Skip to content

ஸூரா ஸூரத்து ஸாத் - Page: 8

Sad

(Ṣād)

௭௧

اِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰۤىِٕكَةِ اِنِّيْ خَالِقٌۢ بَشَرًا مِّنْ طِيْنٍ ٧١

idh qāla
إِذْ قَالَ
கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!
rabbuka
رَبُّكَ
உமது இறைவன்
lil'malāikati
لِلْمَلَٰٓئِكَةِ
வானவர்களை நோக்கி
innī
إِنِّى
நிச்சயமாக நான்
khāliqun
خَٰلِقٌۢ
படைக்கப்போகிறேன்
basharan
بَشَرًا
ஒரு மனிதரை
min ṭīnin
مِّن طِينٍ
களிமண்ணிலிருந்து
உங்களது இறைவன் மலக்குகளை நோக்கி, "நான் மனிதனைக் களிமண்ணால் படைக்கப் போகிறேன்" என்று கூறிய சமயத்தில், ([௩௮] ஸூரத்து ஸாத்: ௭௧)
Tafseer
௭௨

فَاِذَا سَوَّيْتُهٗ وَنَفَخْتُ فِيْهِ مِنْ رُّوْحِيْ فَقَعُوْا لَهٗ سٰجِدِيْنَ ٧٢

fa-idhā sawwaytuhu
فَإِذَا سَوَّيْتُهُۥ
ஆக, நான் அவரை சிறப்பாக படைத்து(விட்டால்)
wanafakhtu
وَنَفَخْتُ
இன்னும் ஊதினால்
fīhi
فِيهِ
அவரில்
min rūḥī
مِن رُّوحِى
என் உயிர்களிலிருந்து
faqaʿū
فَقَعُوا۟
விழுந்து விடுங்கள்!
lahu
لَهُۥ
அவருக்கு முன்
sājidīna
سَٰجِدِينَ
சிரம் பணிந்தவர்களாக
நான் அவரைச் செப்பனிட்டு, அவருக்குள் (நாம் படைத்த) நம்முடைய உயிரையும் புகுத்தினால் அவருக்கு நீங்கள் சிரம் பணிந்து வழிபடுங்கள் என்றும் கூறினான்." ([௩௮] ஸூரத்து ஸாத்: ௭௨)
Tafseer
௭௩

فَسَجَدَ الْمَلٰۤىِٕكَةُ كُلُّهُمْ اَجْمَعُوْنَۙ ٧٣

fasajada
فَسَجَدَ
சிரம் பணிந்தனர்
l-malāikatu
ٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்கள்
kulluhum
كُلُّهُمْ
அவர்கள் எல்லோரும்
ajmaʿūna
أَجْمَعُونَ
அனைவரும்
(அச்சமயம்) மலக்குகள் அனைவருமே சிரம் பணிந்தார்கள். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௭௩)
Tafseer
௭௪

اِلَّآ اِبْلِيْسَۗ اِسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكٰفِرِيْنَ ٧٤

illā ib'līsa
إِلَّآ إِبْلِيسَ
இப்லீஸைத் தவிர
is'takbara
ٱسْتَكْبَرَ
அவன் பெருமை அடித்தான்
wakāna
وَكَانَ
இன்னும் ஆகிவிட்டான்
mina l-kāfirīna
مِنَ ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்களில்
இப்லீஸைத் தவிர, அவன் கர்வம்கொண்டு (நம் கட்டளையை) நிராகரிப்பவனாகி விட்டான். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௭௪)
Tafseer
௭௫

قَالَ يٰٓاِبْلِيْسُ مَا مَنَعَكَ اَنْ تَسْجُدَ لِمَا خَلَقْتُ بِيَدَيَّ ۗ اَسْتَكْبَرْتَ اَمْ كُنْتَ مِنَ الْعَالِيْنَ ٧٥

