāa
أَوْلِيَآءَ
தெய்வங்களை
مَا
நாங்கள்வணங்குவதில்லை
naʿbuduhum
نَعْبُدُهُمْ
நாங்கள்வணங்குவதில்லை அவர்களை
illā
إِلَّا
தவிர
liyuqarribūnā
لِيُقَرِّبُونَآ
அவர்கள் எங்களை நெருக்கமாக்குவதற்காக
ilā l-lahi
إِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கம்
zul'fā
زُلْفَىٰٓ
அந்தஸ்தால்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
yaḥkumu
يَحْكُمُ
தீர்ப்பளிப்பான்
baynahum
بَيْنَهُمْ
அவர்களுக்கு மத்தியில்
fī mā hum fīhi
فِى مَا هُمْ فِيهِ
அவர்கள் தர்க்கிப்பவற்றில்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
lā yahdī
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
man
مَنْ
எவர்
huwa
هُوَ
அவர்
kādhibun
كَٰذِبٌ
பொய்யர்களை
kaffārun
كَفَّارٌ
நிராகரிப்பாளர்களை
பரிசுத்தமான வழிபாடு அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எவர்கள் அல்லாஹ் அல்லாதவைகளை, தங்களுக்குப் பாதுகாவலாக எடுத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள், "அத்தெய்வங்கள் எங்களை அல்லாஹ்வுக்கு மிக்க சமீபமாக்கி வைக்கும் என்பதற்காகவேயன்றி நாம் இவைகளை வணங்கவில்லை" (என்று கூறுகின்றனர்). அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் இவ்விஷயத்தைப் பற்றி, அல்லாஹ் (மறுமையில்) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான். நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) பொய்யர்களையும், (மனமுரண்டாக) நிராகரிப்பவர்களையும் நேரான வழியில் செலுத்துவதில்லை. ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௩)
Tafseer

لَوْ اَرَادَ اللّٰهُ اَنْ يَّتَّخِذَ وَلَدًا لَّاصْطَفٰى مِمَّا يَخْلُقُ مَا يَشَاۤءُ ۙ سُبْحٰنَهٗ ۗهُوَ اللّٰهُ الْوَاحِدُ الْقَهَّارُ ٤

law arāda
لَّوْ أَرَادَ
நாடினால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
an yattakhidha
أَن يَتَّخِذَ
எடுத்துக்கொள்ள
waladan
وَلَدًا
ஒரு குழந்தையை
la-iṣ'ṭafā
لَّٱصْطَفَىٰ
தேர்ந்தெடுத்து இருப்பான்
mimmā yakhluqu
مِمَّا يَخْلُقُ
தான் படைத்தவற்றில்
mā yashāu
مَا يَشَآءُۚ
தான் நாடுவதை
sub'ḥānahu
سُبْحَٰنَهُۥۖ
அவன் மகா பரிசுத்தமானவன்
huwa
هُوَ
அவன்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-wāḥidu
ٱلْوَٰحِدُ
ஒருவன்
l-qahāru
ٱلْقَهَّارُ
அடக்கி ஆளுபவன்
அல்லாஹ் சந்ததி எடுத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்பி இருந்தால், அவன் படைத்தவைகளில் அவன் விரும்பிய (மேலான)வைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பான். (எனினும், இத்தகைய விஷயங்களிலிருந்து) அவன் மிக பரிசுத்தமானவன். அல்லாஹ் ஒரே ஒருவன்தான். (அவனுக்குச் சந்ததி இல்லை. அனைவரையும்) அவன் அடக்கி ஆளுகிறான். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௪)
Tafseer

خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّۚ يُكَوِّرُ الَّيْلَ عَلَى النَّهَارِ وَيُكَوِّرُ النَّهَارَ عَلَى الَّيْلِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَۗ كُلٌّ يَّجْرِيْ لِاَجَلٍ مُّسَمًّىۗ اَلَا هُوَ الْعَزِيْزُ الْغَفَّارُ ٥

