Skip to content

ஸூரா ஸூரத்து ஸாத் - Page: 4

Sad

(Ṣād)

௩௧

اِذْ عُرِضَ عَلَيْهِ بِالْعَشِيِّ الصّٰفِنٰتُ الْجِيَادُۙ ٣١

idh ʿuriḍa
إِذْ عُرِضَ
சமர்ப்பிக்கப்பட்ட போது
ʿalayhi
عَلَيْهِ
அவருக்கு முன்
bil-ʿashiyi
بِٱلْعَشِىِّ
மாலை நேரத்தில்
l-ṣāfinātu
ٱلصَّٰفِنَٰتُ
குதிரைகள்
l-jiyādu
ٱلْجِيَادُ
விரைந்து ஓடக்கூடிய, அமைதியாக நிற்கக்கூடிய
(யுத்தத்திற்காகச் சித்தப்படுத்தப்பட்டிருந்த) உயர்ந்த குதிரைகள் (ஒரு நாளன்று) மாலை நேரத்தில், அவர் முன் கொண்டு வரப்பட்டபொழுது (அதனைப் பார்த்துக் கொண்டிருந்ததனால், சூரியன் அஸ்தமித்து அவருடைய அஸர் தொழுகை தவறி விட்டது. அதற்கவர்:) ([௩௮] ஸூரத்து ஸாத்: ௩௧)
Tafseer
௩௨

فَقَالَ اِنِّيْٓ اَحْبَبْتُ حُبَّ الْخَيْرِ عَنْ ذِكْرِ رَبِّيْۚ حَتّٰى تَوَارَتْ بِالْحِجَابِۗ ٣٢

faqāla
فَقَالَ
அவர் கூறினார்
innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
aḥbabtu
أَحْبَبْتُ
பிரியம் வைத்து விட்டேன்
ḥubba
حُبَّ
பிரியத்தை
l-khayri
ٱلْخَيْرِ
செல்வத்தின்
ʿan dhik'ri
عَن ذِكْرِ
தொழுவதை விட்டு
rabbī
رَبِّى
என் இறைவனை
ḥattā
حَتَّىٰ
இறுதியாக
tawārat
تَوَارَتْ
மறைந்து விட்டது
bil-ḥijābi
بِٱلْحِجَابِ
திரையில்
"நிச்சயமாக நான் (சூரியன்) திரைக்குள் மறைந்துவிடும் வரையில், அல்லாஹ்வின் திருப்பெயரை நினைவுகூர்வதை விட்டுப் பொருளை அதிகமாக அன்பு கொண்டு விட்டேன் (என்று மனம் வருந்தி,) ([௩௮] ஸூரத்து ஸாத்: ௩௨)
Tafseer
௩௩

رُدُّوْهَا عَلَيَّ ۚفَطَفِقَ مَسْحًا ۢبِالسُّوْقِ وَالْاَعْنَاقِ ٣٣

ruddūhā
رُدُّوهَا
அவற்றை திரும்பக் கொண்டு வாருங்கள்
ʿalayya
عَلَىَّۖ
என்னிடம்
faṭafiqa
فَطَفِقَ
ஆரம்பித்தார்
masḥan
مَسْحًۢا
அவற்றைத் தடவ
bil-sūqi
بِٱلسُّوقِ
கெண்டை கால்களிலும்
wal-aʿnāqi
وَٱلْأَعْنَاقِ
கழுத்துகளிலும்
அவைகளை என்னிடம் கொண்டு வாருங்கள்" எனக் கூறி, அவைகளின் பின்னங்கால்களையும், கழுத்துக்களையும் (கையினால் நீவி) தடவிக் கொடுத்தார். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௩௩)
Tafseer
௩௪

وَلَقَدْ فَتَنَّا سُلَيْمٰنَ وَاَلْقَيْنَا عَلٰى كُرْسِيِّهٖ جَسَدًا ثُمَّ اَنَابَ ٣٤

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
fatannā
فَتَنَّا
நாம் சோதித்தோம்
sulaymāna
سُلَيْمَٰنَ
சுலைமானை
wa-alqaynā
وَأَلْقَيْنَا
போட்டோம்
ʿalā kur'siyyihi
عَلَىٰ كُرْسِيِّهِۦ
அவருடை நாற்காலியில்
jasadan
جَسَدًا
ஓர் உடலை
thumma
ثُمَّ
பிறகு
anāba
أَنَابَ
அவர் திரும்பிவிட்டார்
நிச்சயமாக நாம் ஸுலைமானை (மற்றொரு விதத்திலும்) சோதனை செய்து, அவருடைய சிம்மாசனத்தில் ஒரு முண்டத்தை எறிந்தோம். உடனே, அவர் நம்மளவில் திரும்பிவிட்டார். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௩௪)
Tafseer
௩௫

