Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௫௮

Qur'an Surah As-Saffat Verse 158

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௫௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَجَعَلُوْا بَيْنَهٗ وَبَيْنَ الْجِنَّةِ نَسَبًا ۗوَلَقَدْ عَلِمَتِ الْجِنَّةُ اِنَّهُمْ لَمُحْضَرُوْنَۙ (الصافات : ٣٧)

wajaʿalū
وَجَعَلُوا۟
And they have made
அவர்கள் ஏற்படுத்தினர்
baynahu
بَيْنَهُۥ
between Him
அவனுக்கு இடையில்
wabayna
وَبَيْنَ
and between
இன்னும் இடையில்
l-jinati
ٱلْجِنَّةِ
the jinn
ஜின்களுக்கு
nasaban
نَسَبًاۚ
a relationship
ஓர் உறவை
walaqad
وَلَقَدْ
but certainly
திட்டவட்டமாக
ʿalimati
عَلِمَتِ
know
அறிந்து கொண்டனர்
l-jinatu
ٱلْجِنَّةُ
the jinn
ஜின்கள்
innahum
إِنَّهُمْ
that they
நிச்சயமாக தாங்கள்
lamuḥ'ḍarūna
لَمُحْضَرُونَ
(will) surely be brought
ஆஜர்படுத்தப்படுவோம்

Transliteration:

Wa ja'aloo bainahoo wa bainal jinnati nasabaa; wa laqad 'alimatil jinnatu innahum lamuhdaroon (QS. aṣ-Ṣāffāt:158)

English Sahih International:

And they have made [i.e., claimed] between Him and the jinn a lineage, but the jinn have already known that they [who made such claims] will be brought [to punishment]. (QS. As-Saffat, Ayah ௧௫௮)

Abdul Hameed Baqavi:

(நபியே!) இவர்கள் அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்கும் இடையில் பந்துத்துவத்தைக் கற்பனை செய்கின்றனர். ஆயினும், ஜின்களோ (தாங்கள் குற்றம் செய்தால் தண்டனைக்காக) நிச்சயமாக அவனிடம் கொண்டு வரப்படுவோம் என்று திட்டமாக அறிந்து இருக்கின்றனர். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௫௮)

Jan Trust Foundation

அன்றியும் இவர்கள் அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்குமிடையில் (வம்சாவளி) உறவை (கற்பனையாக) ஏற்படுத்துகின்றனர்; ஆனால் ஜின்களும் (மறுமையில் இறைவன் முன்) நிச்சயமாகக் கொண்டுவரப்படுவார்கள் என்பதை அறிந்தேயிருக்கிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும், அவனுக்கும் ஜின்களுக்கும் இடையில் ஓர் உறவை அவர்கள் ஏற்படுத்தினர். நிச்சயமாக தாங்கள் (நரகத்தில்) ஆஜர்படுத்தப்படுவோம் என்று திட்டவட்டமாக ஜின்கள் அறிந்து கொண்டனர்.