௫௧
مُتَّكِـِٕيْنَ فِيْهَا يَدْعُوْنَ فِيْهَا بِفَاكِهَةٍ كَثِيْرَةٍ وَّشَرَابٍ ٥١
- muttakiīna
- مُتَّكِـِٔينَ
- அவர்கள் சாய்ந்தவர்களாக இருப்பார்கள்
- fīhā
- فِيهَا
- அவற்றில்
- yadʿūna
- يَدْعُونَ
- அழைப்பார்கள்
- fīhā
- فِيهَا
- அவற்றில்
- bifākihatin
- بِفَٰكِهَةٍ
- பழங்களை(யும்)
- kathīratin
- كَثِيرَةٍ
- அதிகமான
- washarābin
- وَشَرَابٍ
- பானங்களையும்
அதில் (உள்ள தலையணைகளின் மீது) சாய்ந்த வண்ணமாக, ஏராளமான கனிவர்க்கங்களையும் (இன்பமான) பானங்களையும், கேட்டு (வாங்கிப் புசித்து) அருந்திக்கொண்டு இருப்பார்கள். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௫௧)Tafseer
௫௨
وَعِنْدَهُمْ قٰصِرٰتُ الطَّرْفِ اَتْرَابٌ ٥٢
- waʿindahum
- وَعِندَهُمْ
- அவர்களிடம் இருப்பார்கள்
- qāṣirātu l-ṭarfi
- قَٰصِرَٰتُ ٱلطَّرْفِ
- பார்வைகளை தாழ்த்திய பெண்கள்
- atrābun
- أَتْرَابٌ
- சமவயதுடைய(வர்கள்)
அவர்களிடத்தில் கீழ்நோக்கிய பார்வைகளையுடைய ஒத்த வயதுடைய கன்னிகைகள் பலரும் இருப்பார்கள். (அவர்களை நோக்கி,) ([௩௮] ஸூரத்து ஸாத்: ௫௨)Tafseer
௫௩
هٰذَا مَا تُوْعَدُوْنَ لِيَوْمِ الْحِسَابِ ٥٣
- hādhā
- هَٰذَا
- இவை
- mā tūʿadūna
- مَا تُوعَدُونَ
- உங்களுக்கு வாக்களிக்கப்பட்டவைதான்
- liyawmi l-ḥisābi
- لِيَوْمِ ٱلْحِسَابِ
- விசாரணை நாளில்
கேள்வி கணக்குக் கேட்கும் நாளில் உங்களுக்கு(த் தருவதாக) வாக்களிக்கப்பட்டவை இவைதாம். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௫௩)Tafseer
௫௪
اِنَّ هٰذَا لَرِزْقُنَا مَا لَهٗ مِنْ نَّفَادٍۚ ٥٤
- inna hādhā
- إِنَّ هَٰذَا
- நிச்சயமாக இவை
- lariz'qunā
- لَرِزْقُنَا
- நமது கொடையாகும்
- mā lahu
- مَا لَهُۥ
- இவற்றுக்கு அறவே இல்லை
- min nafādin
- مِن نَّفَادٍ
- அழிவு, முடிவு
நிச்சயமாக இவை நம்முடைய கொடையாகும். இதற்கு அழிவே இல்லை (என்று கூறப்படும்.) ([௩௮] ஸூரத்து ஸாத்: ௫௪)Tafseer
௫௫
هٰذَا ۗوَاِنَّ لِلطّٰغِيْنَ لَشَرَّ مَاٰبٍۙ ٥٥
- hādhā wa-inna
- هَٰذَاۚ وَإِنَّ
- இவை/நிச்சயமாக
- lilṭṭāghīna
- لِلطَّٰغِينَ
- வரம்பு மீறிகளுக்கு
- lasharra maābin
- لَشَرَّ مَـَٔابٍ
- மிகக் கெட்டமீளுமிடம்தான்
(நல்லவர்களின் முடிவு) இதுவாகும். வழிகெட்டவர்களின் தங்கும் இடம் நிச்சயமாக மகா கெட்டது. ([௩௮] ஸூரத்து ஸாத்: ௫௫)Tafseer
௫௬
جَهَنَّمَۚ يَصْلَوْنَهَاۚ فَبِئْسَ الْمِهَادُ ٥٦
- jahannama
- جَهَنَّمَ
- (அதுதான்) நரகம்
- yaṣlawnahā
- يَصْلَوْنَهَا
- அதில் அவர்கள் எரிந்து பொசுங்குவார்கள்
- fabi'sa l-mihādu
- فَبِئْسَ ٱلْمِهَادُ
- விரிப்புகளில் மிகக் கெட்ட விரிப்பாகும்
