௨௧
هٰذَا يَوْمُ الْفَصْلِ الَّذِيْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ ࣖ ٢١
- hādhā
- هَٰذَا
- இதுதான்
- yawmu
- يَوْمُ
- நாள்
- l-faṣli
- ٱلْفَصْلِ
- தீர்ப்பு
- alladhī kuntum
- ٱلَّذِى كُنتُم
- எதை/நீங்கள் இருந்தீர்கள்
- bihi
- بِهِۦ
- இதை
- tukadhibūna
- تُكَذِّبُونَ
- பொய்ப்பிப்பவர்களாக
(அதற்கவர்களை நோக்கி) "நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த தீர்ப்பு நாள் இதுதான்" (என்றும் கூறப்படும்). ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௨௧)Tafseer
௨௨
اُحْشُرُوا الَّذِيْنَ ظَلَمُوْا وَاَزْوَاجَهُمْ وَمَا كَانُوْا يَعْبُدُوْنَ ۙ ٢٢
- uḥ'shurū
- ٱحْشُرُوا۟
- ஒன்று திரட்டுங்கள்!
- alladhīna ẓalamū
- ٱلَّذِينَ ظَلَمُوا۟
- அநியாயம் செய்தவர்களை
- wa-azwājahum
- وَأَزْوَٰجَهُمْ
- அவர்களின் இனத்தவர்களையும்
- wamā kānū yaʿbudūna
- وَمَا كَانُوا۟ يَعْبُدُونَ
- இன்னும் அவர்கள் வணங்கி வந்தவர்களையும்
அநியாயம் செய்தவர்களையும், அவர்களுடைய தோழர்களையும், அல்லாஹ்வை அன்றி அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களையும் ஒன்று சேர்த்து, ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௨௨)Tafseer
௨௩
مِنْ دُوْنِ اللّٰهِ فَاهْدُوْهُمْ اِلٰى صِرَاطِ الْجَحِيْمِ ٢٣
- min dūni l-lahi
- مِن دُونِ ٱللَّهِ
- அல்லாஹ்வையன்றி
- fa-ih'dūhum
- فَٱهْدُوهُمْ
- வழிகாட்டுங்கள் அவர்களுக்கு
- ilā ṣirāṭi
- إِلَىٰ صِرَٰطِ
- பாதைக்கு
- l-jaḥīmi
- ٱلْجَحِيمِ
- நரகத்தின்
"அவர்களை நரகத்திற்குக் கொண்டு செல்லுங்கள்" (என்றும்), ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௨௩)Tafseer
௨௪
وَقِفُوْهُمْ اِنَّهُمْ مَّسْـُٔوْلُوْنَ ۙ ٢٤
- waqifūhum
- وَقِفُوهُمْۖ
- நிறுத்துங்கள்! அவர்களை
- innahum
- إِنَّهُم
- நிச்சயமாக அவர்கள்
- masūlūna
- مَّسْـُٔولُونَ
- விசாரிக்கப்படுவார்கள்
"அங்கு அவர்களை நிறுத்தி வையுங்கள்; நிச்சயமாக அவர்களைக் (கேள்வி கணக்குக்) கேட்க வேண்டியதிருக்கின்றது" (என்றும் கூறப்படும்). ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௨௪)Tafseer
௨௫
مَا لَكُمْ لَا تَنَاصَرُوْنَ ٢٥
- mā
- مَا
- என்ன நேர்ந்தது?
