Skip to content

ஸூரா ஸூரத்து ஸாத் - Page: 3

Sad

(Ṣād)

௨௧

وَهَلْ اَتٰىكَ نَبَؤُ الْخَصْمِۘ اِذْ تَسَوَّرُوا الْمِحْرَابَۙ ٢١

wahal atāka
وَهَلْ أَتَىٰكَ
உம்மிடம் வந்ததா?
naba-u
نَبَؤُا۟
செய்தி
l-khaṣmi
ٱلْخَصْمِ
வழக்காளிகளுடைய
idh tasawwarū
إِذْ تَسَوَّرُوا۟
அவர்கள் சுவர் ஏறி வந்த சமயத்தை நினைவு கூர்வீராக!
l-miḥ'rāba
ٱلْمِحْرَابَ
வீட்டின் முன்பக்கமாக
(நபியே!) அந்த வழக்காளிகளின் செய்தி உங்களுக்குக் கிடைத்திருக்கின்றதா? அவர்கள் (அவர் வணங்கிக் கொண்டிருந்த) மடத்து அறையின் சுவற்றைத் தாண்டி, (வந்து) ([௩௮] ஸூரத்து ஸாத்: ௨௧)
Tafseer
௨௨

اِذْ دَخَلُوْا عَلٰى دَاوٗدَ فَفَزِعَ مِنْهُمْ قَالُوْا لَا تَخَفْۚ خَصْمٰنِ بَغٰى بَعْضُنَا عَلٰى بَعْضٍ فَاحْكُمْ بَيْنَنَا بِالْحَقِّ وَلَا تُشْطِطْ وَاهْدِنَآ اِلٰى سَوَاۤءِ الصِّرَاطِ ٢٢

idh dakhalū
إِذْ دَخَلُوا۟
அவர்கள் நுழைந்த போது
ʿalā dāwūda
عَلَىٰ دَاوُۥدَ
தாவூத் (நபி) இடம்
fafaziʿa
فَفَزِعَ
அவர் திடுக்கிற்றார்
min'hum
مِنْهُمْۖ
அவர்களைப் பார்த்து
qālū
قَالُوا۟
அவர்கள் கூறினர்
lā takhaf
لَا تَخَفْۖ
பயப்படாதீர்
khaṣmāni
خَصْمَانِ
நாங்கள் இரு வழக்காளிகள்
baghā
بَغَىٰ
அநியாயம் செய்தார்
baʿḍunā
بَعْضُنَا
எங்களில் ஒருவர்
ʿalā baʿḍin
عَلَىٰ بَعْضٍ
ஒருவர் மீது
fa-uḥ'kum
فَٱحْكُم
ஆகவே தீர்ப்பளிப்பீராக!
baynanā
بَيْنَنَا
எங்களுக்கு மத்தியில்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
நீதமாக
walā tush'ṭiṭ
وَلَا تُشْطِطْ
அநீதி இழைத்து விடாதீர்
wa-ih'dinā
وَٱهْدِنَآ
எங்களுக்கு வழிகாட்டுவீராக!
ilā sawāi
إِلَىٰ سَوَآءِ
பாதையின் பக்கம்
l-ṣirāṭi
ٱلصِّرَٰطِ
நேரான
தாவூதிடம் நுழைந்தபோது, அவர் அவர்களைப் பற்றி(ப் பயந்து) திடுக்கமுற்றார். அதற்கவர்கள் "(தாவூதே!) நீங்கள் பயப்படாதீர்கள். (நாங்கள் இருவரும்) இரு கட்சிக்காரர்கள். எங்களில் ஒருவர் மற்றொருவர் மீது அநியாயம் செய்திருக்கின்றார். எங்களுக்கிடையில் நீங்கள் நீதமாகத் தீர்ப்பளியுங்கள்.அதில் தவறிழைத்து விடாதீர்கள். எங்களை நேரான வழியில் செலுத்துங்கள். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௨௨)
Tafseer
௨௩

اِنَّ هٰذَآ اَخِيْ ۗ لَهٗ تِسْعٌ وَّتِسْعُوْنَ نَعْجَةً وَّلِيَ نَعْجَةٌ وَّاحِدَةٌ ۗفَقَالَ اَكْفِلْنِيْهَا وَعَزَّنِيْ فِى الْخِطَابِ ٢٣