அது நரகம்தான். அதில்தான் அவர்கள் புகுவார்கள். அது தங்குமிடங்களில் மகா கெட்டது. ([௩௮] ஸூரத்து ஸாத்: ௫௬)Tafseer
௫௭
هٰذَاۙ فَلْيَذُوْقُوْهُ حَمِيْمٌ وَّغَسَّاقٌۙ ٥٧
- hādhā falyadhūqūhu
- هَٰذَا فَلْيَذُوقُوهُ
- இவை, இவற்றை அவர்கள் சுவைக்கட்டும்
- ḥamīmun
- حَمِيمٌ
- கொதி நீரும்
- waghassāqun
- وَغَسَّاقٌ
- சீல் சலமும்
(அவர்களை நோக்கி,) "இதோ! கொதித்த நீரும், சீழ் ஜலமும்! அதனை நீங்கள் சுவைத்துப் பாருங்கள்" (என்று கூறப்படும்). ([௩௮] ஸூரத்து ஸாத்: ௫௭)Tafseer
௫௮
وَّاٰخَرُ مِنْ شَكْلِهٖٓ اَزْوَاجٌۗ ٥٨
- waākharu
- وَءَاخَرُ
- மற்ற
- min shaklihi
- مِن شَكْلِهِۦٓ
- இன்னும் தோற்றத்தில் பல வகையான
- azwājun
- أَزْوَٰجٌ
- வேதனைகளும்
இதைப் போன்ற (துன்பம் நிறைந்த) விதவிதமான வேறு (வேதனைகளு)முண்டு. ([௩௮] ஸூரத்து ஸாத்: ௫௮)Tafseer
௫௯
هٰذَا فَوْجٌ مُّقْتَحِمٌ مَّعَكُمْۚ لَا مَرْحَبًا ۢبِهِمْ ۗ اِنَّهُمْ صَالُوا النَّارِ ٥٩
- hādhā
- هَٰذَا
- இது
- fawjun
- فَوْجٌ
- கூட்டமாகும்
- muq'taḥimun
- مُّقْتَحِمٌ
- நுழையக்கூடிய
- maʿakum
- مَّعَكُمْۖ
- உங்களுடன்
- lā marḥaban
- لَا مَرْحَبًۢا
- (இங்கு) வசதி உண்டாகாமல் இருக்கட்டும்
- bihim
- بِهِمْۚ
- அவர்களுக்கு
- innahum
- إِنَّهُمْ
- நிச்சயமாக அவர்கள்
- ṣālū
- صَالُوا۟
- எரிந்து பொசுங்குவார்கள்
- l-nāri
- ٱلنَّارِ
- நரகத்தில்
(இவர்களுடைய தலைவர்களை நோக்கி,) "இந்தக் கூட்டத்தாரும் உங்களுடன் (நரகத்தில்) தள்ளப்படுவார்கள்" (என்று கூறப்படும். அதற்கு அவர்கள்) "இது அவர்களுக்கு நல்வரவாகாது. இவர்கள் நரகம் செல்பவர்களே" (என்று கூறுவார்கள்). ([௩௮] ஸூரத்து ஸாத்: ௫௯)Tafseer
௬௦
قَالُوْا بَلْ اَنْتُمْ لَا مَرْحَبًاۢ بِكُمْ ۗ اَنْتُمْ قَدَّمْتُمُوْهُ لَنَاۚ فَبِئْسَ الْقَرَارُ ٦٠
- qālū
- قَالُوا۟
- கூறுவார்கள்
- bal
- بَلْ
- மாறாக
- antum
- أَنتُمْ
- நீங்கள்தான்
- lā marḥaban
- لَا مَرْحَبًۢا
- (இங்கு) வசதி கிடைக்காமல் போகட்டும்
- bikum
- بِكُمْۖ
- உங்களுக்கு
- antum
- أَنتُمْ
- நீங்கள்தான்
- qaddamtumūhu lanā
- قَدَّمْتُمُوهُ لَنَاۖ
- இவற்றை முற்படுத்தினீர்கள்/எங்களுக்கு
- fabi'sa l-qarāru
- فَبِئْسَ ٱلْقَرَارُ
- தங்குமிடங்களில் நரகம் மிகக் கெட்ட இடமாகும்
அதற்கு அ(த்தலை)வர்கள் (பின் தொடர்ந்த) அவர்களை நோக்கி, "(எங்களுக்கு) அன்று; உங்களுக்குத்தான் நல்வரவில்லை. நீங்கள்தாம் எங்களுக்கு இதனைத் தேடித் தந்தீர்கள். (ஆதலால், நம்மிருவரின்) தங்குமிடம் மகா கெட்டது" என்று கூறுவார்கள். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௬௦)Tafseer