குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௧௩
Qur'an Surah As-Saffat Verse 113
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَبٰرَكْنَا عَلَيْهِ وَعَلٰٓى اِسْحٰقَۗ وَمِنْ ذُرِّيَّتِهِمَا مُحْسِنٌ وَّظَالِمٌ لِّنَفْسِهٖ مُبِيْنٌ ࣖ (الصافات : ٣٧)
- wabāraknā ʿalayhi
- وَبَٰرَكْنَا عَلَيْهِ
- And We blessed him
- அருள் வளம் புரிந்தோம்/அவருக்கு(ம்)
- waʿalā is'ḥāqa
- وَعَلَىٰٓ إِسْحَٰقَۚ
- and [on] Ishaq
- இஸ்ஹாக்கிற்கும்
- wamin dhurriyyatihimā
- وَمِن ذُرِّيَّتِهِمَا
- And of their offspring
- அவ்விருவரின் சந்ததியில்
- muḥ'sinun
- مُحْسِنٌ
- (are) good-doers
- நல்லவரும்
- waẓālimun
- وَظَالِمٌ
- and unjust
- தீங்கிழைத்தவரும்
- linafsihi
- لِّنَفْسِهِۦ
- to himself
- தனக்கு
- mubīnun
- مُبِينٌ
- clear
- தெளிவாக
Transliteration:
Wa baaraknaa 'alaihi wa 'alaaa Ishaaq; wa min zurriyya tihimaa muhsinunw wa zaalimul linafshihee mubeen(QS. aṣ-Ṣāffāt:113)
English Sahih International:
And We blessed him and Isaac. But among their descendants is the doer of good and the clearly unjust to himself [i.e., sinner]. (QS. As-Saffat, Ayah ௧௧௩)
Abdul Hameed Baqavi:
அவர் மீதும், இஸ்ஹாக் மீதும் நாம் நமது பாக்கியங்களைச் சொரிந்தோம். அவர்களுடைய சந்ததிகளில் நல்லவர்களும் இருக்கின்றனர்; பகிரங்கமாக தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்(ட கெட்)டவர்களும் இருக்கின்றனர். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௧௩)
Jan Trust Foundation
இன்னும் நாம் அவர் மீதும் இஸ்ஹாக் மீதும் பாக்கியங்கள் பொழிந்தோம்; மேலும் அவ்விருவருடைய சந்ததியரில் நன்மை செய்பவர்களும் இருக்கின்றார்கள்; அன்றியும் தமக்குத் தாமே பகிரங்கமாக அநியாயம் செய்து கொள்வோரும் இருக்கின்றனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவருக்கும் இஸ்ஹாக்கிற்கும் அருள் வளம் புரிந்தோம். அவ்விருவரின் சந்ததியில் நல்லவரும் தனக்கு தெளிவாக தீங்கிழைத்தவரும் இருக்கின்றனர்.