Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௩

Qur'an Surah Sad Verse 3

ஸூரத்து ஸாத் [௩௮]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَمْ اَهْلَكْنَا مِنْ قَبْلِهِمْ مِّنْ قَرْنٍ فَنَادَوْا وَّلَاتَ حِيْنَ مَنَاصٍ (ص : ٣٨)

kam
كَمْ
How many
எத்தனையோ
ahlaknā
أَهْلَكْنَا
We destroyed
நாம் அழித்தோம்
min qablihim
مِن قَبْلِهِم
before them before them
இவர்களுக்கு முன்னர்
min qarnin
مِّن قَرْنٍ
of a generation
பல தலைமுறை
fanādaw
فَنَادَوا۟
then they called out
அழைத்தனர்
walāta
وَّلَاتَ
when there (was) no longer
அந்த நேரம் அல்ல
ḥīna manāṣin
حِينَ مَنَاصٍ
time (for) escape
தப்பித்து ஓடுவதற்குரிய நேரம்

Transliteration:

Kam ahlaknaa min qablihim min qarnin fanaadaw wa laata heena manaas (QS. Ṣād:3)

English Sahih International:

How many a generation have We destroyed before them, and they [then] called out; but it was not a time for escape. (QS. Sad, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

இவர்களுக்கு முன்னர், (இவ்வாறு இருந்த) எத்தனையோ வகுப்பாரை நாம் அழித்திருக்கின்றோம். (வேதனை வந்த சமயத்தில்) அவர்கள் எல்லோரும் உதவி தேடிக் கூச்சலிட்டார்கள். அது (வேதனையிலிருந்து) தப்பித்துக் கொள்ளக்கூடிய நேரமாய் இருக்கவில்லை. (ஸூரத்து ஸாத், வசனம் ௩)

Jan Trust Foundation

இவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறைகளை நாம் அழித்திருக்கின்றோம்; அப்போது, அவர்கள் தப்பி ஓட வழியில்லாத நிலையில் (உதவி தேடிக்) கூக்குரலிட்டனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவர்களுக்கு முன்னர் எத்தனையோ பல தலைமுறை(மக்)களை நாம் அழித்தோம். (நம் வேதனை வந்தபோது அவர்கள் நம்மிடம் மன்றாடி பிரார்த்தித்து நம்மை) அழைத்தனர். (ஆனால், வேதனை வந்த) அந்த நேரம் தப்பித்து ஓடுவதற்குரிய நேரம் அல்ல.