khalaqa
خَلَقَ
அவன் படைத்தான்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை
wal-arḍa
وَٱلْأَرْضَ
பூமியை
bil-ḥaqi
بِٱلْحَقِّۖ
உண்மையான காரணத்திற்காக
yukawwiru
يُكَوِّرُ
சுருட்டுகின்றான்
al-layla
ٱلَّيْلَ
இரவை
ʿalā l-nahāri
عَلَى ٱلنَّهَارِ
பகல் மீது
wayukawwiru
وَيُكَوِّرُ
இன்னும் சுருட்டுகின்றான்
l-nahāra
ٱلنَّهَارَ
பகலை
ʿalā al-layli
عَلَى ٱلَّيْلِۖ
இரவின் மீது
wasakhara
وَسَخَّرَ
அவன் கட்டுப்படுத்தி வைத்துள்ளான்
l-shamsa
ٱلشَّمْسَ
சூரியனை
wal-qamara
وَٱلْقَمَرَۖ
சந்திரனை
kullun
كُلٌّ
எல்லாம்
yajrī
يَجْرِى
ஓடுகின்றன
li-ajalin
لِأَجَلٍ
ஒரு தவணையை நோக்கி
musamman
مُّسَمًّىۗ
குறிப்பிட்ட
alā huwa
أَلَا هُوَ
அறிந்து கொள்ளுங்கள்/அவன்தான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
l-ghafāru
ٱلْغَفَّٰرُ
மகா மன்னிப்பாளன்
அவன், வானங்களையும் பூமியையும் உண்மையான காரணத்திற்கே படைத்திருக்கின்றான். (வீணுக்காக அல்ல.) அவனே இரவைச் சுருட்டிப் பகலை (விரிக்கிறான்.) அவனே பகலைச் சுருட்டி இரவை (விரிக்கிறான்.) சூரியனையும், சந்திரனையும் அடக்கி வைத்திருக்கின்றான். இவை ஒவ்வொன்றும், அவைகளுக்குக் (குறிப்பிட்ட எல்லைக்குள்) குறிப்பிட்ட காலப்படி நடக்கின்றன. (நபியே! நீங்கள்) அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக அவன் அனைவரையும் மிகைத்தவனும் மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௫)
Tafseer

خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ ثُمَّ جَعَلَ مِنْهَا زَوْجَهَا وَاَنْزَلَ لَكُمْ مِّنَ الْاَنْعَامِ ثَمٰنِيَةَ اَزْوَاجٍ ۗ يَخْلُقُكُمْ فِيْ بُطُوْنِ اُمَّهٰتِكُمْ خَلْقًا مِّنْۢ بَعْدِ خَلْقٍ فِيْ ظُلُمٰتٍ ثَلٰثٍۗ ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْ لَهُ الْمُلْكُۗ لَآ اِلٰهَ اِلَّا هُوَۚ فَاَنّٰى تُصْرَفُوْنَ ٦

khalaqakum
خَلَقَكُم
அவன் உங்களைப் படைத்தான்
min nafsin wāḥidatin
مِّن نَّفْسٍ وَٰحِدَةٍ
ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து
thumma jaʿala
ثُمَّ جَعَلَ
பிறகு/படைத்தான்
min'hā
مِنْهَا
அதில் இருந்து
zawjahā
زَوْجَهَا
அதன் ஜோடியை
wa-anzala
وَأَنزَلَ
இன்னும் உருவாக்கினான்
lakum
لَكُم
உங்களுக்காக
mina l-anʿāmi
مِّنَ ٱلْأَنْعَٰمِ
கால்நடைகளில்
thamāniyata
ثَمَٰنِيَةَ
எட்டு
azwājin
أَزْوَٰجٍۚ
ஜோடிகளை
yakhluqukum
يَخْلُقُكُمْ
அவன் உங்களை படைக்கின்றான்
fī buṭūni
فِى بُطُونِ
வயிற்றில்
ummahātikum
أُمَّهَٰتِكُمْ
உங்கள் தாய்மார்களின்
khalqan
خَلْقًا
ஒரு படைப்பாக
min baʿdi
مِّنۢ بَعْدِ
பின்னர்
khalqin
خَلْقٍ
ஒரு படைப்புக்கு
fī ẓulumātin
فِى ظُلُمَٰتٍ
இருள்களில்
thalāthin
ثَلَٰثٍۚ
மூன்று
dhālikumu
ذَٰلِكُمُ
அவன்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
rabbukum
رَبُّكُمْ
உங்கள் இறைவனாகிய
lahu
لَهُ
அவனுக்கே
l-mul'ku
ٱلْمُلْكُۖ
ஆட்சி அனைத்தும்
لَآ
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
illā huwa
إِلَّا هُوَۖ
அவனைத் தவிர
fa-annā
فَأَنَّىٰ
ஆகவே எவ்வாறு
tuṣ'rafūna
تُصْرَفُونَ
நீங்கள் திருப்பப்படுகிறீர்கள்
அவன் உங்கள் அனைவரையும், ஆரம்பத்தில் ஒரே மனிதரிலிருந்து படைத்தான். பின்னர், அவரிலிருந்து அவருடைய மனைவியை அமைத்தான். (அந்த இருவரிலிருந்து, உங்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்திருக்கின்றான்.) அன்றி, (உங்களுடைய நன்மைக்காகவே) எட்டு வகை கால்நடைகளை (ஜோடி ஜோடியாகப்) படைத்திருக்கின்றான். உங்கள் தாய்மார்களின் வயிற்றில், ஒன்றன்பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களை படைக்கின்றான். இந்த அல்லாஹ்வே உங்கள் இறைவன். எல்லா ஆட்சிகளும் அவனுக்கு உரியனவே. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. ஆகவே, (அவனை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகின்றீர்கள்? ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௬)
Tafseer