- lakum
- لَكُمْ
- உங்களுக்கு
- lā tanāṣarūna
- لَا تَنَاصَرُونَ
- நீங்கள் உங்களுக்குள் உதவிக்கொள்ளவில்லை
"உங்களுக்கு என்ன நேர்ந்தது? (உலகத்தில் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டிருந்தபடி இங்கு) நீங்கள் ஏன் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளவில்லை" (என்றும் கேட்கப்படும்). ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௨௫)Tafseer
௨௬
بَلْ هُمُ الْيَوْمَ مُسْتَسْلِمُوْنَ ٢٦
- bal humu
- بَلْ هُمُ
- மாறாக அவர்கள்
- l-yawma
- ٱلْيَوْمَ
- இன்று
- mus'taslimūna
- مُسْتَسْلِمُونَ
- முற்றிலும் கீழ்ப்படிந்து விடுவார்கள்
எனினும், அன்றைய தினம் அவர்கள் தலை குனிந்த வர்களாக இருப்பார்கள். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௨௬)Tafseer
௨௭
وَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ يَّتَسَاۤءَلُوْنَ ٢٧
- wa-aqbala
- وَأَقْبَلَ
- முன்னோக்கி(னர்)
- baʿḍuhum
- بَعْضُهُمْ
- அவர்களில் சிலர்
- ʿalā baʿḍin
- عَلَىٰ بَعْضٍ
- சிலரை
- yatasāalūna
- يَتَسَآءَلُونَ
- விசாரித்துக் கொள்வார்கள்
அவர்களில் ஒருவர் மற்றொருவருடன் தர்க்கிக்க முற்பட்டு, ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௨௭)Tafseer
௨௮
قَالُوْٓا اِنَّكُمْ كُنْتُمْ تَأْتُوْنَنَا عَنِ الْيَمِيْنِ ٢٨
- qālū
- قَالُوٓا۟
- அவர்கள் கூறுவார்கள்
- innakum
- إِنَّكُمْ
- நிச்சயமாக நீங்கள்
- kuntum
- كُنتُمْ
- இருந்தீர்கள்
- tatūnanā
- تَأْتُونَنَا
- எங்களிடம் வருபவர்களாக
- ʿani l-yamīni
- عَنِ ٱلْيَمِينِ
- நன்மையை விட்டுத் தடுக்க
(சிலர் தங்கள் தலைவர்களை நோக்கி) "நிச்சயமாக நீங்கள் நம்மிடம் பலவந்தமாகவே வந்(து உங்களுக்கு வழிப்படும்படி எங்களை நிர்ப்பந்தித்)தீர்கள்" என்று கூறுவார்கள். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௨௮)Tafseer
௨௯
قَالُوْا بَلْ لَّمْ تَكُوْنُوْا مُؤْمِنِيْنَۚ ٢٩
- qālū
- قَالُوا۟
- அவர்கள் கூறுவார்கள்
- bal lam takūnū
- بَل لَّمْ تَكُونُوا۟
- மாறாக/நீங்கள் இருக்கவில்லை
- mu'minīna
- مُؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்களாக
அதற்கு அ(த்தலை)வர்கள் "அவ்வாறன்று. (நாங்கள் உங்களைத் தடை செய்யவில்லை.) நீங்கள்தாம் நம்பிக்கை கொள்ளவில்லை." ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௨௯)Tafseer
௩௦
وَمَا كَانَ لَنَا عَلَيْكُمْ مِّنْ سُلْطٰنٍۚ بَلْ كُنْتُمْ قَوْمًا طٰغِيْنَ ٣٠
- wamā kāna
- وَمَا كَانَ
- இருக்கவில்லை
- lanā
- لَنَا
- எங்களுக்கு
- ʿalaykum
- عَلَيْكُم
- உங்கள் மீது
- min sul'ṭānin
- مِّن سُلْطَٰنٍۭۖ
- எவ்வித அதிகாரமும்
- bal kuntum
- بَلْ كُنتُمْ
- மாறாக நீங்கள் இருந்தீர்கள்
- qawman
- قَوْمًا
- மக்களாக
- ṭāghīna
- طَٰغِينَ
- எல்லை மீறுகின்ற(வர்கள்)
"எங்களுக்கு உங்கள் மீது யாதொரு அதிகாரமும் இருக்கவில்லை. நீங்கள்தாம் பொல்லாத மக்களாக இருந்தீர்கள். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௩௦)Tafseer