inna
إِنَّ
“நிச்சயமாக
hādhā
هَٰذَآ
இவர்
akhī
أَخِى
எனது சகோதரர்
lahu
لَهُۥ
அவருக்கு
tis'ʿun watis'ʿūna
تِسْعٌ وَتِسْعُونَ
தொண்ணூற்றி ஒன்பது
naʿjatan
نَعْجَةً
ஆடு(கள்)
waliya
وَلِىَ
எனக்கு உள்ளது
naʿjatun
نَعْجَةٌ
ஆடுதான்
wāḥidatun
وَٰحِدَةٌ
ஒரே ஓர்
faqāla
فَقَالَ
அவர் கூறுகிறார்
akfil'nīhā
أَكْفِلْنِيهَا
அதை(யும்) எனக்கு தருவாயாக!
waʿazzanī
وَعَزَّنِى
என்னை மிகைத்துவிட்டார்
fī l-khiṭābi
فِى ٱلْخِطَابِ
வாதத்தில்
இவர் என்னுடைய சகோதரர். அவருக்கு தொண்ணூற்றி ஒன்பது ஆடுகள் இருக்கின்றன. என்னிடம் ஒரே ஒரு ஆடுதான் இருக்கின்றது. (அவ்வாறிருந்தும்) அவர் அதனையும் (தனக்குக்) கொடுத்துவிட வேண்டும் என்று கூறித் தர்க்க வாதத்தில் அவர் என்னை ஜெயித்துக் கொண்டார்" என்று கூறினார். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௨௩)
Tafseer
௨௪

قَالَ لَقَدْ ظَلَمَكَ بِسُؤَالِ نَعْجَتِكَ اِلٰى نِعَاجِهٖۗ وَاِنَّ كَثِيْرًا مِّنَ الْخُلَطَاۤءِ لَيَبْغِيْ بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَقَلِيْلٌ مَّا هُمْۗ وَظَنَّ دَاوٗدُ اَنَّمَا فَتَنّٰهُ فَاسْتَغْفَرَ رَبَّهٗ وَخَرَّ رَاكِعًا وَّاَنَابَ ۩ ٢٤

qāla
قَالَ
கூறினார்
laqad ẓalamaka
لَقَدْ ظَلَمَكَ
அவர் உனக்கு அநீதி இழைத்துவிட்டார்
bisuāli
بِسُؤَالِ
(அவர்) கேட்டதினால்
naʿjatika
نَعْجَتِكَ
உனது ஆட்டை
ilā niʿājihi
إِلَىٰ نِعَاجِهِۦۖ
தனது ஆடுகளுடன் சேர்க்க
wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
kathīran
كَثِيرًا
அதிகமானவர்கள்
mina l-khulaṭāi
مِّنَ ٱلْخُلَطَآءِ
பங்காளிகளில்
layabghī
لَيَبْغِى
அநீதிஇழைக்கின்றனர்
baʿḍuhum
بَعْضُهُمْ
அவர்களில் சிலர்
ʿalā baʿḍin
عَلَىٰ بَعْضٍ
சிலர் மீது
illā
إِلَّا
தவிர
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்கள்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
waqalīlun mā
وَقَلِيلٌ مَّا
மிகக் குறைவானவர்களே!
hum
هُمْۗ
அவர்கள்
waẓanna
وَظَنَّ
அறிந்தார்
dāwūdu
دَاوُۥدُ
தாவூத்
annamā fatannāhu
أَنَّمَا فَتَنَّٰهُ
நாம் அவரை சோதித்தோம் என்பதை
fa-is'taghfara
فَٱسْتَغْفَرَ
ஆகவே, அவர் மன்னிப்புக் கேட்டார்
rabbahu
رَبَّهُۥ
தன் இறைவனிடம்
wakharra
وَخَرَّ
இன்னும் விழுந்தார்
rākiʿan
رَاكِعًا
சிரம் பணிந்தவராக
wa-anāba
وَأَنَابَ۩
இன்னும் அல்லாஹ்வின் பக்கம் திரும்பினார்
அதற்கு தாவூத், "உன்னுடைய ஆட்டை, அவர் தன்னுடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படி கேட்பது நிச்சயமாக அவர் உங்கள் மீது செய்யும் அநியாயமாகும். கூட்டாளிகளில் பெரும் பாலானவர்கள், ஒருவர் ஒருவரை மோசம் செய்து விடுகின்றனர்; நம்பிக்கை கொண்டு நற்செயல் செய்கிறவர்களைத் தவிர, (நம்பிக்கையாளர்கள் அவ்வாறு செய்வதில்லை. மோசம் செய்யாத) இத்தகையவர்கள் வெகு சிலரே!" என்று கூறினார். இதற்குள் நிச்சயமாக நாம் தாவூதை சோதனைக்குள்ளாக்கி விட்டோம் என்று தாவூத் எண்ணி, தன் இறைவனிடம் தன் குற்றத்தை மன்னிக்கும்படி கோரி, சிரம் பணிந்து வணங்கி தன் இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்தார். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௨௪)
Tafseer
௨௫

