௮௧
اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِيْنَ ٨١
- innahu
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவர்
- min ʿibādinā
- مِنْ عِبَادِنَا
- நமது அடியார்களில்
- l-mu'minīna
- ٱلْمُؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்களான
(நூஹ் நபி) நம்பிக்கையுள்ள நமது அடியார்களில் ஒருவராகவே இருந்தார். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௮௧)Tafseer
௮௨
ثُمَّ اَغْرَقْنَا الْاٰخَرِيْنَ ٨٢
- thumma
- ثُمَّ
- பிறகு
- aghraqnā
- أَغْرَقْنَا
- நாம் மூழ்கடித்தோம்
- l-ākharīna
- ٱلْءَاخَرِينَ
- மற்றவர்களை
(ஆகவே, அவரையும் அவரைப் பின்பற்றியவர்களையும் தவிர,) மற்றவர்களை (வெள்ளப் பிரளயத்தில்) நாம் மூழ்கடித்து விட்டோம். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௮௨)Tafseer
௮௩
وَاِنَّ مِنْ شِيْعَتِهٖ لَاِبْرٰهِيْمَ ۘ ٨٣
- wa-inna
- وَإِنَّ
- நிச்சயமாக
- min shīʿatihi
- مِن شِيعَتِهِۦ
- அவரது கொள்கையை சேர்ந்தவர்களில்
- la-ib'rāhīma
- لَإِبْرَٰهِيمَ
- இப்ராஹீம்
இப்ராஹீம் நூஹ் (நபி) உடைய வழியைப் பின்பற்றியவர் தான். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௮௩)Tafseer
௮௪
اِذْ جَاۤءَ رَبَّهٗ بِقَلْبٍ سَلِيْمٍۙ ٨٤
- idh jāa
- إِذْ جَآءَ
- அவர் வந்த சமயத்தை நினைவு கூர்வீராக!
- rabbahu
- رَبَّهُۥ
- தனது இறைவனிடம்
- biqalbin
- بِقَلْبٍ
- உள்ளத்துடன்
- salīmin
- سَلِيمٍ
- ஈடேற்றம் பெற்ற
அவர் (பண்பட்ட) நேரான உள்ளத்துடன் தன் இறைவனிடம் வந்த சமயத்தில், ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௮௪)Tafseer
௮௫
اِذْ قَالَ لِاَبِيْهِ وَقَوْمِهٖ مَاذَا تَعْبُدُوْنَ ۚ ٨٥
- idh qāla
- إِذْ قَالَ
- அவர் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!
- li-abīhi
- لِأَبِيهِ
- தனது தந்தைக்கு(ம்)
- waqawmihi
- وَقَوْمِهِۦ
- தனது மக்களுக்கும்
- mādhā
- مَاذَا
- எதை
- taʿbudūna
- تَعْبُدُونَ
- நீங்கள் வணங்குகிறீர்கள்
அவர் தன் தந்தையையும், தன் மக்களையும் நோக்கி "நீங்கள் எதனை வணங்குகிறீர்கள்?" என்று கேட்டு, ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௮௫)Tafseer
௮௬
اَىِٕفْكًا اٰلِهَةً دُوْنَ اللّٰهِ تُرِيْدُوْنَۗ ٨٦
- a-if'kan
- أَئِفْكًا
- ālihatan
- ءَالِهَةً
- பல பொய்யான தெய்வங்களையா
- dūna l-lahi
- دُونَ ٱللَّهِ
- அல்லாஹ்வை அன்றி
- turīdūna
- تُرِيدُونَ
- நீங்கள் நாடுகிறீர்கள்
"நீங்கள் அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்களையே விரும்புகிறீர்களா? ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௮௬)Tafseer
௮௭
فَمَا ظَنُّكُمْ بِرَبِّ الْعٰلَمِيْنَ ٨٧
- famā ẓannukum
- فَمَا ظَنُّكُم
- உங்கள் எண்ணம் என்ன?
- birabbi
- بِرَبِّ
- இறைவனைப் பற்றி
- l-ʿālamīna
- ٱلْعَٰلَمِينَ
- அகிலங்களின்
அவ்வாறாயின், உலகத்தாரைப் படைத்து வளர்த்து வரும் இறைவனைப் பற்றி உங்கள் எண்ணம் என்ன?" என்று கேட்டார். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௮௭)Tafseer
௮௮
فَنَظَرَ نَظْرَةً فِى النُّجُوْمِۙ ٨٨
- fanaẓara
- فَنَظَرَ
- அவர் பார்த்தார்
- naẓratan
- نَظْرَةً
- ஒரு பார்வை
- fī l-nujūmi
- فِى ٱلنُّجُومِ
- நட்சத்திரங்களின் பக்கம்
"பின்னர், நட்சத்திரங்களைக் கூர்ந்து பார்த்து, ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௮௮)Tafseer
௮௯
فَقَالَ اِنِّيْ سَقِيْمٌ ٨٩
- faqāla
- فَقَالَ
- அவர் கூறினார்
- innī
- إِنِّى
- நிச்சயமாக நான்
- saqīmun
- سَقِيمٌ
- ஒரு நோயாளி
நிச்சயமாக எனக்கு ஒரு நோய் ஏற்படும் போல் இருக்கின்றது" என்று கூறவே, ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௮௯)Tafseer
௯௦
فَتَوَلَّوْا عَنْهُ مُدْبِرِيْنَ ٩٠
- fatawallaw
- فَتَوَلَّوْا۟
- ஆகவே, அவர்கள் விலகிச் சென்றனர்
- ʿanhu
- عَنْهُ
- அவரை விட்டு
- mud'birīna
- مُدْبِرِينَ
- முகம் திருப்பியவர்களாக
அவர்கள் அவரை விட்டுவிட்டு (திருநாள் கொண்டாடச்) சென்றுவிட்டனர். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௯௦)Tafseer