Skip to content

ஸூரா ஸூரத்து ஸாத் - Page: 2

Sad

(Ṣād)

௧௧

جُنْدٌ مَّا هُنَالِكَ مَهْزُوْمٌ مِّنَ الْاَحْزَابِ ١١

jundun
جُندٌ
இராணுவம்தான்
mā hunālika
مَّا هُنَالِكَ
அந்த விஷயத்தில்
mahzūmun
مَهْزُومٌ
தோற்கடிக்கப்படுகின்ற(வர்)
mina l-aḥzābi
مِّنَ ٱلْأَحْزَابِ
கோஷ்டிகளைச் சேர்ந்தவர்கள்
(கேவலம்!) இங்கிருக்கும் இவர்களுடைய கூட்டத்தினர் (எம்மாத்திரம்?) மற்ற கூட்டத்தினர்களைப் போலவே இவர்களும் முறியடிக்கப்படுவார்கள். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௧௧)
Tafseer
௧௨

كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّعَادٌ وَّفِرْعَوْنُ ذُو الْاَوْتَادِۙ ١٢

kadhabat
كَذَّبَتْ
பொய்ப்பித்தனர்
qablahum
قَبْلَهُمْ
இவர்களுக்கு முன்னர்
qawmu
قَوْمُ
மக்களும்
nūḥin
نُوحٍ
நூஹூடைய
waʿādun
وَعَادٌ
ஆதும்
wafir'ʿawnu
وَفِرْعَوْنُ
ஃபிர்அவ்னும்
dhū l-awtādi
ذُو ٱلْأَوْتَادِ
ஆணிகளை உடைய
(இவ்வாறே) இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹ்வுடைய மக்களும், "ஆத்" என்னும் மக்களும், பெரும் படையுடைய ஃபிர்அவ்னும், (நம்முடைய தூதர்களைப்) பொய்யாக்கினார்கள். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௧௨)
Tafseer
௧௩

وَثَمُوْدُ وَقَوْمُ لُوْطٍ وَّاَصْحٰبُ لْـَٔيْكَةِ ۗ اُولٰۤىِٕكَ الْاَحْزَابُ ١٣

wathamūdu
وَثَمُودُ
ஸமூதும்
waqawmu
وَقَوْمُ
மக்களும்
lūṭin
لُوطٍ
லூத்துடைய
wa-aṣḥābu al'aykati
وَأَصْحَٰبُ لْـَٔيْكَةِۚ
தோட்டமுடையவர்களும்
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்தான்
l-aḥzābu
ٱلْأَحْزَابُ
கோஷ்டிகள்
அவ்வாறே "ஸமூத்" என்னும் மக்களும், லூத்துடைய மக்களும், (மத்யன்) தோப்புவாசிகளும் (பொய்யாக்கினார்கள்). இவர்கள்தாம் (முறியடிக்கப்பட்ட) அந்தக் கூட்டத்தினர்கள். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௧௩)
Tafseer
௧௪

اِنْ كُلٌّ اِلَّا كَذَّبَ الرُّسُلَ فَحَقَّ عِقَابِ ࣖ ١٤

in
إِن
இல்லை
kullun
كُلٌّ
எல்லோரும்
illā
إِلَّا
தவிர
kadhaba
كَذَّبَ
பொய்ப்பித்தார்(கள்)
l-rusula
ٱلرُّسُلَ
தூதர்களை
faḥaqqa
فَحَقَّ
ஆகவே, உறுதியானது
ʿiqābi
عِقَابِ
எனது தண்டனை
இவர்கள் ஒவ்வொரு கூட்டத்தினரும் தூதர்களைப் பொய்யாக்காமல் இருந்ததில்லை. (ஆகவே, அவர்களை) வேதனை செய்வது நியாயமாயிற்று. ([௩௮] ஸூரத்து ஸாத்: ௧௪)
Tafseer
௧௫

وَمَا يَنْظُرُ هٰٓؤُلَاۤءِ اِلَّا صَيْحَةً وَّاحِدَةً مَّا لَهَا مِنْ فَوَاقٍ ١٥

wamā yanẓuru
وَمَا يَنظُرُ
எதிர்பார்க்கவில்லை
hāulāi
هَٰٓؤُلَآءِ
இவர்கள்
illā
إِلَّا
தவிர
ṣayḥatan
صَيْحَةً
சப்தத்தை
wāḥidatan
وَٰحِدَةً
ஒரே ஒரு
mā lahā
مَّا لَهَا
அதற்கு இருக்காது
min fawāqin
مِن فَوَاقٍ
துண்டிப்பு, இடைவெளி
ஆகவே, (அரபிகளாகிய) இவர்களும் (தங்களை அழிக்கக் கூடிய) ஒரே ஒரு சப்தத்தைத் தவிர (வேறெதனை) எதிர்பார்க் கின்றனர். (அது வரும் சமயம்) அதனைத் தாமதப்படுத்தவும் வழி இருக்காது. ([௩௮] ஸூரத்து ஸாத்: ௧௫)
Tafseer
௧௬

