Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௩௯

Qur'an Surah Sad Verse 39

ஸூரத்து ஸாத் [௩௮]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هٰذَا عَطَاۤؤُنَا فَامْنُنْ اَوْ اَمْسِكْ بِغَيْرِ حِسَابٍ (ص : ٣٨)

hādhā
هَٰذَا
"This
இது
ʿaṭāunā
عَطَآؤُنَا
(is) Our gift
நமது அருட்கொடையாகும்
fa-um'nun
فَٱمْنُنْ
so grant
ஆகவே நீர் கொடுப்பீராக!
aw
أَوْ
or
அல்லது
amsik
أَمْسِكْ
withhold
நீரே வைத்துக்கொள்வீராக!
bighayri ḥisābin
بِغَيْرِ حِسَابٍ
without account"
விசாரணை இருக்காது

Transliteration:

Haazaa 'ataaa'unaa famnun aw amsik bighairi hisaab (QS. Ṣād:39)

English Sahih International:

[We said], "This is Our gift, so grant or withhold without account." (QS. Sad, Ayah ௩௯)

Abdul Hameed Baqavi:

பின்னர் (அவரை நோக்கி) "இவையெல்லாம் நாம் உங்களுக்கு அளித்த கொடைகளாகும். ஆகவே, (இவைகளை) நீங்கள் கணக்கின்றி (எல்லோருக்கும் கொடுத்து) நன்றி செய்யுங்கள். அல்லது (அவைகளை உங்களிடமே) நிறுத்திக் கொள்ளுங்கள். (அது உங்களது இஷ்டத்தைப் பொறுத்த விஷயம்" என்றோம்.) (ஸூரத்து ஸாத், வசனம் ௩௯)

Jan Trust Foundation

“இது நம்முடைய நன்கொடையாகும்; (நீர் விரும்பினால் இவற்றைப் பிறருக்குக்) கொடுக்கலாம், அல்லது கொடாது நிறுத்திக் கொள்ளலாம் - கேள்வி கணக்கில்லாத நிலையில் (என்று நாம் அவரிடம் கூறினோம்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இது நமது அருட்கொடையாகும். ஆகவே, (இந்த அருளை பிறருக்கு) நீர் கொடுப்பீராக! அல்லது நீரே வைத்துக்கொள்வீராக! (அது விஷயமாக உம்மிடம்) விசாரணை இருக்காது.