Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௫௯

Qur'an Surah Sad Verse 59

ஸூரத்து ஸாத் [௩௮]: ௫௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هٰذَا فَوْجٌ مُّقْتَحِمٌ مَّعَكُمْۚ لَا مَرْحَبًا ۢبِهِمْ ۗ اِنَّهُمْ صَالُوا النَّارِ (ص : ٣٨)

hādhā
هَٰذَا
This
இது
fawjun
فَوْجٌ
(is) a company
கூட்டமாகும்
muq'taḥimun
مُّقْتَحِمٌ
bursting in
நுழையக்கூடிய
maʿakum
مَّعَكُمْۖ
with you
உங்களுடன்
lā marḥaban
لَا مَرْحَبًۢا
No welcome
(இங்கு) வசதி உண்டாகாமல் இருக்கட்டும்
bihim
بِهِمْۚ
for them
அவர்களுக்கு
innahum
إِنَّهُمْ
Indeed they
நிச்சயமாக அவர்கள்
ṣālū
صَالُوا۟
(will) burn
எரிந்து பொசுங்குவார்கள்
l-nāri
ٱلنَّارِ
(in) the Fire
நரகத்தில்

Transliteration:

Haazaa fawjum muqtahimum ma'akum laa marhabam bihim; innahum saalun Naar (QS. Ṣād:59)

English Sahih International:

[Its inhabitants will say], "This is a company bursting in with you. No welcome for them. Indeed, they will burn in the Fire." (QS. Sad, Ayah ௫௯)

Abdul Hameed Baqavi:

(இவர்களுடைய தலைவர்களை நோக்கி,) "இந்தக் கூட்டத்தாரும் உங்களுடன் (நரகத்தில்) தள்ளப்படுவார்கள்" (என்று கூறப்படும். அதற்கு அவர்கள்) "இது அவர்களுக்கு நல்வரவாகாது. இவர்கள் நரகம் செல்பவர்களே" (என்று கூறுவார்கள்). (ஸூரத்து ஸாத், வசனம் ௫௯)

Jan Trust Foundation

(நரகவாதிகளின் தலைவர்களிடம்|) “இது உங்களுடன் நெருங்கிக் கொண்டு (நரகம்) புகும் சேனையாகும்; இவர்களுக்கு அங்கு சங்கை இருக்காது; நிச்சயமாக இவர்கள் நரகில் சேர்பவர்கள்” (என்று கூறப்படும்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இது உங்களுடன் (நரகத்தில்) நுழையக்கூடிய (இன்னொரு) கூட்டமாகும் (என்று பாவிகளின் தலைவர்களுக்கு கூறப்படும். அப்போது அவர்கள் பதில் கூறுவார்கள்:) “அவர்களுக்கு (இங்கு) வசதி உண்டாகாமல் இருக்கட்டும். நிச்சயமாக அவர்கள் நரகத்தில் எரிந்து பொசுங்குவார்கள்.”