Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௮௬

Qur'an Surah Sad Verse 86

ஸூரத்து ஸாத் [௩௮]: ௮௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ مَآ اَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍ وَّمَآ اَنَا۠ مِنَ الْمُتَكَلِّفِيْنَ (ص : ٣٨)

qul
قُلْ
Say
கூறுவீராக!
mā asalukum
مَآ أَسْـَٔلُكُمْ
"Not I ask of you
நான் உங்களிடம் கேட்கவில்லை
ʿalayhi
عَلَيْهِ
for it
இதற்காக
min ajrin
مِنْ أَجْرٍ
any payment
கூலி எதையும்
wamā anā
وَمَآ أَنَا۠
and not I am
இன்னும் நான் இல்லை
mina l-mutakalifīna
مِنَ ٱلْمُتَكَلِّفِينَ
of the ones who pretend
வரட்டு கௌரவம் தேடுபவர்களில்

Transliteration:

Qul maaa as'alukum 'alaihi min ajrinw wa maaa ana minal mutakallifeen (QS. Ṣād:86)

English Sahih International:

Say, [O Muhammad], "I do not ask you for it [i.e., the Quran] any payment, and I am not of the pretentious. (QS. Sad, Ayah ௮௬)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (நபியே!) நீங்கள் கூறுங்கள்: (மனிதர்களே! இதனை ஓதிக் காண்பிப்பதற்காக) நான் உங்களிடத்தில் யாதொரு கூலியையும் கேட்கவில்லை. அன்றி, (நீங்கள் சுமக்கக்கூடாத யாதொரு சுமையை) நான் உங்கள் மீது சுமத்தவும் இல்லை. இவ்வேதத்தை நான் கற்பனையாக கட்டிக் கொள்ளவும் இல்லை. (ஸூரத்து ஸாத், வசனம் ௮௬)

Jan Trust Foundation

(நபியே!) நீர் கூறும்| (“இக் குர்ஆனுக்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; அன்றியும், (இதை இட்டுக் கட்டி) சிரமம் எடுத்துக் கொண்டவனும் அல்லன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக! "இதற்காக நான் உங்களிடம் கூலி எதையும் கேட்கவில்லை. இன்னும் நான் வரட்டு கௌரவம் தேடுபவர்களில் இல்லை."