Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௨௮

Qur'an Surah As-Saffat Verse 28

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْٓا اِنَّكُمْ كُنْتُمْ تَأْتُوْنَنَا عَنِ الْيَمِيْنِ (الصافات : ٣٧)

qālū
قَالُوٓا۟
They will say
அவர்கள் கூறுவார்கள்
innakum
إِنَّكُمْ
"Indeed you
நிச்சயமாக நீங்கள்
kuntum
كُنتُمْ
[you] used (to)
இருந்தீர்கள்
tatūnanā
تَأْتُونَنَا
come (to) us
எங்களிடம் வருபவர்களாக
ʿani l-yamīni
عَنِ ٱلْيَمِينِ
from the right"
நன்மையை விட்டுத் தடுக்க

Transliteration:

Qaalooo innakum kuntum taatoonanaa 'anil yameen (QS. aṣ-Ṣāffāt:28)

English Sahih International:

They will say, "Indeed, you used to come at us from the right." (QS. As-Saffat, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

(சிலர் தங்கள் தலைவர்களை நோக்கி) "நிச்சயமாக நீங்கள் நம்மிடம் பலவந்தமாகவே வந்(து உங்களுக்கு வழிப்படும்படி எங்களை நிர்ப்பந்தித்)தீர்கள்" என்று கூறுவார்கள். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௨௮)

Jan Trust Foundation

(தம் தலைவர்களை நோக்கி|) “நிச்சயமாக நீங்கள் வலப்புறத்திலிருந்து (சக்தியுடன்) எங்களிடம் வருகிறவர்களாக இருந்தீர்கள்” என்று கூறுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் (-வழிகெட்டவர்கள் வழிகெடுத்தவர்களை நோக்கி) கூறுவார்கள்: நன்மையை விட்டுத் தடுக்க நீங்கள் எங்களிடம் வருபவர்களாக இருந்தீர்கள்.