Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௮

Qur'an Surah As-Saffat Verse 8

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَا يَسَّمَّعُوْنَ اِلَى الْمَلَاِ الْاَعْلٰى وَيُقْذَفُوْنَ مِنْ كُلِّ جَانِبٍۖ (الصافات : ٣٧)

lā yassammaʿūna
لَّا يَسَّمَّعُونَ
Not they may listen
அவர்களால் செவியுற முடியாது
ilā l-mala-i
إِلَى ٱلْمَلَإِ
to the assembly
கூட்டத்தினரின் பக்கம்
l-aʿlā
ٱلْأَعْلَىٰ
[the] exalted
மிக உயர்ந்த
wayuq'dhafūna
وَيُقْذَفُونَ
are pelted
இன்னும் எறியப்படுவார்கள்
min
مِن
from
இருந்தும்
kulli
كُلِّ
every
எல்லா
jānibin
جَانِبٍ
side
பக்கங்களில்

Transliteration:

Laa yassamma 'oona ilal mala il a'alaa wa yuqzafoona min kulli jaanib (QS. aṣ-Ṣāffāt:8)

English Sahih International:

[So] they may not listen to the exalted assembly [of angels] and are pelted from every side, (QS. As-Saffat, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

மேல் உலகத்தில் உள்ளவர்களின் விஷயங்களை (ஷைத்தான்கள்) செவியுற முடியாது. (ஏனென்றால், அதனை நெருங்கும் ஒவ்வொருவரும்) பல பாகங்களிலிருந்தும் (கொள்ளி களால்) எறியப்பட்டு விரட்டப்படுகின்றனர். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௮)

Jan Trust Foundation

(அதனால்) அவர்கள் மேலான கூட்டத்தார் (பேச்சை ஒளிந்து) கேட்க முடியாது; இன்னும், அவர்கள் ஒவ்வோர் திசையிலிருந்தும் வீசி எறியப்படுகிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மிக உயர்ந்த கூட்டத்தினரின் (-வானவர்களின்) பேச்சை அவர்களால் செவியுற முடியாது. (வானத்தை விட்டு தடுக்கப்படுவதற்காக) எல்லா பக்கங்களில் இருந்தும் அவர்கள் (-அந்த ஷைத்தான்கள் வால் நட்சத்திரங்களால்) எறியப்படுவார்கள்,