Skip to content

ஸூரா ஸூரத்து ஸாத் - Page: 5

Sad

(Ṣād)

௪௧

وَاذْكُرْ عَبْدَنَآ اَيُّوْبَۘ اِذْ نَادٰى رَبَّهٗٓ اَنِّيْ مَسَّنِيَ الشَّيْطٰنُ بِنُصْبٍ وَّعَذَابٍۗ ٤١

wa-udh'kur
وَٱذْكُرْ
நினைவு கூர்வீராக
ʿabdanā
عَبْدَنَآ
நமது அடியார்
ayyūba
أَيُّوبَ
அய்யூபை
idh nādā
إِذْ نَادَىٰ
அவர் அழைத்தபோது
rabbahu
رَبَّهُۥٓ
தன் இறைவனை
annī
أَنِّى
நிச்சயமாக நான்
massaniya
مَسَّنِىَ
எனக்கு ஏற்படுத்தி விட்டான்
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
binuṣ'bin
بِنُصْبٍ
களைப்பையும்
waʿadhābin
وَعَذَابٍ
வலியையும்
(நபியே!) நமது அடியார் அய்யூபை நினைத்துப் பாருங்கள். அவர் தன் இறைவனிடம் பிரார்த்தனை செய்தபொழுது "நிச்சயமாக எனக்கு ஷைத்தான் துன்பத்தையும் வேதனையையும் கொடுத்து விட்டான்" (என்று கூறினார்.) ([௩௮] ஸூரத்து ஸாத்: ௪௧)
Tafseer
௪௨

اُرْكُضْ بِرِجْلِكَۚ هٰذَا مُغْتَسَلٌۢ بَارِدٌ وَّشَرَابٌ ٤٢

ur'kuḍ
ٱرْكُضْ
அடிப்பீராக!
birij'lika
بِرِجْلِكَۖ
உமது காலால்
hādhā
هَٰذَا
இது
mugh'tasalun
مُغْتَسَلٌۢ
குளிக்கின்ற நீராகும்
bāridun
بَارِدٌ
குளிர்ந்த(து)
washarābun
وَشَرَابٌ
இன்னும் குடிக்கின்ற நீராகும்
(அதற்கு நாம்) "உங்களுடைய காலை(ப் பூமியில்) தட்டுங்கள்" (என்று கூறினோம். அவர் தட்டவே ஓர் ஊற்று உதித் தோடியது. அவரை நோக்கி) "இதோ நீங்கள் குளிப்பதற்கான குளிர்ந்த நீர். (இதுவே உங்களது) பானமுமாகும்" என்று கூறினோம். (அதனால் அவருடைய நோய்கள் குணமாகி விட்டன.) ([௩௮] ஸூரத்து ஸாத்: ௪௨)
Tafseer
௪௩

وَوَهَبْنَا لَهٗٓ اَهْلَهٗ وَمِثْلَهُمْ مَّعَهُمْ رَحْمَةً مِّنَّا وَذِكْرٰى لِاُولِى الْاَلْبَابِ ٤٣

wawahabnā
وَوَهَبْنَا
நாம் கொடுத்தோம்
lahu
لَهُۥٓ
அவருக்கு
ahlahu
أَهْلَهُۥ
அவருடைய குடும்பத்தாரை(யும்)
wamith'lahum
وَمِثْلَهُم
அவர்கள் போன்றவர்களையும்
maʿahum
مَّعَهُمْ
அவர்களுடன்
raḥmatan
رَحْمَةً
கருணையாகவும்
minnā
مِّنَّا
நம் புறத்தில் இருந்து
wadhik'rā
وَذِكْرَىٰ
இன்னும் ஓர் உபதேசமாக
li-ulī l-albābi
لِأُو۟لِى ٱلْأَلْبَٰبِ
அறிவுள்ளவர்களுக்கு
பின்னர், நம்முடைய அருளாகவும் அறிவுடையவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவும் நாம் அவருக்கு(ப் பிரிந்திருந்த) அவருடைய குடும்பத்தாரையும் அதைப் போன்றதையும் கொடுத்து அருள்புரிந்தோம். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௪௩)
Tafseer
௪௪

وَخُذْ بِيَدِكَ ضِغْثًا فَاضْرِبْ بِّهٖ وَلَا تَحْنَثْ ۗاِنَّا وَجَدْنٰهُ صَابِرًا ۗنِعْمَ الْعَبْدُ ۗاِنَّهٗٓ اَوَّابٌ ٤٤

wakhudh
وَخُذْ
இன்னும் எடுப்பீராக
biyadika
بِيَدِكَ
உமது கரத்தால்
ḍigh'than
ضِغْثًا
ஒரு பிடி புல்லை
fa-iḍ'rib
فَٱضْرِب
அடிப்பீராக!
bihi
بِّهِۦ
அதன்மூலம்
walā taḥnath
وَلَا تَحْنَثْۗ
நீர் சத்தியத்தை முறிக்காதீர்!
innā
إِنَّا
நிச்சயமாக நாம்
wajadnāhu
وَجَدْنَٰهُ
அவரைக் கண்டோம்
ṣābiran
صَابِرًاۚ
பொறுமையாளராக
niʿ'ma l-ʿabdu
نِّعْمَ ٱلْعَبْدُۖ
அவர் சிறந்த அடியார்
innahu
إِنَّهُۥٓ
நிச்சயமாக அவர்
awwābun
أَوَّابٌ
அல்லாஹ்வின் பக்கமே திரும்பியவர்
"ஒரு பிடி (புல்) கத்தையை எடுத்து, அதனைக் கொண்டு (உங்களது மனைவியை) அடியுங்கள். நீங்கள் உங்களுடைய சத்தியத்தை முறிக்க வேண்டியதில்லை" என்று கூறினோம். நிச்சயமாக நாம், அவரை மிக்க பொறுமை உடையவராகவே கண்டோம். அவர் மிக்க நல்லடியார். நிச்சயமாக அவர் (ஒவ்வொரு விஷயத்திலும் நம்மை) நோக்கினவராகவே இருந்தார். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௪௪)
Tafseer
௪௫

