Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௯௧

Qur'an Surah As-Saffat Verse 91

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௯௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَرَاغَ اِلٰٓى اٰلِهَتِهِمْ فَقَالَ اَلَا تَأْكُلُوْنَۚ (الصافات : ٣٧)

farāgha
فَرَاغَ
Then he turned
ஆக, அவர் விரைந்தார்
ilā ālihatihim
إِلَىٰٓ ءَالِهَتِهِمْ
to their gods
அவர்களின் தெய்வங்கள் பக்கம்
faqāla
فَقَالَ
and said
கூறினார்
alā takulūna
أَلَا تَأْكُلُونَ
"Do not you eat?
நீங்கள் சாப்பிட மாட்டீர்களா?

Transliteration:

Faraagha ilaaa aalihatihim faqaala alaa taakuloon (QS. aṣ-Ṣāffāt:91)

English Sahih International:

Then he turned to their gods and said, "Do you not eat? (QS. As-Saffat, Ayah ௯௧)

Abdul Hameed Baqavi:

(பின்னர்) அவர், அவர்களுடைய கோயிலுக்குள் இரகசியமாகச் சென்றார். (விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட பல வகை உணவுகள் இருக்கக் கண்டு, சிலைகளை நோக்கி) "நீங்கள் இவைகளை ஏன் புசிப்பதில்லை? (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௯௧)

Jan Trust Foundation

அப்பால் அவர்களுடைய தெய்வங்களின் பால் அவர் சென்று; “(உங்களுக்கு முன் படைக்கப்பட்டுள்ள உணவுகளை) நீங்கள் உண்ணமாட்டீர்களா?” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆக, அவர்களின் தெய்வங்கள் பக்கம் அவர் (மறைவாக) சென்று (அந்த தெய்வங்களிடம்) கூறினார்: “நீங்கள் சாப்பிட மாட்டீர்களா?”