Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௩௬

Qur'an Surah Sad Verse 36

ஸூரத்து ஸாத் [௩௮]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَسَخَّرْنَا لَهُ الرِّيْحَ تَجْرِيْ بِاَمْرِهٖ رُخَاۤءً حَيْثُ اَصَابَۙ (ص : ٣٨)

fasakharnā
فَسَخَّرْنَا
Then We subjected
ஆகவே, நாம் கட்டுப்படுத்திக் கொடுத்தோம்
lahu l-rīḥa
لَهُ ٱلرِّيحَ
to him the wind
அவருக்கு/காற்றை
tajrī
تَجْرِى
to flow
அது வீசும்
bi-amrihi
بِأَمْرِهِۦ
by his command
அவருடைய கட்டளைக்கிணங்க
rukhāan
رُخَآءً
gently
மென்மையாக
ḥaythu aṣāba
حَيْثُ أَصَابَ
wherever he directed
அவர் விரும்புகின்ற இடத்திற்கு

Transliteration:

Fasakhkharnaa lahur reeha tajree bi amrihee rukhaaa'an haisu asaab (QS. Ṣād:36)

English Sahih International:

So We subjected to him the wind blowing by his command, gently, wherever he directed, (QS. Sad, Ayah ௩௬)

Abdul Hameed Baqavi:

ஆதலால், (அவர் விரும்பிய ஆட்சியைக் கொடுத்துக்) காற்றையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அது அவருடைய கட்டளையின்படி, அவர் செல்லக்கூடிய இடங்களுக் கெல்லாம் மிக்க சௌகரியமாகவே (அவரைச் சுமந்து) சென்று கொண்டிருந்தது. (ஸூரத்து ஸாத், வசனம் ௩௬)

Jan Trust Foundation

ஆகவே, நாம் அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம்; அது அவருடைய கட்டளைப்படி அவர் நாடிய இடங்களுக்கெல்லாம் இலகுவாக (அவரைச் சுமந்து) சென்று கொண்டிருந்தது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, அவருக்கு நாம் காற்றை கட்டுப்படுத்திக் கொடுத்தோம். அவர் விரும்புகின்ற இடத்திற்கு அவருடைய கட்டளைக்கிணங்க அது மென்மையாக வீசும்.