وَاذْكُرْ عِبٰدَنَآ اِبْرٰهِيْمَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ اُولِى الْاَيْدِيْ وَالْاَبْصَارِ ٤٥

wa-udh'kur
وَٱذْكُرْ
நினைவு கூர்வீராக
ʿibādanā
عِبَٰدَنَآ
நமது அடியார்களான
ib'rāhīma
إِبْرَٰهِيمَ
இப்ராஹீம்
wa-is'ḥāqa
وَإِسْحَٰقَ
இன்னும் இஸ்ஹாக்
wayaʿqūba
وَيَعْقُوبَ
யஃகூப்
ulī l-aydī
أُو۟لِى ٱلْأَيْدِى
பலமும் உடையவர்களான
wal-abṣāri
وَٱلْأَبْصَٰرِ
அகப்பார்வையும்
(நபியே!) நமது அடியார்கள் இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூபையும் நினைத்துப் பாருங்கள். இவர்கள் கொடையாளி களாகவும், அகப்பார்வை உடையவர்களாகவும் இருந்தார்கள். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௪௫)
Tafseer
௪௬

اِنَّآ اَخْلَصْنٰهُمْ بِخَالِصَةٍ ذِكْرَى الدَّارِۚ ٤٦

innā
إِنَّآ
நிச்சயமாக நாம்
akhlaṣnāhum
أَخْلَصْنَٰهُم
அவர்களை மிகத் தூய்மையாக தேர்ந்தெடுத்தோம்
bikhāliṣatin
بِخَالِصَةٍ
சிறப்பைக் கொண்டு
dhik'rā
ذِكْرَى
உபதேசம் எனும்
l-dāri
ٱلدَّارِ
மறுமையின்
மறுமையை (மக்களுக்கு) எந்நேரமும் ஞாபகமூட்டுவதற்காக அவர்களை நாம் பிரத்யேகப்படுத்தினோம். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௪௬)
Tafseer
௪௭

وَاِنَّهُمْ عِنْدَنَا لَمِنَ الْمُصْطَفَيْنَ الْاَخْيَارِۗ ٤٧

wa-innahum
وَإِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
ʿindanā
عِندَنَا
நம்மிடம்
lamina l-muṣ'ṭafayna
لَمِنَ ٱلْمُصْطَفَيْنَ
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில்
l-akhyāri
ٱلْأَخْيَارِ
மிகச்சிறந்தவர்களாகிய
அவர்கள், நம்மிடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லடி யார்களில் உள்ளவர்களாகவே இருந்தனர். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௪௭)
Tafseer
௪௮

وَاذْكُرْ اِسْمٰعِيْلَ وَالْيَسَعَ وَذَا الْكِفْلِ ۗوَكُلٌّ مِّنَ الْاَخْيَارِۗ ٤٨

wa-udh'kur
وَٱذْكُرْ
இன்னும் நினைவு கூறுவீராக
is'māʿīla
إِسْمَٰعِيلَ
இஸ்மாயீலையும்
wal-yasaʿa
وَٱلْيَسَعَ
அல்யசஉவையும்
wadhā l-kif'li
وَذَا ٱلْكِفْلِۖ
துல்கிஃப்லையும்
wakullun
وَكُلٌّ
எல்லோரும்
mina l-akhyāri
مِّنَ ٱلْأَخْيَارِ
மிகச் சிறந்தவர்களில் உள்ளவர்கள்
(நபியே!) இஸ்மாயீல், அல்யஸவு, துல்கிஃப்லு இவர்களையும் கவனித்துப் பாருங்கள். இவர்களனைவரும் நல்லடியார்களில் உள்ளவர்கள்தாம். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௪௮)
Tafseer
௪௯

هٰذَا ذِكْرٌ ۗوَاِنَّ لِلْمُتَّقِيْنَ لَحُسْنَ مَاٰبٍۙ ٤٩

hādhā
هَٰذَا
இது
dhik'run
ذِكْرٌۚ
ஒரு நினைவூட்டலாகும்
wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
lil'muttaqīna
لِلْمُتَّقِينَ
அல்லாஹ்வை அஞ்சியவர்களுக்கு
laḥus'na
لَحُسْنَ
அழகிய
maābin
مَـَٔابٍ
மீளுமிடம்
(மேற்கூறிய) இவைகளெல்லாம் (நம்பிக்கையாளர்களுக்கு) நல்ல உதாரணங்களாகும். நிச்சயமாக (இத்தகைய) இறை அச்சமுடையவர்களுக்கு (நல்ல) இருப்பிடமுண்டு. ([௩௮] ஸூரத்து ஸாத்: ௪௯)
Tafseer
௫௦

جَنّٰتِ عَدْنٍ مُّفَتَّحَةً لَّهُمُ الْاَبْوَابُۚ ٥٠

jannāti ʿadnin
جَنَّٰتِ عَدْنٍ
அத்ன் சொர்க்கங்கள்
mufattaḥatan
مُّفَتَّحَةً
திறக்கப்பட்டிருக்கும்
lahumu
لَّهُمُ
அவர்களுக்காக
l-abwābu
ٱلْأَبْوَٰبُ
வாசல்கள்
அது நிலையான சுவனபதியில் இருக்கிறது. அதன் வாசல்கள் (எந்நேரமும்) திறக்கப்பட்டிருக்கும். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௫௦)
Tafseer