Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௨௩

Qur'an Surah Sad Verse 23

ஸூரத்து ஸாத் [௩௮]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ هٰذَآ اَخِيْ ۗ لَهٗ تِسْعٌ وَّتِسْعُوْنَ نَعْجَةً وَّلِيَ نَعْجَةٌ وَّاحِدَةٌ ۗفَقَالَ اَكْفِلْنِيْهَا وَعَزَّنِيْ فِى الْخِطَابِ (ص : ٣٨)

inna
إِنَّ
Indeed
“நிச்சயமாக
hādhā
هَٰذَآ
this
இவர்
akhī
أَخِى
(is) my brother
எனது சகோதரர்
lahu
لَهُۥ
he has
அவருக்கு
tis'ʿun watis'ʿūna
تِسْعٌ وَتِسْعُونَ
ninety-nine ninety-nine
தொண்ணூற்றி ஒன்பது
naʿjatan
نَعْجَةً
ewe(s)
ஆடு(கள்)
waliya
وَلِىَ
while I have
எனக்கு உள்ளது
naʿjatun
نَعْجَةٌ
ewe
ஆடுதான்
wāḥidatun
وَٰحِدَةٌ
one
ஒரே ஓர்
faqāla
فَقَالَ
so he said
அவர் கூறுகிறார்
akfil'nīhā
أَكْفِلْنِيهَا
"Entrust her to me"
அதை(யும்) எனக்கு தருவாயாக!
waʿazzanī
وَعَزَّنِى
and he overpowered me
என்னை மிகைத்துவிட்டார்
fī l-khiṭābi
فِى ٱلْخِطَابِ
in [the] speech"
வாதத்தில்

Transliteration:

Inna haazaaa akhee lahoo tis'unw wa tis'oona na'jatanw wa liya na'jatunw waahidah; faqaala akfilneeha wa 'azzanee filkhitaab (QS. Ṣād:23)

English Sahih International:

Indeed this, my brother, has ninety-nine ewes, and I have one ewe; so he said, 'Entrust her to me,' and he overpowered me in speech." (QS. Sad, Ayah ௨௩)

Abdul Hameed Baqavi:

இவர் என்னுடைய சகோதரர். அவருக்கு தொண்ணூற்றி ஒன்பது ஆடுகள் இருக்கின்றன. என்னிடம் ஒரே ஒரு ஆடுதான் இருக்கின்றது. (அவ்வாறிருந்தும்) அவர் அதனையும் (தனக்குக்) கொடுத்துவிட வேண்டும் என்று கூறித் தர்க்க வாதத்தில் அவர் என்னை ஜெயித்துக் கொண்டார்" என்று கூறினார். (ஸூரத்து ஸாத், வசனம் ௨௩)

Jan Trust Foundation

(அவர்களில் ஒருவர் கூறினார்|) “நிச்சயமாக இவர் என்னுடைய சகோதரர்; இவரிடம் தொண்ணூற்றொன்பது ஆடுகள் இருக்கின்றன; ஆனால் என்னிடம் ஒரே ஓர் ஆடுதான் இருக்கிறது; அவர் அதனையும் தனக்குக் கொடுத்துவிட வேண்டுமெனச் சொல்லி, வாதத்தில் என்னை மிகைத்து விட்டார்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“நிச்சயமாக இவர் எனது சகோதரர். அவருக்கு தொண்ணூற்றி ஒன்பது ஆடுகள் உள்ளன. எனக்கு ஒரே ஓர் ஆடுதான் உள்ளது. ‘அதையும் எனக்கு தருவாயாக!’ என்று அவர் கூறுகிறார். அவர் வாதத்தில் என்னை மிகைத்துவிட்டார்.