Skip to content

ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் - Page: 7

As-Saffat

(aṣ-Ṣāffāt)

௬௧

لِمِثْلِ هٰذَا فَلْيَعْمَلِ الْعٰمِلُوْنَ ٦١

limith'li
لِمِثْلِ
போன்றதற்காக
hādhā
هَٰذَا
இது
falyaʿmali
فَلْيَعْمَلِ
அமல் செய்யட்டும்.
l-ʿāmilūna
ٱلْعَٰمِلُونَ
அமல்செய்பவர்கள்
ஏதும் நன்மை செய்யக்கூடியவர்கள் எல்லோரும் இதைப்போன்ற (நற்பேறுகளை பெறுவதற்காக) பாடுபடவும். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௬௧)
Tafseer
௬௨

اَذٰلِكَ خَيْرٌ نُّزُلًا اَمْ شَجَرَةُ الزَّقُّوْمِ ٦٢

adhālika khayrun
أَذَٰلِكَ خَيْرٌ
அது மிகச் சிறந்ததா
nuzulan
نُّزُلًا
விருந்தோம்பலால்
am
أَمْ
அல்லது
shajaratu
شَجَرَةُ
மரமா
l-zaqūmi
ٱلزَّقُّومِ
ஸக்கூம்
(அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைக்கும்) இது மேலான விருந்தா? அல்லது (நரகத்திலிருக்கும்) கள்ளி மரம் மேலான விருந்தா? ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௬௨)
Tafseer
௬௩

اِنَّا جَعَلْنٰهَا فِتْنَةً لِّلظّٰلِمِيْنَ ٦٣

innā
إِنَّا
நிச்சயமாக நாம்
jaʿalnāhā
جَعَلْنَٰهَا
அதை ஆக்கினோம்
fit'natan
فِتْنَةً
ஒரு சோதனையாக
lilẓẓālimīna
لِّلظَّٰلِمِينَ
இணைவைப்ப வர்களுக்கு
(மனிதர்களே!) நிச்சயமாக நாம் அதனை இந்த அநியாயக்காரர்களை வேதனை செய்வதற்காகவே உண்டுபண்ணி இருக்கிறோம். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௬௩)
Tafseer
௬௪

اِنَّهَا شَجَرَةٌ تَخْرُجُ فِيْٓ اَصْلِ الْجَحِيْمِۙ ٦٤

innahā
إِنَّهَا
நிச்சயமாக அது
shajaratun
شَجَرَةٌ
ஒரு மரமாகும்
takhruju
تَخْرُجُ
முளைக்கின்ற(து)
fī aṣli l-jaḥīmi
فِىٓ أَصْلِ ٱلْجَحِيمِ
நரகத்தின் அடியில்
மெய்யாகவே அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வெளிப்பட்ட ஒரு மரமாகும். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௬௪)
Tafseer
௬௫

طَلْعُهَا كَاَنَّهٗ رُءُوْسُ الشَّيٰطِيْنِ ٦٥

ṭalʿuhā
طَلْعُهَا
அதன் கனிகள்
ka-annahu
كَأَنَّهُۥ
போல் இருக்கும்
ruūsu
رُءُوسُ
தலைகளை
l-shayāṭīni
ٱلشَّيَٰطِينِ
ஷைத்தான்களின்
அதன் கிளைகள் ஷைத்தானின் தலைகளைப் போல் இருக்கும். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௬௫)
Tafseer
௬௬

فَاِنَّهُمْ لَاٰكِلُوْنَ مِنْهَا فَمَالِـُٔوْنَ مِنْهَا الْبُطُوْنَۗ ٦٦

fa-innahum
فَإِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
laākilūna
لَءَاكِلُونَ
சாப்பிடுவார்கள்
min'hā
مِنْهَا
அதிலிருந்து
famāliūna
فَمَالِـُٔونَ
இன்னும் நிரப்புவார்கள்
min'hā
مِنْهَا
அதிலிருந்து
l-buṭūna
ٱلْبُطُونَ
வயிறுகளை
நிச்சயமாக அவர்கள் (தங்கள் பசிக்கொடுமையினால்) அதனை புசிப்பார்கள்! இன்னும் அதிலிருந்தே (தங்கள்) வயிற்றை நிரப்பிக் கொண்டிருப்பார்கள். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௬௬)
Tafseer
௬௭

ثُمَّ اِنَّ لَهُمْ عَلَيْهَا لَشَوْبًا مِّنْ حَمِيْمٍۚ ٦٧

thumma
ثُمَّ
பின்னர்
inna
إِنَّ
நிச்சயமாக
lahum
لَهُمْ
அவர்களுக்கு
ʿalayhā
عَلَيْهَا
அதற்கு மேல்
lashawban
لَشَوْبًا
கலக்கப்படும்
min ḥamīmin
مِّنْ حَمِيمٍ
கொதி நீரில் இருந்து
பின்னர், அதற்கு மேலும் நரகத்தில் கொதித்துக் காய்ந்திருக்கும் (சீழ் கலந்த) தண்ணீரே அவர்களுக்கு குடிப்பாகக் கொடுக்கப்படும். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௬௭)
Tafseer
௬௮

ثُمَّ اِنَّ مَرْجِعَهُمْ لَاِلَى الْجَحِيْمِ ٦٨

thumma inna
ثُمَّ إِنَّ
பிறகு நிச்சயமாக
marjiʿahum
مَرْجِعَهُمْ
அவர்களின் மீளுமிடம்
la-ilā l-jaḥīmi
لَإِلَى ٱلْجَحِيمِ
நரக நெருப்பின் பக்கம்தான்
(இவைகளைப் புசித்துக் குடித்த பின்னர்,) நிச்சயமாக "ஜஹீம்" என்ற நரகத்திற்கே திருப்பப்படுவார்கள். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௬௮)
Tafseer
௬௯

اِنَّهُمْ اَلْفَوْا اٰبَاۤءَهُمْ ضَاۤلِّيْنَۙ ٦٩

innahum
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
alfaw
أَلْفَوْا۟
பெற்றார்கள்
ābāahum
ءَابَآءَهُمْ
தங்கள் மூதாதைகளை
ḍāllīna
ضَآلِّينَ
வழிகெட்டவர்களாக
இவர்கள் தங்கள் மூதாதைகளை மெய்யாகவே வழி கெட்டவர்களாகக் கண்டு கொண்டார்கள். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௬௯)
Tafseer
௭௦

فَهُمْ عَلٰٓى اٰثٰرِهِمْ يُهْرَعُوْنَ ٧٠

fahum
فَهُمْ
இவர்கள்
ʿalā āthārihim
عَلَىٰٓ ءَاثَٰرِهِمْ
அவர்களின் அடிச்சுவடுகளில்
yuh'raʿūna
يُهْرَعُونَ
விரைகின்றார்கள்
அவ்வாறிருந்தும், அவர்களுடைய அடிச்சுவட்டையே இவர்கள் பின்பற்றி ஓடினார்கள். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௭௦)
Tafseer