صۤ ۗوَالْقُرْاٰنِ ذِى الذِّكْرِۗ ١
- sad
- صٓۚ
- ஸாத்
- wal-qur'āni
- وَٱلْقُرْءَانِ
- குர்ஆன் மீது சத்தியமாக!
- dhī l-dhik'ri
- ذِى ٱلذِّكْرِ
- அறிவுரைகள் நிறைந்த
ஸாத்; நல்லுபதேசங்கள் நிறைந்த இந்தக் குர்ஆனின் மீது சத்தியமாக! ([௩௮] ஸூரத்து ஸாத்: ௧)Tafseer
بَلِ الَّذِيْنَ كَفَرُوْا فِيْ عِزَّةٍ وَّشِقَاقٍ ٢
- bali
- بَلِ
- மாறாக
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوا۟
- நிராகரிப்பவர்கள்
- fī ʿizzatin
- فِى عِزَّةٍ
- பிடிவாதத்திலும்
- washiqāqin
- وَشِقَاقٍ
- முரண்பாட்டிலும்
(இது நம்மால்தான் அருளப்பட்டது. இதனை) நிராகரிப் பவர்கள் பெரும் குரோதத்திலும் விரோதத்திலும் (மூழ்கி) இருக்கின்றனர். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௨)Tafseer
كَمْ اَهْلَكْنَا مِنْ قَبْلِهِمْ مِّنْ قَرْنٍ فَنَادَوْا وَّلَاتَ حِيْنَ مَنَاصٍ ٣
- kam
- كَمْ
- எத்தனையோ
- ahlaknā
- أَهْلَكْنَا
- நாம் அழித்தோம்
- min qablihim
- مِن قَبْلِهِم
- இவர்களுக்கு முன்னர்
- min qarnin
- مِّن قَرْنٍ
- பல தலைமுறை
- fanādaw
- فَنَادَوا۟
- அழைத்தனர்
- walāta
- وَّلَاتَ
- அந்த நேரம் அல்ல
- ḥīna manāṣin
- حِينَ مَنَاصٍ
- தப்பித்து ஓடுவதற்குரிய நேரம்
இவர்களுக்கு முன்னர், (இவ்வாறு இருந்த) எத்தனையோ வகுப்பாரை நாம் அழித்திருக்கின்றோம். (வேதனை வந்த சமயத்தில்) அவர்கள் எல்லோரும் உதவி தேடிக் கூச்சலிட்டார்கள். அது (வேதனையிலிருந்து) தப்பித்துக் கொள்ளக்கூடிய நேரமாய் இருக்கவில்லை. ([௩௮] ஸூரத்து ஸாத்: ௩)Tafseer
وَعَجِبُوْٓا اَنْ جَاۤءَهُمْ مُّنْذِرٌ مِّنْهُمْ ۖوَقَالَ الْكٰفِرُوْنَ هٰذَا سٰحِرٌ كَذَّابٌۚ ٤
- waʿajibū
- وَعَجِبُوٓا۟
- ஆச்சரியப்பட்டனர்
- an
- أَن
- வந்ததால்
- jāahum
- جَآءَهُم
- அவர்களிடம்
- mundhirun
- مُّنذِرٌ
- ஓர் எச்சரிப்பாளர்
- min'hum
- مِّنْهُمْۖ
- அவர்களில் இருந்தே
- waqāla
- وَقَالَ
- கூறினர்
- l-kāfirūna
- ٱلْكَٰفِرُونَ
- நிராகரிப்பாளர்கள்
- hādhā
- هَٰذَا
- இவர்
- sāḥirun
- سَٰحِرٌ
- ஒரு சூனியக்காரர்
- kadhābun
- كَذَّابٌ
- ஒரு பெரும் பொய்யர்
(அவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கக்கூடிய ஒரு தூதர், (ஆகிய நீங்கள்) அவர்களி(ன் இனத்தி)லிருந்தே அவர்களிடம் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்டு, "இவர் மிகப் பொய் சொல்லும் சூனியக்காரர்தான்" என்று (உங்களைப் பற்றி) நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௪)Tafseer
اَجَعَلَ الْاٰلِهَةَ اِلٰهًا وَّاحِدًا ۖاِنَّ هٰذَا لَشَيْءٌ عُجَابٌ ٥
- ajaʿala
- أَجَعَلَ
- இவர் ஆக்கிவிட்டாரா?