اِنْ تَكْفُرُوْا فَاِنَّ اللّٰهَ غَنِيٌّ عَنْكُمْ ۗوَلَا يَرْضٰى لِعِبَادِهِ الْكُفْرَۚ وَاِنْ تَشْكُرُوْا يَرْضَهُ لَكُمْۗ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰىۗ ثُمَّ اِلٰى رَبِّكُمْ مَّرْجِعُكُمْ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَۗ اِنَّهٗ عَلِيْمٌ ۢبِذَاتِ الصُّدُوْرِ ٧

in takfurū
إِن تَكْفُرُوا۟
நீங்கள் நிராகரித்தால்
fa-inna l-laha
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ghaniyyun
غَنِىٌّ
தேவையற்ற முழு நிறைவானவன்
ʿankum
عَنكُمْۖ
உங்களை விட்டு
walā yarḍā
وَلَا يَرْضَىٰ
அவன் விரும்ப மாட்டான்
liʿibādihi
لِعِبَادِهِ
தனது அடியார்களுக்கு
l-kuf'ra
ٱلْكُفْرَۖ
நிராகரிப்பை
wa-in tashkurū
وَإِن تَشْكُرُوا۟
நீங்கள் நன்றி செலுத்தினால்
yarḍahu
يَرْضَهُ
அதை அவன் விரும்புவான்
lakum
لَكُمْۗ
உங்களுக்கு
walā taziru
وَلَا تَزِرُ
சுமக்காது
wāziratun
وَازِرَةٌ
பாவியான ஓர் ஆன்மா
wiz'ra
وِزْرَ
பாவத்தை
ukh'rā
أُخْرَىٰۗ
இன்னொரு ஆன்மாவின்
thumma ilā rabbikum
ثُمَّ إِلَىٰ رَبِّكُم
பிறகு உங்கள் இறைவன் பக்கமே
marjiʿukum
مَّرْجِعُكُمْ
உங்கள் மீளுமிடம் இருக்கின்றது
fayunabbi-ukum
فَيُنَبِّئُكُم
அவன் உங்களுக்கு அறிவிப்பான்
bimā kuntum taʿmalūna
بِمَا كُنتُمْ تَعْمَلُونَۚ
நீங்கள் செய்து கொண்டிருந்ததை
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
ʿalīmun
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
bidhāti l-ṣudūri
بِذَاتِ ٱلصُّدُورِ
நெஞ்சங்களில் உள்ளதை
அவனை நீங்கள் நிராகரித்துவிட்டபோதிலும் (அவனுக்கு நஷ்டமில்லை. ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய தேவையற்றவனாக இருக்கின்றான். எனினும், தன் அடியார்கள் (தன்னை) நிராகரிப்பதை அவன் விரும்புவதே இல்லை. நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாயின், உங்களைப் பற்றி அவன் திருப்தியடைவான். ஒருவனின் (பாவச்) சுமையை மற்றொருவன் சுமப்பதில்லை. இனி நீங்கள் செல்ல வேண்டியது உங்கள் இறைவனிடம்தான். அச்சமயம் நீங்கள் செய்து கொண்டிருந் தவைகளை அவன் உங்களுக்கு அறிவிப்பான். உள்ளங்களில் உள்ளவைகளையும் நிச்சயமாக அவன் நன்கறிகின்றான். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௭)
Tafseer

