குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௨௦
Qur'an Surah Sad Verse 20
ஸூரத்து ஸாத் [௩௮]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَشَدَدْنَا مُلْكَهٗ وَاٰتَيْنٰهُ الْحِكْمَةَ وَفَصْلَ الْخِطَابِ (ص : ٣٨)
- washadadnā
- وَشَدَدْنَا
- And We strengthened
- பலப்படுத்தினோம்
- mul'kahu
- مُلْكَهُۥ
- his kingdom
- அவருடைய ஆட்சியை
- waātaynāhu
- وَءَاتَيْنَٰهُ
- and We gave him
- இன்னும் அவருக்கு கொடுத்தோம்
- l-ḥik'mata
- ٱلْحِكْمَةَ
- [the] wisdom
- ஞானத்தை
- wafaṣla
- وَفَصْلَ
- and decisive
- இன்னும் மிகத்தெளிவான, மிக உறுதியான
- l-khiṭābi
- ٱلْخِطَابِ
- speech
- பேச்சை(யும்)
Transliteration:
Wa shadadnaa mulkahoo wa aatainaahul Hikmata wa faslal khitaab(QS. Ṣād:20)
English Sahih International:
And We strengthened his kingdom and gave him wisdom and discernment in speech. (QS. Sad, Ayah ௨௦)
Abdul Hameed Baqavi:
அவருடைய ஆட்சியை நாம் பலப்படுத்தி, அவருக்கு ஞானத்தையும் பிரச்சனைகளைத் தீர்க்கும் சக்தியையும் கொடுத்தோம். (ஸூரத்து ஸாத், வசனம் ௨௦)
Jan Trust Foundation
மேலும், நாம் அவருடைய அரசாங்கத்தையும் வலுப்படுத்தினோம்; இன்னும் அவருக்கு ஞானத்தையும், தெளிவான சொல்லாற்றலையும் அளித்தோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவருடைய ஆட்சியை பலப்படுத்தினோம். அவருக்கு ஞானத்தையும் (-நபித்துவத்தையும் சட்ட நுணுக்கத்தையும்) மிகத்தெளிவான, மிக உறுதியான பேச்சையும் கொடுத்தோம்.