فَغَفَرْنَا لَهٗ ذٰلِكَۗ وَاِنَّ لَهٗ عِنْدَنَا لَزُلْفٰى وَحُسْنَ مَاٰبٍ ٢٥

faghafarnā
فَغَفَرْنَا
மன்னித்தருளினோம்
lahu
لَهُۥ
அவருக்கு
dhālika
ذَٰلِكَۖ
அதை
wa-inna lahu
وَإِنَّ لَهُۥ
நிச்சயமாக அவருக்கு
ʿindanā
عِندَنَا
நம்மிடம்
lazul'fā
لَزُلْفَىٰ
மிக நெருக்கமும்
waḥus'na
وَحُسْنَ
அழகிய
maābin
مَـَٔابٍ
மீளுமிடமும் உண்டு
ஆதலால், நாம் அவருடைய குற்றத்தை மன்னித்து விட்டோம். நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் மிக நெருங்கிய பெரும் பதவியும் அழகான இருப்பிடமும் உண்டு. ([௩௮] ஸூரத்து ஸாத்: ௨௫)
Tafseer
௨௬

يٰدَاوٗدُ اِنَّا جَعَلْنٰكَ خَلِيْفَةً فِى الْاَرْضِ فَاحْكُمْ بَيْنَ النَّاسِ بِالْحَقِّ وَلَا تَتَّبِعِ الْهَوٰى فَيُضِلَّكَ عَنْ سَبِيْلِ اللّٰهِ ۗاِنَّ الَّذِيْنَ يَضِلُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ لَهُمْ عَذَابٌ شَدِيْدٌ ۢبِمَا نَسُوْا يَوْمَ الْحِسَابِ ࣖ ٢٦

yādāwūdu
يَٰدَاوُۥدُ
தாவூதே!
innā
إِنَّا
நிச்சயமாக நாம்
jaʿalnāka
جَعَلْنَٰكَ
உம்மை ஆக்கினோம்
khalīfatan
خَلِيفَةً
அதிபராக
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
இந்த பூமியில்
fa-uḥ'kum
فَٱحْكُم
ஆகவே தீர்ப்பளிப்பீராக!
bayna
بَيْنَ
மத்தியில்
l-nāsi
ٱلنَّاسِ
மக்களுக்கு
bil-ḥaqi
بِٱلْحَقِّ
சத்தியத்தைக் கொண்டு
walā tattabiʿi
وَلَا تَتَّبِعِ
பின்பற்றிவிடாதீர்
l-hawā
ٱلْهَوَىٰ
ஆசையை
fayuḍillaka
فَيُضِلَّكَ
அது உம்மை வழிகெடுத்து விடும்
ʿan sabīli
عَن سَبِيلِ
மார்க்கத்தில் இருந்து
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna yaḍillūna
ٱلَّذِينَ يَضِلُّونَ
வழிகெடுபவர்கள்
ʿan sabīli
عَن سَبِيلِ
மார்க்கத்தில் இருந்து
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
வேதனை
shadīdun
شَدِيدٌۢ
கடுமையான(து)
bimā nasū
بِمَا نَسُوا۟
அவர்கள் மறந்ததால்
yawma
يَوْمَ
நாளை
l-ḥisābi
ٱلْحِسَابِ
விசாரணை
ஆதலால், (நாம் அவரை நோக்கி) "தாவூதே! நிச்சயமாக நாம் உங்களைப் பூமியில் (நம்முடைய) பிரதிநிதியாக ஆக்கினோம். ஆதலால், நீங்கள் மனிதர்களுக்கிடையில், நியாயமாகத் தீர்ப்பு கூறுங்கள். சரீர இச்சையைப் பின்பற்றாதீர்கள். பின்பற்றினால், அது உங்களை அல்லாஹ்வுடைய பாதையிலிருந்தும் தவறிவிடும்படி செய்யும். எவர்கள் அல்லாஹ்வின் பாதையிலிருந்து தவறு கின்றார்களோ அவர்கள் கேள்வி கணக்குக் கேட்கும் நாளை மறந்து விடுவார்கள். அதன் காரணமாக, அவர்களுக்கு நிச்சயமாக கடினமான வேதனையுண்டு" என்று கூறினோம். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௨௬)
Tafseer
௨௭

