Skip to content

ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் - Page: 4

As-Saffat

(aṣ-Ṣāffāt)

௩௧

فَحَقَّ عَلَيْنَا قَوْلُ رَبِّنَآ ۖاِنَّا لَذَاۤىِٕقُوْنَ ٣١

faḥaqqa
فَحَقَّ
ஆகவே, உறுதியாகிவிட்டது
ʿalaynā
عَلَيْنَا
நம் மீது
qawlu
قَوْلُ
வாக்கு
rabbinā
رَبِّنَآۖ
நமது இறைவனுடைய
innā
إِنَّا
நிச்சயமாக நாம்
ladhāiqūna
لَذَآئِقُونَ
சுவைப்பவர்கள்தான்
ஆதலால், எங்கள் இறைவனுடைய வாக்கு எங்களுக்கு உண்மையாகி விட்டது. நிச்சயமாக நாம் அனைவரும் (வேதனையைச்) சுவைக்க வேண்டியவர்களே. ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௩௧)
Tafseer
௩௨

فَاَغْوَيْنٰكُمْ اِنَّا كُنَّا غٰوِيْنَ ٣٢

fa-aghwaynākum
فَأَغْوَيْنَٰكُمْ
ஆக, நாங்கள் உங்களை வழி கெடுத்தோம்
innā kunnā
إِنَّا كُنَّا
நிச்சயமாக நாங்கள் இருந்தோம்
ghāwīna
غَٰوِينَ
வழி கெட்டவர்களாகவே
நிச்சயமாக நாங்கள் உங்களை வழிகெடுத்தோம். ஏனென்றால், நாங்கள் வழிகெட்டே போயிருந்தோம் என்று கூறுவார்கள். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௩௨)
Tafseer
௩௩

فَاِنَّهُمْ يَوْمَىِٕذٍ فِى الْعَذَابِ مُشْتَرِكُوْنَ ٣٣

fa-innahum
فَإِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
fī l-ʿadhābi
فِى ٱلْعَذَابِ
வேதனையில்
mush'tarikūna
مُشْتَرِكُونَ
கூட்டாகுவார்கள்
முடிவில் நிச்சயமாக அவர்கள் அனைவரும் அன்றைய தினம் வேதனையில் (சம) பங்காளியாக இருப்பார்கள். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௩௩)
Tafseer
௩௪

اِنَّا كَذٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِيْنَ ٣٤

innā
إِنَّا
நிச்சயமாக நாம்
kadhālika
كَذَٰلِكَ
இப்படித்தான்
nafʿalu
نَفْعَلُ
நடந்து கொள்வோம்
bil-muj'rimīna
بِٱلْمُجْرِمِينَ
குற்றவாளிகளுடன்
நிச்சயமாக நாம், குற்றவாளிகளை இவ்வாறே நடத்துவோம். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௩௪)
Tafseer
௩௫

اِنَّهُمْ كَانُوْٓا اِذَا قِيْلَ لَهُمْ لَآ اِلٰهَ اِلَّا اللّٰهُ يَسْتَكْبِرُوْنَ ۙ ٣٥

innahum
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
kānū
كَانُوٓا۟
இருந்தனர்
idhā qīla
إِذَا قِيلَ
கூறப்பட்டால்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
لَآ
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
illā l-lahu
إِلَّا ٱللَّهُ
அல்லாஹ்வைத் தவிர
yastakbirūna
يَسْتَكْبِرُونَ
பெருமை அடிப்பவர்களாக
"அல்லாஹ்வைத் தவிர (உங்களுக்கு) வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இல்லை; (அவனையே நீங்கள் வணங்குங்கள்)" என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், நிச்சயமாக அவர்கள் கர்வம் கொண்டு, ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௩௫)
Tafseer
௩௬

وَيَقُوْلُوْنَ اَىِٕنَّا لَتَارِكُوْٓا اٰلِهَتِنَا لِشَاعِرٍ مَّجْنُوْنٍ ۗ ٣٦

wayaqūlūna
وَيَقُولُونَ
கூறுகின்றனர்
a-innā
أَئِنَّا
?/நிச்சயமாக நாங்கள்
latārikū
لَتَارِكُوٓا۟
விட்டுவிடுவோம்
ālihatinā
ءَالِهَتِنَا
எங்கள் தெய்வங்களை
lishāʿirin
لِشَاعِرٍ
ஒரு கவிஞருக்காக
majnūnin
مَّجْنُونٍۭ
பைத்தியக்காரரான
"என்னே! நாங்கள் பைத்தியம் பிடித்த ஒரு கவிஞருக்காக எங்களுடைய தெய்வங்களை மெய்யாகவே விட்டு விடுவோமா?" என்றும் அவர்கள் கூறுகின்றனர். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௩௬)
Tafseer
௩௭

بَلْ جَاۤءَ بِالْحَقِّ وَصَدَّقَ الْمُرْسَلِيْنَ ٣٧

bal jāa bil-ḥaqi
بَلْ جَآءَ بِٱلْحَقِّ
மாறாக அவர் சத்தியத்தைக் கொண்டு வந்தார்
waṣaddaqa
وَصَدَّقَ
இன்னும் உண்மைப்படுத்தினார்
l-mur'salīna
ٱلْمُرْسَلِينَ
தூதர்களை
"(அவர் பைத்தியக்காரர்) அன்று. அவர் உண்மையையே கொண்டு வந்தார். (தனக்கு முன்னர் வந்த) நபிமார்களையும் அவர் உண்மையாக்கி வைத்தார். (இவற்றை எல்லாம் நீங்கள் பொய்யாக்கி விட்டீர்கள்.) ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௩௭)
Tafseer
௩௮

اِنَّكُمْ لَذَاۤىِٕقُوا الْعَذَابِ الْاَلِيْمِ ۚ ٣٨

innakum
إِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
ladhāiqū
لَذَآئِقُوا۟
சுவைப்பீர்கள்
l-ʿadhābi
ٱلْعَذَابِ
வேதனையை
l-alīmi
ٱلْأَلِيمِ
வலிதரும்
ஆதலால், நிச்சயமாக நீங்கள் துன்புறுத்தும் வேதனையை அனுபவிக்க வேண்டியதுதான். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௩௮)
Tafseer
௩௯

وَمَا تُجْزَوْنَ اِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَۙ ٣٩

wamā tuj'zawna
وَمَا تُجْزَوْنَ
நீங்கள் கூலி கொடுக்கப்படமாட்டீர்கள்
illā
إِلَّا
அன்றி
mā kuntum taʿmalūna
مَا كُنتُمْ تَعْمَلُونَ
நீங்கள் செய்து வந்ததற்கே
நீங்கள் செய்துகொண்டிருந்தவைகளுக்கன்றி உங்களுக்குக் கூலி கொடுக்கப்படவில்லை" (என்றும் கூறப்படும்). ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௩௯)
Tafseer
௪௦

اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ ٤٠

illā
إِلَّا
தவிர
ʿibāda
عِبَادَ
அடியார்களை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
l-mukh'laṣīna
ٱلْمُخْلَصِينَ
பரிசுத்தமான
கலப்பற்ற மனத்தூய்மையுடைய அல்லாஹ்வுடைய அடியார்களைத் தவிர. ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௪௦)
Tafseer