குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௨௨
Qur'an Surah Sad Verse 22
ஸூரத்து ஸாத் [௩௮]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِذْ دَخَلُوْا عَلٰى دَاوٗدَ فَفَزِعَ مِنْهُمْ قَالُوْا لَا تَخَفْۚ خَصْمٰنِ بَغٰى بَعْضُنَا عَلٰى بَعْضٍ فَاحْكُمْ بَيْنَنَا بِالْحَقِّ وَلَا تُشْطِطْ وَاهْدِنَآ اِلٰى سَوَاۤءِ الصِّرَاطِ (ص : ٣٨)
- idh dakhalū
- إِذْ دَخَلُوا۟
- When they entered
- அவர்கள் நுழைந்த போது
- ʿalā dāwūda
- عَلَىٰ دَاوُۥدَ
- upon Dawood
- தாவூத் (நபி) இடம்
- fafaziʿa
- فَفَزِعَ
- and he was afraid
- அவர் திடுக்கிற்றார்
- min'hum
- مِنْهُمْۖ
- of them
- அவர்களைப் பார்த்து
- qālū
- قَالُوا۟
- they said
- அவர்கள் கூறினர்
- lā takhaf
- لَا تَخَفْۖ
- "(Do) not fear
- பயப்படாதீர்
- khaṣmāni
- خَصْمَانِ
- (We are) two litigants
- நாங்கள் இரு வழக்காளிகள்
- baghā
- بَغَىٰ
- has wronged
- அநியாயம் செய்தார்
- baʿḍunā
- بَعْضُنَا
- one of us
- எங்களில் ஒருவர்
- ʿalā baʿḍin
- عَلَىٰ بَعْضٍ
- to another
- ஒருவர் மீது
- fa-uḥ'kum
- فَٱحْكُم
- so judge
- ஆகவே தீர்ப்பளிப்பீராக!
- baynanā
- بَيْنَنَا
- between us
- எங்களுக்கு மத்தியில்
- bil-ḥaqi
- بِٱلْحَقِّ
- in truth
- நீதமாக
- walā tush'ṭiṭ
- وَلَا تُشْطِطْ
- and (do) not be unjust
- அநீதி இழைத்து விடாதீர்
- wa-ih'dinā
- وَٱهْدِنَآ
- and guide us
- எங்களுக்கு வழிகாட்டுவீராக!
- ilā sawāi
- إِلَىٰ سَوَآءِ
- to an even
- பாதையின் பக்கம்
- l-ṣirāṭi
- ٱلصِّرَٰطِ
- [the] path
- நேரான
Transliteration:
Iz dakhaloo 'alaa Daawooda fafazi'a minhum qaaloo la takhaf khasmaani baghaa ba'dunaa 'alaa ba'din fahkum bainanaaa bilhaqqi wa laa tushtit wahdinaaa ilaa Sawaaa'is Siraat(QS. Ṣād:22)
English Sahih International:
When they entered upon David and he was alarmed by them? They said, "Fear not. [We are] two adversaries, one of whom has wronged the other, so judge between us with truth and do not exceed [it] and guide us to the sound path. (QS. Sad, Ayah ௨௨)
Abdul Hameed Baqavi:
தாவூதிடம் நுழைந்தபோது, அவர் அவர்களைப் பற்றி(ப் பயந்து) திடுக்கமுற்றார். அதற்கவர்கள் "(தாவூதே!) நீங்கள் பயப்படாதீர்கள். (நாங்கள் இருவரும்) இரு கட்சிக்காரர்கள். எங்களில் ஒருவர் மற்றொருவர் மீது அநியாயம் செய்திருக்கின்றார். எங்களுக்கிடையில் நீங்கள் நீதமாகத் தீர்ப்பளியுங்கள்.அதில் தவறிழைத்து விடாதீர்கள். எங்களை நேரான வழியில் செலுத்துங்கள். (ஸூரத்து ஸாத், வசனம் ௨௨)
Jan Trust Foundation
தாவூதிடம் நுழைந்த போது அவர்; அவர்களைக் கண்டு திடுக்குற்றார்; அப்போது அவர்கள் கூறினார்கள்; “பயப்படாதீர்! நாங்களிருவரும் வழக்காளிகள்; எங்களில் ஒருவர் மற்றவர் மீது அநீதம் செய்திருக்கிறார்; எங்களிருவருக்கிடையில் நீதத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக! (அதில்) தவறிழைத்து விடாதீர்! எங்களைச் செவ்வையான பாதைக்கு நேர்வழி காட்டுவீராக!”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் தாவூத் (நபி) இடம் நுழைந்த போது அவர் அவர்களைப் பார்த்து திடுக்கிற்றார். அவர்கள் கூறினர்: பயப்படாதீர். நாங்கள் இரு வழக்காளிகள். எங்களில் ஒருவர் ஒருவர் மீது அநியாயம் செய்தார். ஆகவே! எங்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிப்பீராக! அநீதி இழைத்து விடாதீர். நேரான பாதையின் பக்கம் எங்களுக்கு வழிகாட்டுவீராக!