قَالَ رَبِّ اغْفِرْ لِيْ وَهَبْ لِيْ مُلْكًا لَّا يَنْۢبَغِيْ لِاَحَدٍ مِّنْۢ بَعْدِيْۚ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ ٣٥

qāla
قَالَ
அவர் கூறினார்
rabbi
رَبِّ
என் இறைவா!
igh'fir lī
ٱغْفِرْ لِى
என்னை மன்னிப்பாயாக!
wahab lī
وَهَبْ لِى
இன்னும் எனக்குத் தா
mul'kan
مُلْكًا
ஓர் ஆட்சியை
lā yanbaghī
لَّا يَنۢبَغِى
தகுதியாகாத
li-aḥadin
لِأَحَدٍ
வேறு ஒருவருக்கும்
min baʿdī
مِّنۢ بَعْدِىٓۖ
எனக்குப் பிறகு
innaka anta
إِنَّكَ أَنتَ
நிச்சயமாக நீதான்
l-wahābu
ٱلْوَهَّابُ
மகா பெரிய கொடைவள்ளல்
ஆகவே, அவர் "என் இறைவனே! என்னுடைய குற்றங்களை மன்னித்து விடு! எனக்குப் பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் ஆட்சியை எனக்கு நீ அளித்தருள் புரிவாயாக! நிச்சயமாக நீ பெரும் கொடையாளி" என்று பிரார்த்தனை செய்தார். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௩௫)
Tafseer
௩௬

فَسَخَّرْنَا لَهُ الرِّيْحَ تَجْرِيْ بِاَمْرِهٖ رُخَاۤءً حَيْثُ اَصَابَۙ ٣٦

fasakharnā
فَسَخَّرْنَا
ஆகவே, நாம் கட்டுப்படுத்திக் கொடுத்தோம்
lahu l-rīḥa
لَهُ ٱلرِّيحَ
அவருக்கு/காற்றை
tajrī
تَجْرِى
அது வீசும்
bi-amrihi
بِأَمْرِهِۦ
அவருடைய கட்டளைக்கிணங்க
rukhāan
رُخَآءً
மென்மையாக
ḥaythu aṣāba
حَيْثُ أَصَابَ
அவர் விரும்புகின்ற இடத்திற்கு
ஆதலால், (அவர் விரும்பிய ஆட்சியைக் கொடுத்துக்) காற்றையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அது அவருடைய கட்டளையின்படி, அவர் செல்லக்கூடிய இடங்களுக் கெல்லாம் மிக்க சௌகரியமாகவே (அவரைச் சுமந்து) சென்று கொண்டிருந்தது. ([௩௮] ஸூரத்து ஸாத்: ௩௬)
Tafseer
௩௭

وَالشَّيٰطِيْنَ كُلَّ بَنَّاۤءٍ وَّغَوَّاصٍۙ ٣٧

wal-shayāṭīna
وَٱلشَّيَٰطِينَ
இன்னும் ஷைத்தான்களை
kulla
كُلَّ
அனைவரையும்
bannāin
بَنَّآءٍ
கட்டிட சிற்பிகள்
waghawwāṣin
وَغَوَّاصٍ
இன்னும் முத்துக்குளிப்பவர்கள்
அன்றி, ஷைத்தான்களில் உள்ள சிற்பிகள், முத்துக் குளிப்பவர்கள் ஆகிய அனைவரையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௩௭)
Tafseer
௩௮

وَّاٰخَرِيْنَ مُقَرَّنِيْنَ فِى الْاَصْفَادِ ٣٨

waākharīna
وَءَاخَرِينَ
இன்னும் மற்றவர்களை
muqarranīna
مُقَرَّنِينَ
பிணைக்கப்பட்ட(வர்கள்)
fī l-aṣfādi
فِى ٱلْأَصْفَادِ
சங்கிலிகளில்
அன்றி, சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த வேறு மூர்க்கர்கள் பலரையும் அவருக்கு வசப்படுத்தித் தந்தோம். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௩௮)
Tafseer
௩௯

هٰذَا عَطَاۤؤُنَا فَامْنُنْ اَوْ اَمْسِكْ بِغَيْرِ حِسَابٍ ٣٩

hādhā
هَٰذَا
இது
ʿaṭāunā
عَطَآؤُنَا
நமது அருட்கொடையாகும்
fa-um'nun
فَٱمْنُنْ
ஆகவே நீர் கொடுப்பீராக!
aw
أَوْ
அல்லது
amsik
أَمْسِكْ
நீரே வைத்துக்கொள்வீராக!
bighayri ḥisābin
بِغَيْرِ حِسَابٍ
விசாரணை இருக்காது
பின்னர் (அவரை நோக்கி) "இவையெல்லாம் நாம் உங்களுக்கு அளித்த கொடைகளாகும். ஆகவே, (இவைகளை) நீங்கள் கணக்கின்றி (எல்லோருக்கும் கொடுத்து) நன்றி செய்யுங்கள். அல்லது (அவைகளை உங்களிடமே) நிறுத்திக் கொள்ளுங்கள். (அது உங்களது இஷ்டத்தைப் பொறுத்த விஷயம்" என்றோம்.) ([௩௮] ஸூரத்து ஸாத்: ௩௯)
Tafseer
௪௦

وَاِنَّ لَهٗ عِنْدَنَا لَزُلْفٰى وَحُسْنَ مَاٰبٍ ࣖ ٤٠

wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
lahu
لَهُۥ
அவருக்கு
ʿindanā
عِندَنَا
நம்மிடம் இருக்கிறது
lazul'fā
لَزُلْفَىٰ
நெருக்கமும்
waḥus'na
وَحُسْنَ
அழகிய
maābin
مَـَٔابٍ
மீளுமிடமும்
நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் மிக்க நெருங்கிய மேலான பதவியும் அழகான இருப்பிடமும் உண்டு. ([௩௮] ஸூரத்து ஸாத்: ௪௦)
Tafseer