- l-ālihata
- ٱلْءَالِهَةَ
- தெய்வங்களை
- ilāhan
- إِلَٰهًا
- தெய்வமாக
- wāḥidan
- وَٰحِدًاۖ
- ஒரே ஒரு
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- hādhā
- هَٰذَا
- இது
- lashayon
- لَشَىْءٌ
- ஒரு விஷயம்தான்
- ʿujābun
- عُجَابٌ
- ஆச்சரியமான
"என்ன! இவர் (நம்) தெய்வங்கள் அனைத்தையும் (பொய்யெனக் கூறி, வணக்கத்திற்குரியவன்) ஒரே இறைவன்தான் என்று ஆக்கிவிட்டாரா? மெய்யாகவே, இது ஓர் ஆச்சரியமான விஷயம்தான்" (என்று கூறி,) ([௩௮] ஸூரத்து ஸாத்: ௫)Tafseer
وَانْطَلَقَ الْمَلَاُ مِنْهُمْ اَنِ امْشُوْا وَاصْبِرُوْا عَلٰٓى اٰلِهَتِكُمْ ۖاِنَّ هٰذَا لَشَيْءٌ يُّرَادُ ۖ ٦
- wa-inṭalaqa
- وَٱنطَلَقَ
- சென்றனர்
- l-mala-u
- ٱلْمَلَأُ
- தலைவர்கள்
- min'hum
- مِنْهُمْ
- அவர்களில் உள்ள
- ani im'shū
- أَنِ ٱمْشُوا۟
- நீங்கள் சென்று விடுங்கள்
- wa-iṣ'birū
- وَٱصْبِرُوا۟
- உறுதியாக இருங்கள்!
- ʿalā ālihatikum
- عَلَىٰٓ ءَالِهَتِكُمْۖ
- உங்கள் தெய்வங்கள் மீது
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- hādhā
- هَٰذَا
- இது
- lashayon
- لَشَىْءٌ
- ஒரு விஷயம்தான்
- yurādu
- يُرَادُ
- நாடப்பட்ட
அவர்களிலுள்ள தலைவர்கள் (மற்றவர்களை நோக்கி, "இவரைவிட்டு) நீங்கள் சென்றுவிடுங்கள். உங்கள் தெய்வங்களை ஆராதனை செய்வதில் நீங்கள் உறுதியாயிருங்கள். (உங்கள் தெய்வங்களைக் கைவிடும்படி கூறும்) இவ்விஷயத்தில் ஏதோ (சுயநலந்தான்) கருதப்படுகின்றது" என்று கூறிக்கொண்டே சென்று விட்டனர். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௬)Tafseer
مَا سَمِعْنَا بِهٰذَا فِى الْمِلَّةِ الْاٰخِرَةِ ۖاِنْ هٰذَآ اِلَّا اخْتِلَاقٌۚ ٧
- mā samiʿ'nā
- مَا سَمِعْنَا
- நாங்கள் கேள்விப்பட்டதில்லை
- bihādhā
- بِهَٰذَا
- இதை
- fī l-milati
- فِى ٱلْمِلَّةِ
- மார்க்கத்தில்
- l-ākhirati
- ٱلْءَاخِرَةِ
- வேறு
- in hādhā
- إِنْ هَٰذَآ
- இது இல்லை
- illā ikh'tilāqun
- إِلَّا ٱخْتِلَٰقٌ
- கற்பனையாக இட்டுக்கட்டப்பட்டதைத் தவிர
"முன்னுள்ள வகுப்பார்களிலும், இதனை நாம் கேள்விப்பட்டதில்லை. இது (இவரால்) புனையப்பட்டதே அன்றி வேறில்லை" என்றும், ([௩௮] ஸூரத்து ஸாத்: ௭)Tafseer
اَؤُنْزِلَ عَلَيْهِ الذِّكْرُ مِنْۢ بَيْنِنَا ۗبَلْ هُمْ فِيْ شَكٍّ مِّنْ ذِكْرِيْۚ بَلْ لَّمَّا يَذُوْقُوْا عَذَابِ ۗ ٨
- a-unzila
- أَءُنزِلَ
- இறக்கப்பட்டதா?
