குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௬௦
Qur'an Surah Sad Verse 60
ஸூரத்து ஸாத் [௩௮]: ௬௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالُوْا بَلْ اَنْتُمْ لَا مَرْحَبًاۢ بِكُمْ ۗ اَنْتُمْ قَدَّمْتُمُوْهُ لَنَاۚ فَبِئْسَ الْقَرَارُ (ص : ٣٨)
- qālū
- قَالُوا۟
- They say
- கூறுவார்கள்
- bal
- بَلْ
- "Nay!
- மாறாக
- antum
- أَنتُمْ
- You -
- நீங்கள்தான்
- lā marḥaban
- لَا مَرْحَبًۢا
- no welcome
- (இங்கு) வசதி கிடைக்காமல் போகட்டும்
- bikum
- بِكُمْۖ
- for you
- உங்களுக்கு
- antum
- أَنتُمْ
- You
- நீங்கள்தான்
- qaddamtumūhu lanā
- قَدَّمْتُمُوهُ لَنَاۖ
- brought this upon us
- இவற்றை முற்படுத்தினீர்கள்/எங்களுக்கு
- fabi'sa l-qarāru
- فَبِئْسَ ٱلْقَرَارُ
- So wretched is the settlement"
- தங்குமிடங்களில் நரகம் மிகக் கெட்ட இடமாகும்
Transliteration:
Qaaloo bal antum laa marhabam bikum; antum qaddamtumoohu lanaa fabi'sal qaraar(QS. Ṣād:60)
English Sahih International:
They will say, "Nor you! No welcome for you. You, [our leaders], brought this upon us, and wretched is the settlement." (QS. Sad, Ayah ௬௦)
Abdul Hameed Baqavi:
அதற்கு அ(த்தலை)வர்கள் (பின் தொடர்ந்த) அவர்களை நோக்கி, "(எங்களுக்கு) அன்று; உங்களுக்குத்தான் நல்வரவில்லை. நீங்கள்தாம் எங்களுக்கு இதனைத் தேடித் தந்தீர்கள். (ஆதலால், நம்மிருவரின்) தங்குமிடம் மகா கெட்டது" என்று கூறுவார்கள். (ஸூரத்து ஸாத், வசனம் ௬௦)
Jan Trust Foundation
அதற்கு அவர்கள்| “அப்படியல்ல, நீங்களும் தான்! உங்களுக்கும் சங்கை கிடையாது! நீங்கள் தாம் எங்களுக்கு இதை (இந் நிலையை) முற்படுத்தி வைத்தீர்கள்; (ஆதலால் நம் இரு கூட்டத்தாருக்கும்) தங்குமிடம் மிகவும் கெட்டது!” என்று கூறுவர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(பாவிகள்) கூறுவார்கள்: மாறாக, நீங்கள்தான் (நாங்கள் இங்கு வருவதற்கு காரணமாக இருந்தீர்கள்). உங்களுக்கு இங்கு வசதி கிடைக்காமல் போகட்டும். நீங்கள்தான் இவற்றை எங்களுக்கு முற்படுத்தினீர்கள். (எங்கள் பாவங்களுக்கு நீங்கள்தான் காரணம்.) தங்குமிடங்களில் நரகம் மிகக் கெட்ட இடமாகும்.