وَمَا خَلَقْنَا السَّمَاۤءَ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا بَاطِلًا ۗذٰلِكَ ظَنُّ الَّذِيْنَ كَفَرُوْا فَوَيْلٌ لِّلَّذِيْنَ كَفَرُوْا مِنَ النَّارِۗ ٢٧

wamā khalaqnā
وَمَا خَلَقْنَا
நாம் படைக்கவில்லை
l-samāa
ٱلسَّمَآءَ
வானத்தையும்
wal-arḍa
وَٱلْأَرْضَ
பூமியையும்
wamā baynahumā
وَمَا بَيْنَهُمَا
அவ்விரண்டுக்கு மத்தியில் உள்ளவற்றையும்
bāṭilan dhālika
بَٰطِلًاۚ ذَٰلِكَ
அது/வீணாக
ẓannu
ظَنُّ
எண்ணமாகும்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟ۚ
நிராகரிப்பவர்களின்
fawaylun
فَوَيْلٌ
நாசம்
lilladhīna kafarū
لِّلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பவர்களுக்கு
mina l-nāri
مِنَ ٱلنَّارِ
நரகத்தில்
வானங்களையும், பூமியையும், இவைகளுக்கு மத்தியில் உள்ளவைகளையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (வீணென்பது) நிராகரிப்பவர்களின் எண்ணமேயாகும். நிராகரிக்கும் இவர்களுக்குக் கேடுதான்; இவர்களுக்கு நரகமே கிடைக்கும். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௨௭)
Tafseer
௨௮

اَمْ نَجْعَلُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ كَالْمُفْسِدِيْنَ فِى الْاَرْضِۖ اَمْ نَجْعَلُ الْمُتَّقِيْنَ كَالْفُجَّارِ ٢٨

am najʿalu
أَمْ نَجْعَلُ
ஆக்குவோமா?
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்களை
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
kal-muf'sidīna
كَٱلْمُفْسِدِينَ
குழப்பம் செய்பவர்களைப் போன்று
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
am najʿalu
أَمْ نَجْعَلُ
ஆக்குவோமா?
l-mutaqīna
ٱلْمُتَّقِينَ
இறையச்சமுடையவர்கள்
kal-fujāri
كَٱلْفُجَّارِ
பாவிகளைப் போன்று
நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களைப் பூமியில் விஷமம் செய்தவர்களைப் போல் நாம் ஆக்கி விடுவோமா? அல்லது இறை அச்சமுடையவர்களை (பயமற்று குற்றம் புரியும்) பாவிகளைப் போல் நாம் ஆக்கி விடுவோமா? ([௩௮] ஸூரத்து ஸாத்: ௨௮)
Tafseer
௨௯

كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَيْكَ مُبٰرَكٌ لِّيَدَّبَّرُوْٓا اٰيٰتِهٖ وَلِيَتَذَكَّرَ اُولُوا الْاَلْبَابِ ٢٩

kitābun
كِتَٰبٌ
ஒரு வேதமாகும்
anzalnāhu
أَنزَلْنَٰهُ
இதை நாம் இறக்கினோம்
ilayka
إِلَيْكَ
உமக்கு
mubārakun
مُبَٰرَكٌ
அருள் நிறைந்த(து)
liyaddabbarū
لِّيَدَّبَّرُوٓا۟
அவர்கள் சிந்திப்பதற்காக(வும்)
āyātihi
ءَايَٰتِهِۦ
இதன் வசனங்களை
waliyatadhakkara
وَلِيَتَذَكَّرَ
அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
ulū l-albābi
أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ
அறிவுள்ளவர்கள்
(நபியே!) இவ்வேதத்தை நாமே உங்கள்மீது இறக்கி வைத்தோம். இது மிக பாக்கியமுள்ளது. அறிவுடையவர்கள் இதன் வசனங்களை கவனித்து ஆராய்ந்து நல்லுணர்ச்சி பெறுவார்களாக! ([௩௮] ஸூரத்து ஸாத்: ௨௯)
Tafseer
௩௦

وَوَهَبْنَا لِدَاوٗدَ سُلَيْمٰنَۗ نِعْمَ الْعَبْدُ ۗاِنَّهٗٓ اَوَّابٌۗ ٣٠

wawahabnā
وَوَهَبْنَا
நாம் வழங்கினோம்
lidāwūda
لِدَاوُۥدَ
தாவூதுக்கு
sulaymāna
سُلَيْمَٰنَۚ
சுலைமானை
niʿ'ma l-ʿabdu
نِعْمَ ٱلْعَبْدُۖ
அவர் சிறந்த அடியார்
innahu
إِنَّهُۥٓ
நிச்சயமாக அவர்
awwābun
أَوَّابٌ
அல்லாஹ்வின் பக்கம் அதிகம் திரும்புகின்றவர்
தாவூதுக்கு, ஸுலைமானை நாம் மகனாகத் தந்தருள் புரிந்தோம். அவர் மிக நல்லடியார். மெய்யாகவே அவர் (ஒவ்வொரு விஷயத்திலும்) நம்மையே நோக்கி நின்றார். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௩௦)
Tafseer