qāla
قَالَ
அவன் கூறினான்
yāib'līsu
يَٰٓإِبْلِيسُ
இப்லீஸே!
mā manaʿaka
مَا مَنَعَكَ
உன்னை தடுத்தது எது?
an tasjuda
أَن تَسْجُدَ
நீ ஸஜ்தா செய்வதிலிருந்து
limā khalaqtu
لِمَا خَلَقْتُ
நான் படைத்தவருக்கு
biyadayya
بِيَدَىَّۖ
எனது இரு கரத்தால்
astakbarta
أَسْتَكْبَرْتَ
நீ பெருமையடிக்கிறாயா?
am kunta
أَمْ كُنتَ
நீ இருந்தாயா?
mina l-ʿālīna
مِنَ ٱلْعَالِينَ
பெருமையடிப்பவர்களில்தான்
அதற்கு இறைவன், "இப்லீஸை! நானே என் இரு கரங்களால் படைத்தவற்றிற்கு நீ சிரம் பணியாது உன்னைத் தடை செய்தது என்ன? நீ உன்னை மிகப் பெரியவனாக மதித்துக் கொண்டாயா? அல்லது நீ, (என்னுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியக் கூடாத) உயர்ந்த பதவியுடையவனாகி விட்டாயா?" என்றான். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௭௫)
Tafseer
௭௬

قَالَ اَنَا۠ خَيْرٌ مِّنْهُ خَلَقْتَنِيْ مِنْ نَّارٍ وَّخَلَقْتَهٗ مِنْ طِيْنٍ ٧٦

qāla
قَالَ
அவன் கூறினான்
anā
أَنَا۠
நான்
khayrun
خَيْرٌ
சிறந்தவன்
min'hu
مِّنْهُۖ
அவரை விட
khalaqtanī
خَلَقْتَنِى
என்னை படைத்தாய்
min nārin
مِن نَّارٍ
நெருப்பில் இருந்து
wakhalaqtahu
وَخَلَقْتَهُۥ
அவரை படைத்தாய்
min ṭīnin
مِن طِينٍ
களிமண்ணிலிருந்து
அதற்கவன், "அவரைவிட நானே மேலானவன். என்னை நீயே நெருப்பால் படைத்தாய்; அவரை களிமண்ணால் படைத்தாய்" என்றான். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௭௬)
Tafseer
௭௭

قَالَ فَاخْرُجْ مِنْهَا فَاِنَّكَ رَجِيْمٌۖ ٧٧

qāla
قَالَ
அவன் கூறினான்
fa-ukh'ruj
فَٱخْرُجْ
வெளியேறி விடு!
min'hā
مِنْهَا
அதில் இருந்து
fa-innaka rajīmun
فَإِنَّكَ رَجِيمٌ
நிச்சயமாக நீசபிக்கப்பட்டவன்
அதற்கு இறைவன், "அவ்வாறாயின், நீ இதிலிருந்து வெளிப்பட்டுவிடு. நிச்சயமாக நீ விரட்டப்பட்டு விட்டாய். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௭௭)
Tafseer
௭௮

وَّاِنَّ عَلَيْكَ لَعْنَتِيْٓ اِلٰى يَوْمِ الدِّيْنِ ٧٨

wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
ʿalayka
عَلَيْكَ
உம்மீது
laʿnatī
لَعْنَتِىٓ
என் சாபம்
ilā yawmi l-dīni
إِلَىٰ يَوْمِ ٱلدِّينِ
கூலி நாள் வரை
உலகம் முடியும் வரை என்னுடைய சாபம் உன்மீது நிச்சயமாக நிலைத்திருக்கும்" என்றான். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௭௮)
Tafseer
௭௯

قَالَ رَبِّ فَاَنْظِرْنِيْٓ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ ٧٩

qāla
قَالَ
அவன் கூறினான்
rabbi
رَبِّ
என் இறைவா!
fa-anẓir'nī
فَأَنظِرْنِىٓ
எனக்கு அவகாசம் அளி!
ilā yawmi
إِلَىٰ يَوْمِ
நாள் வரை
yub'ʿathūna
يُبْعَثُونَ
அவர்கள் எழுப்பப்படுகின்ற(£ர்கள்)
அதற்கவன், "என் இறைவனே! (மரணித்தவர்கள்) எழுப்பப்படும் நாள் வரையில் எனக்கு அவகாசம் கொடு" என்றான். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௭௯)
Tafseer
௮௦

قَالَ فَاِنَّكَ مِنَ الْمُنْظَرِيْنَۙ ٨٠

qāla
قَالَ
கூறினான்
fa-innaka
فَإِنَّكَ
நிச்சயமாக நீ
mina l-munẓarīna
مِنَ ٱلْمُنظَرِينَ
அவகாசமளிக்கப்பட்டவர்களில்
அதற்கு இறைவன், "நிச்சயமாக உனக்கு அவகாசம் அளிக்கப்பட்டு விட்டது. ([௩௮] ஸூரத்து ஸாத்: ௮௦)
Tafseer