وَقَالُوْا رَبَّنَا عَجِّلْ لَّنَا قِطَّنَا قَبْلَ يَوْمِ الْحِسَابِ ١٦

waqālū
وَقَالُوا۟
அவர்கள் கூறினர்
rabbanā
رَبَّنَا
எங்கள் இறைவா!
ʿajjil
عَجِّل
தீவிரப்படுத்து
lanā
لَّنَا
எங்களுக்கு
qiṭṭanā
قِطَّنَا
எங்கள் பத்திரத்தை, ஆவணத்தை
qabla
قَبْلَ
முன்பாக
yawmi l-ḥisābi
يَوْمِ ٱلْحِسَابِ
விசாரணை நாளுக்கு
இவர்கள், கேள்வி கணக்குக் கேட்கும் நாள் வருவதற்கு முன்னதாகவே, "எங்கள் இறைவனே! எங்களுடைய (வேதனையின்) பாகத்தை எங்களுக்குக் கொடுத்துத் தீர்த்துவிடு!" என்று (பரிகாசமாகக்) கேட்கின்றார்கள். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௧௬)
Tafseer
௧௭

اِصْبِرْ عَلٰى مَا يَقُوْلُوْنَ وَاذْكُرْ عَبْدَنَا دَاوٗدَ ذَا الْاَيْدِۚ اِنَّهٗٓ اَوَّابٌ ١٧

iṣ'bir
ٱصْبِرْ
சகிப்பீராக!
ʿalā mā yaqūlūna
عَلَىٰ مَا يَقُولُونَ
அவர்கள் கூறுவதை
wa-udh'kur
وَٱذْكُرْ
இன்னும் நினைவு கூறுவீராக
ʿabdanā
عَبْدَنَا
நமது அடியார்
dāwūda
دَاوُۥدَ
தாவூதை
dhā l-aydi
ذَا ٱلْأَيْدِۖ
மிக வலிமை, உறுதி உடைய
innahu
إِنَّهُۥٓ
நிச்சயமாக அவர்
awwābun
أَوَّابٌ
முற்றிலும் திரும்பக்கூடியவர்
(நபியே!) இவர்கள் கூறுவதைப் பற்றிப் பொறுமையாக சகித்துக்கொண்டு இருங்கள். அன்றி, மிக பலசாலியாகிய நமது அடியார் தாவூதை நினைத்துப் பாருங்கள். நிச்சயமாக அவர் (எத்தகைய கஷ்டத்திலும்) நம்மையே நோக்கி நின்றார். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௧௭)
Tafseer
௧௮

اِنَّا سَخَّرْنَا الْجِبَالَ مَعَهٗ يُسَبِّحْنَ بِالْعَشِيِّ وَالْاِشْرَاقِۙ ١٨

innā
إِنَّا
நிச்சயமாக நாம்
sakharnā
سَخَّرْنَا
வசப்படுத்தினோம்
l-jibāla
ٱلْجِبَالَ
மலைகளை
maʿahu
مَعَهُۥ
அவருடன்
yusabbiḥ'na
يُسَبِّحْنَ
(அவை) துதிக்கும்
bil-ʿashiyi
بِٱلْعَشِىِّ
மாலையிலும்
wal-ish'rāqi
وَٱلْإِشْرَاقِ
காலையிலும்
நிச்சயமாக நாம் மலைகளை அவருக்கு வசப்படுத்தித் தந்தோம். காலையிலும், மாலையிலும் அவை அவருடன் சேர்ந்து துதி செய்து கொண்டிருந்தன. ([௩௮] ஸூரத்து ஸாத்: ௧௮)
Tafseer
௧௯

وَالطَّيْرَمَحْشُوْرَةً ۗ كُلٌّ لَهٗٓ اَوَّابٌ ١٩

wal-ṭayra
وَٱلطَّيْرَ
இன்னும் பறவைகளை
maḥshūratan
مَحْشُورَةًۖ
ஒன்று சேர்க்கப்பட்ட
kullun lahu
كُلٌّ لَّهُۥٓ
அவை எல்லாம் அவருக்கு
awwābun
أَوَّابٌ
கீழ்ப்படிபவையாக
பறவைகளின் கூட்டத்தையும், (நாம் அவருக்கு வசப்படுத்தித் தந்தோம்.) அவை, அவருடைய சப்தத்தைப் பின்பற்றி அவரை சூழ்ந்து (அவ்வாறே) சப்தமிட்டன. ([௩௮] ஸூரத்து ஸாத்: ௧௯)
Tafseer
௨௦

وَشَدَدْنَا مُلْكَهٗ وَاٰتَيْنٰهُ الْحِكْمَةَ وَفَصْلَ الْخِطَابِ ٢٠

washadadnā
وَشَدَدْنَا
பலப்படுத்தினோம்
mul'kahu
مُلْكَهُۥ
அவருடைய ஆட்சியை
waātaynāhu
وَءَاتَيْنَٰهُ
இன்னும் அவருக்கு கொடுத்தோம்
l-ḥik'mata
ٱلْحِكْمَةَ
ஞானத்தை
wafaṣla
وَفَصْلَ
இன்னும் மிகத்தெளிவான, மிக உறுதியான
l-khiṭābi
ٱلْخِطَابِ
பேச்சை(யும்)
அவருடைய ஆட்சியை நாம் பலப்படுத்தி, அவருக்கு ஞானத்தையும் பிரச்சனைகளைத் தீர்க்கும் சக்தியையும் கொடுத்தோம். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௨௦)
Tafseer