- ʿalayhi
- عَلَيْهِ
- அவர் மீது
- l-dhik'ru
- ٱلذِّكْرُ
- வேதம்
- min bayninā
- مِنۢ بَيْنِنَاۚ
- நமக்கு மத்தியில்
- bal
- بَلْ
- மாறாக
- hum
- هُمْ
- அவர்கள்
- fī shakkin
- فِى شَكٍّ
- சந்தேகத்தில்
- min dhik'rī
- مِّن ذِكْرِىۖ
- எனது வேதத்தில்
- bal
- بَل
- மாறாக,
- lammā yadhūqū
- لَّمَّا يَذُوقُوا۟
- அவர்கள் சுவைக்கவில்லை
- ʿadhābi
- عَذَابِ
- எனது வேதனையை
"நம்மைவிட்டு இவர் பேரில் மட்டும்தானா (வேத) உபதேசம் இறக்கப்பட்டுவிட்டது" என்றும் (கூறினார்கள்). அவ்வாறன்று. உண்மையில் இவர்கள் நம்முடைய எச்சரிக்கையைப் பற்றியே பெரும் சந்தேகத்தில் இருக்கின்றனர். அன்றி, இதுவரையில் அவர்கள் நம்முடைய வேதனையைச் சுவைத்துப் பார்க்கவே இல்லை. ([௩௮] ஸூரத்து ஸாத்: ௮)Tafseer
اَمْ عِنْدَهُمْ خَزَاۤىِٕنُ رَحْمَةِ رَبِّكَ الْعَزِيْزِ الْوَهَّابِۚ ٩
- am
- أَمْ
- ?
- ʿindahum
- عِندَهُمْ
- அவர்களிடம்
- khazāinu
- خَزَآئِنُ
- பொக்கிஷங்கள்
- raḥmati
- رَحْمَةِ
- அருளுடைய
- rabbika
- رَبِّكَ
- உமது இறைவனின்
- l-ʿazīzi
- ٱلْعَزِيزِ
- கண்ணியமிக்க(வன்)
- l-wahābi
- ٱلْوَهَّابِ
- மகா கொடை வள்ளல்
(வேத உபதேசம் தங்கள் மீது இறங்க வேண்டுமென்று இவர்கள் கூறுவதற்கு) அனைவரையும் மிகைத்த பெரும் கொடையாளியாகிய, உங்களது இறைவனின் அருள் பொக்கிஷம் அவர்களிடம்தான் இருக்கின்றதா? ([௩௮] ஸூரத்து ஸாத்: ௯)Tafseer
اَمْ لَهُمْ مُّلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا ۗفَلْيَرْتَقُوْا فِى الْاَسْبَابِ ١٠
- am lahum
- أَمْ لَهُم
- அவர்களுக்கு இருக்கின்றதா?
- mul'ku
- مُّلْكُ
- ஆட்சி
- l-samāwāti wal-arḍi
- ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ
- வானங்கள்/இன்னும் பூமி
- wamā baynahumā
- وَمَا بَيْنَهُمَاۖ
- இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின்
- falyartaqū
- فَلْيَرْتَقُوا۟
- அவர்கள் ஏறட்டும்
- fī l-asbābi
- فِى ٱلْأَسْبَٰبِ
- வாசல்களில்
அல்லது வானங்கள், பூமி, இன்னும் இவற்றின் மத்தியில் உள்ளவைகளின் ஆட்சி அவர்களுக்கு உரியதுதானா? அவ்வாறாயின், (இறைவனுடன் போர் புரிவதற்காக) ஏணி வைத்து மேலேறவும். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௧௦)Tafseer