Skip to content

ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் - Page: 2

As-Saffat

(aṣ-Ṣāffāt)

௧௧

فَاسْتَفْتِهِمْ اَهُمْ اَشَدُّ خَلْقًا اَمْ مَّنْ خَلَقْنَا ۗاِنَّا خَلَقْنٰهُمْ مِّنْ طِيْنٍ لَّازِبٍ ١١

fa-is'taftihim
فَٱسْتَفْتِهِمْ
அவர்களிடம் விளக்கம் கேட்பீராக!
ahum
أَهُمْ
?/அவர்கள்
ashaddu
أَشَدُّ
பலமிக்கவர்கள்
khalqan
خَلْقًا
படைப்பால்
am
أَم
அல்லது
man khalaqnā
مَّنْ خَلَقْنَآۚ
எவர்கள்/படைத்தோம்
innā
إِنَّا
நிச்சயமாக நாம்
khalaqnāhum
خَلَقْنَٰهُم
அவர்களை படைத்தோம்
min ṭīnin
مِّن طِينٍ
மண்ணிலிருந்து
lāzibin
لَّازِبٍۭ
பிசுபிசுப்பான
(நபியே!) இந்நிராகரிப்பவர்களை நீங்கள் கேளுங்கள்: (இறந்த பின்) உங்களைப் படைப்பது கஷ்டமா? அல்லது நாம் படைத்திருக்கும் (வானம், பூமி, நட்சத்திரங்கள் ஆகிய) இவைகளைப் படைப்பது கஷ்டமா? நிச்சயமாக நாம் இவர்களைப் பிசு பிசுப்பான களிமண்ணால்தான் படைத்திருக்கின்றோம். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௧)
Tafseer
௧௨

بَلْ عَجِبْتَ وَيَسْخَرُوْنَ ۖ ١٢

bal
بَلْ
மாறாக
ʿajib'ta
عَجِبْتَ
நீர் ஆச்சரியப்பட்டீர்
wayaskharūna
وَيَسْخَرُونَ
அவர்கள் பரிகாசிக்கின்றனர்
(நபியே!) நீங்கள் (அல்லாஹ்வின் வல்லமையைக் கண்டு) ஆச்சரியப்படுகின்றீர்கள்; அவர்களோ (அதனைப்) பரிகசிக் கின்றனர். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௨)
Tafseer
௧௩

وَاِذَا ذُكِّرُوْا لَا يَذْكُرُوْنَ ۖ ١٣

wa-idhā dhukkirū
وَإِذَا ذُكِّرُوا۟
அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டால்
lā yadhkurūna
لَا يَذْكُرُونَ
அறிவுரை பெறமாட்டார்கள்
அன்றி, அவர்களுக்கு நல்லுபதேசம் கூறியபோதிலும் அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதேயில்லை. ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௩)
Tafseer
௧௪

وَاِذَا رَاَوْا اٰيَةً يَّسْتَسْخِرُوْنَۖ ١٤

wa-idhā ra-aw
وَإِذَا رَأَوْا۟
அவர்கள் பார்த்தால்
āyatan
ءَايَةً
ஓர் அத்தாட்சியை
yastaskhirūna
يَسْتَسْخِرُونَ
பரிகாசம் செய்கிறார்கள்
எந்த அத்தாட்சியைக் கண்டபோதிலும் அவர்கள் பரிகாசம் செய்கின்றனர். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௪)
Tafseer
௧௫

وَقَالُوْٓا اِنْ هٰذَآ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ ۚ ١٥

waqālū
وَقَالُوٓا۟
கூறுகின்றனர்
in hādhā
إِنْ هَٰذَآ
இது இல்லை
illā siḥ'run
إِلَّا سِحْرٌ
சூனியமே தவிர
mubīnun
مُّبِينٌ
தெளிவான
அன்றி "இது பகிரங்கமான சூனியமேயன்றி வேறில்லை" என்றும் கூறுகின்றனர். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௫)
Tafseer
௧௬

ءَاِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَۙ ١٦

a-idhā mit'nā
أَءِذَا مِتْنَا
?/நாங்கள் இறந்து விட்டால்
wakunnā turāban
وَكُنَّا تُرَابًا
மண்ணாக(வும்) மாறிவிட்டால்
waʿiẓāman
وَعِظَٰمًا
எலும்புகளாகவும்
a-innā
أَءِنَّا
?/நிச்சயமாக நாங்கள்
lamabʿūthūna
لَمَبْعُوثُونَ
எழுப்பப்படுவோம்
"நாம் இறந்து (உக்கி) எலும்பாகவும் மண்ணாகவும், போன பின்னர் மெய்யாகவே நாம் எழுப்பப்படுவோமா? (என்றும்) ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௬)
Tafseer
௧௭

اَوَاٰبَاۤؤُنَا الْاَوَّلُوْنَۗ ١٧

awaābāunā
أَوَءَابَآؤُنَا
இன்னும் எங்கள் முன்னோர்களுமா?
l-awalūna
ٱلْأَوَّلُونَ
முந்திய
(அவ்வாறே) நம்முடைய மூதாதைகளுமா? (எழுப்பப் படுவார்கள்" என்றும் பரிகாசமாகக் கூறுகின்றனர்.) ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௭)
Tafseer
௧௮

قُلْ نَعَمْ وَاَنْتُمْ دَاخِرُوْنَۚ ١٨

qul
قُلْ
கூறுவீராக!
naʿam
نَعَمْ
ஆம்
wa-antum
وَأَنتُمْ
நீங்கள்
dākhirūna
دَٰخِرُونَ
மிகவும் சிறுமைப்பட்டவர்களாக
அதற்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "மெய்தான். (எழுப்பப்படுவீர்கள்.) அச்சமயம் நீங்கள் சிறுமைப்பட்டவர்களாக இருப்பீர்கள். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௮)
Tafseer
௧௯

فَاِنَّمَا هِيَ زَجْرَةٌ وَّاحِدَةٌ فَاِذَا هُمْ يَنْظُرُوْنَ ١٩

fa-innamā hiya
فَإِنَّمَا هِىَ
அதுவெல்லாம்
zajratun
زَجْرَةٌ
பலமான சப்தம்தான்
wāḥidatun
وَٰحِدَةٌ
ஒரே ஒரு
fa-idhā hum yanẓurūna
فَإِذَا هُمْ يَنظُرُونَ
அப்போது அவர்கள் பார்ப்பார்கள்
அது ஒரே ஒரு சப்தம்தான்; உடனே அவர்கள் (எழுந்து நின்று திருதிருவென்று) விழிப்பார்கள். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௯)
Tafseer
௨௦

وَقَالُوْا يٰوَيْلَنَا هٰذَا يَوْمُ الدِّيْنِ ٢٠

waqālū
وَقَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
yāwaylanā
يَٰوَيْلَنَا
எங்கள் நாசமே!
hādhā yawmu
هَٰذَا يَوْمُ
இதுதான்/நாள்
l-dīni
ٱلدِّينِ
கூலி கொடுக்கப்படும்
நாங்கள் கெட்டோம்! இது கூலி கொடுக்கும் நாளாயிற்றே" என்றும் அவர்கள் கூறுவார்கள். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௨௦)
Tafseer