وَاِذَا مَسَّ الْاِنْسَانَ ضُرٌّ دَعَا رَبَّهٗ مُنِيْبًا اِلَيْهِ ثُمَّ اِذَا خَوَّلَهٗ نِعْمَةً مِّنْهُ نَسِيَ مَا كَانَ يَدْعُوْٓا اِلَيْهِ مِنْ قَبْلُ وَجَعَلَ لِلّٰهِ اَنْدَادًا لِّيُضِلَّ عَنْ سَبِيْلِهٖ ۗ قُلْ تَمَتَّعْ بِكُفْرِكَ قَلِيْلًا ۖاِنَّكَ مِنْ اَصْحٰبِ النَّارِ ٨

wa-idhā massa
وَإِذَا مَسَّ
ஏற்பட்டால்
l-insāna
ٱلْإِنسَٰنَ
மனிதனுக்கு
ḍurrun
ضُرٌّ
ஒரு தீங்கு
daʿā
دَعَا
பிரார்திக்கின்றான்
rabbahu
رَبَّهُۥ
தான் இறைவனை
munīban
مُنِيبًا
முற்றிலும் திரும்பியவனாக
ilayhi
إِلَيْهِ
அவன் பக்கம்
thumma idhā khawwalahu
ثُمَّ إِذَا خَوَّلَهُۥ
பிறகு/அவனுக்கு அவன் வழங்கினான்
niʿ'matan
نِعْمَةً
ஓர் அருளை
min'hu
مِّنْهُ
தான் புறத்திலிருந்து
nasiya
نَسِىَ
அவன் விட்டு விடுகிறான்
mā kāna yadʿū
مَا كَانَ يَدْعُوٓا۟
நான் பிரார்த்தித்து வந்ததை
ilayhi
إِلَيْهِ
அவனிடம்
min qablu
مِن قَبْلُ
இதற்கு முன்னர்
wajaʿala
وَجَعَلَ
இன்னும் ஏற்படுத்துகிறான்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
andādan
أَندَادًا
இணைகளை
liyuḍilla
لِّيُضِلَّ
வழிகெடுப்பதற்காக
ʿan sabīlihi
عَن سَبِيلِهِۦۚ
அவனுடைய பாதையை விட்டு
qul
قُلْ
கூறுவிராக
tamattaʿ
تَمَتَّعْ
நீ சுகமடைந்து கொள்
bikuf'rika qalīlan
بِكُفْرِكَ قَلِيلًاۖ
உனது நிராகரிப்பை கொண்டு/கொஞ்ச காலம்
innaka
إِنَّكَ
நிச்சயமாக நீ
min aṣḥābi l-nāri
مِنْ أَصْحَٰبِ ٱلنَّارِ
நரகவாசிகளில்
மனிதனுக்கு யாதொரு தீங்கு ஏற்படும் சமயத்தில், முற்றிலும் தன் இறைவனையே நோக்கிப் பிரார்த்தனை செய்த வண்ணமாயிருக்கின்றான். இறைவன் தன்னுடைய யாதொரு அருளை அவனுக்குப் புரியும் சமயத்தில், இதற்கு முன்னர், தான் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த அவனையே மறந்து, அவனுக்கு (பொய்யான தெய்வங்களை) இணையாக்கி மற்றவர்களையும் அவனுடைய பாதையிலிருந்து வழிகெடுக்கின்றான். (நபியே! அவனை நோக்கி,) நீங்கள் கூறுங்கள்: "நீ (இவ்வாறு இறைவனை) நிராகரித்த வண்ணமே சிறிது காலம் சுகமனுபவி. (முடிவில்) நிச்சயமாக நீ நரகவாசிதான்." ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௮)
Tafseer

اَمَّنْ هُوَ قَانِتٌ اٰنَاۤءَ الَّيْلِ سَاجِدًا وَّقَاۤىِٕمًا يَّحْذَرُ الْاٰخِرَةَ وَيَرْجُوْا رَحْمَةَ رَبِّهٖۗ قُلْ هَلْ يَسْتَوِى الَّذِيْنَ يَعْلَمُوْنَ وَالَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ ۗ اِنَّمَا يَتَذَكَّرُ اُولُوا الْاَلْبَابِ ࣖ ٩

amman huwa qānitun
أَمَّنْ هُوَ قَٰنِتٌ
?/எவர்/அவர்/வணங்கக்கூடியவர்
ānāa al-layli
ءَانَآءَ ٱلَّيْلِ
இரவு நேரங்களில்
sājidan
سَاجِدًا
சிரம் பணிந்தவராக(வும்)
waqāiman
وَقَآئِمًا
நின்றவராகவும்
yaḥdharu
يَحْذَرُ
பயப்படுகிறார்
l-ākhirata
ٱلْءَاخِرَةَ
மறுமையை
wayarjū
وَيَرْجُوا۟
இன்னும் ஆதரவு வைக்கிறார்
raḥmata
رَحْمَةَ
அருளை
rabbihi
رَبِّهِۦۗ
தன் இறைவனின்
qul
قُلْ
கூறுவீராக!
hal yastawī
هَلْ يَسْتَوِى
சமமாவார்களா?
alladhīna yaʿlamūna
ٱلَّذِينَ يَعْلَمُونَ
அறிந்தவர்களும்
wa-alladhīna lā yaʿlamūna
وَٱلَّذِينَ لَا يَعْلَمُونَۗ
அறியாதவர்களும்
innamā yatadhakkaru
إِنَّمَا يَتَذَكَّرُ
நல்லுபதேசம் பெறுவதெல்லாம்
ulū l-albābi
أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ
அறிவுள்ளவர்கள்தான்
எவன் மறுமையை பயந்து, தன் இறைவனின் அருளை எதிர்பார்த்து, இரவு காலங்களில் நின்றவனாகவும், சிரம் பணிந்த வனாகவும் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கின்றானோ, (அவன் நம்பிக்கை கொள்ளாது நிராகரிப்பவனைப் போலாவானா? நபியே!) நீங்கள் கேளுங்கள்: கல்வி அறிவுடையவனும், கல்வி அறிவில்லாதவனும் சமமாவார்களா? (இந்தக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுபவர்கள் எல்லாம் (கல்வி) அறிவுடையவர்தாம். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௯)
Tafseer
௧௦

قُلْ يٰعِبَادِ الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوْا رَبَّكُمْ ۗلِلَّذِيْنَ اَحْسَنُوْا فِيْ هٰذِهِ الدُّنْيَا حَسَنَةٌ ۗوَاَرْضُ اللّٰهِ وَاسِعَةٌ ۗاِنَّمَا يُوَفَّى الصّٰبِرُوْنَ اَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ ١٠

qul
قُلْ
கூறுவீராக!
yāʿibādi
يَٰعِبَادِ
என் அடியார்களே!
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்கள்
ittaqū
ٱتَّقُوا۟
அஞ்சுங்கள்!
rabbakum
رَبَّكُمْۚ
உங்கள் இறைவனை
lilladhīna aḥsanū
لِلَّذِينَ أَحْسَنُوا۟
நன்மை செய்தவர்களுக்கு
fī hādhihi l-dun'yā
فِى هَٰذِهِ ٱلدُّنْيَا
இவ்வுலகில்
ḥasanatun
حَسَنَةٌۗ
நன்மை
wa-arḍu
وَأَرْضُ
இன்னும் பூமி
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
wāsiʿatun
وَٰسِعَةٌۗ
விசாலமானது
innamā yuwaffā
إِنَّمَا يُوَفَّى
வழங்கப்படுவதெல்லாம்
l-ṣābirūna
ٱلصَّٰبِرُونَ
பொறுமையாளர்களுக்கு
ajrahum
أَجْرَهُم
கூலி அவர்களது
bighayri ḥisābin
بِغَيْرِ حِسَابٍ
கணக்கின்றிதான்
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நம்பிக்கை கொண்ட (என்) அடியார்களே! உங்கள் இறைவனுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். இம்மையில் நன்மை செய்தவர்களுக்கு (மறுமையில்) நன்மைதான் கிடைக்கும். அல்லாஹ்வுடைய பூமி மிக விசாலமானது. நிச்சயமாக பொறுமையாளர்களுக்கு அவர்களுடைய கூலி கணக்கின்றியே (அதிகமாக) கொடுக்கப்படும். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௧௦)
Tafseer