Skip to content

ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் - Page: 16

As-Saffat

(aṣ-Ṣāffāt)

௧௫௧

اَلَآ اِنَّهُمْ مِّنْ اِفْكِهِمْ لَيَقُوْلُوْنَۙ ١٥١

alā
أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
innahum
إِنَّهُم
நிச்சயமாக அவர்கள்
min if'kihim
مِّنْ إِفْكِهِمْ
தங்களது பெரும் பொய்யில்
layaqūlūna
لَيَقُولُونَ
அவர்கள் கூறுகின்றனர்
இவர்கள் கற்பனையான பொய்யையே கூறுகிறார்கள் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௫௧)
Tafseer
௧௫௨

وَلَدَ اللّٰهُ ۙوَاِنَّهُمْ لَكٰذِبُوْنَۙ ١٥٢

walada l-lahu
وَلَدَ ٱللَّهُ
அல்லாஹ் குழந்தை பெற்றெடுத்தான்
wa-innahum
وَإِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
lakādhibūna
لَكَٰذِبُونَ
பொய்யர்கள்
அல்லாஹ் (பிள்ளைகளைப்) பெற்றான் என்று கூறும் இவர்கள் நிச்சயமாகப் பொய்யர்களே! ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௫௨)
Tafseer
௧௫௩

اَصْطَفَى الْبَنَاتِ عَلَى الْبَنِيْنَۗ ١٥٣

aṣṭafā
أَصْطَفَى
அவன் தேர்தெடுத்துக் கொண்டானா?
l-banāti
ٱلْبَنَاتِ
பெண் பிள்ளைகளை
ʿalā l-banīna
عَلَى ٱلْبَنِينَ
ஆண் பிள்ளைகளை விட
(அதிலும்) ஆண் சந்ததிகளைவிட்டு, பெண் சந்ததிகளையா அவன் தேர்ந்தெடுத்துக் கொண்டான்? ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௫௩)
Tafseer
௧௫௪

مَا لَكُمْۗ كَيْفَ تَحْكُمُوْنَ ١٥٤

mā lakum
مَا لَكُمْ
உங்களுக்கு என்ன?
kayfa
كَيْفَ
எப்படி
taḥkumūna
تَحْكُمُونَ
தீர்ப்பளிக்கிறீர்கள்
(இவ்வாறு கூற) உங்களுக்கு என்ன நியாயம் (இருக்கிறது.) ஏன் இவ்வாறு (பொய்யாக) தீர்மானிக்கின்றீர்கள்? ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௫௪)
Tafseer
௧௫௫

اَفَلَا تَذَكَّرُوْنَۚ ١٥٥

afalā tadhakkarūna
أَفَلَا تَذَكَّرُونَ
நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?
நீங்கள் இதனை கவனித்துச் சிந்திக்க வேண்டாமா? ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௫௫)
Tafseer
௧௫௬

اَمْ لَكُمْ سُلْطٰنٌ مُّبِيْنٌۙ ١٥٦

am lakum
أَمْ لَكُمْ
உங்களிடம் ஏதும் இருக்கிறதா?
sul'ṭānun
سُلْطَٰنٌ
ஆதாரம்
mubīnun
مُّبِينٌ
தெளிவான
அல்லது உங்களுக்கு (இதற்காக யாதொரு) தெளிவான ஆதாரம் இருக்கிறதா? ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௫௬)
Tafseer
௧௫௭

فَأْتُوْا بِكِتٰبِكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ١٥٧

fatū bikitābikum
فَأْتُوا۟ بِكِتَٰبِكُمْ
உங்கள் வேதத்தை கொண்டு வாருங்கள்
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக
(கிறிஸ்தவர்களே! அவ்வாறு) நீங்கள் கூறுவது உண்மையாகவே இருப்பின், அதற்கு உங்கள் வேதத்தை ஆதாரமாகக் கொண்டு வாருங்கள். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௫௭)
Tafseer
௧௫௮

وَجَعَلُوْا بَيْنَهٗ وَبَيْنَ الْجِنَّةِ نَسَبًا ۗوَلَقَدْ عَلِمَتِ الْجِنَّةُ اِنَّهُمْ لَمُحْضَرُوْنَۙ ١٥٨

wajaʿalū
وَجَعَلُوا۟
அவர்கள் ஏற்படுத்தினர்
baynahu
بَيْنَهُۥ
அவனுக்கு இடையில்
wabayna
وَبَيْنَ
இன்னும் இடையில்
l-jinati
ٱلْجِنَّةِ
ஜின்களுக்கு
nasaban
نَسَبًاۚ
ஓர் உறவை
walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
ʿalimati
عَلِمَتِ
அறிந்து கொண்டனர்
l-jinatu
ٱلْجِنَّةُ
ஜின்கள்
innahum
إِنَّهُمْ
நிச்சயமாக தாங்கள்
lamuḥ'ḍarūna
لَمُحْضَرُونَ
ஆஜர்படுத்தப்படுவோம்
(நபியே!) இவர்கள் அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்கும் இடையில் பந்துத்துவத்தைக் கற்பனை செய்கின்றனர். ஆயினும், ஜின்களோ (தாங்கள் குற்றம் செய்தால் தண்டனைக்காக) நிச்சயமாக அவனிடம் கொண்டு வரப்படுவோம் என்று திட்டமாக அறிந்து இருக்கின்றனர். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௫௮)
Tafseer
௧௫௯

سُبْحٰنَ اللّٰهِ عَمَّا يَصِفُوْنَۙ ١٥٩

sub'ḥāna
سُبْحَٰنَ
மிகப் பரிசுத்தமானவன்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
ʿammā yaṣifūna
عَمَّا يَصِفُونَ
அவர்கள் வர்ணிப்பதை விட்டும்
அவர்கள் கூறும் இவ்வர்ணிப்புகளை விட்டு அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௫௯)
Tafseer
௧௬௦

اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ ١٦٠

illā
إِلَّا
தவிர
ʿibāda
عِبَادَ
அடியார்களை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
l-mukh'laṣīna
ٱلْمُخْلَصِينَ
பரிசுத்தமான
கலப்பற்ற நம்பிக்கையுள்ள அல்லாஹ்வின் அடியார்களோ, (தப்பாண எண்ணம் கொள்ளாததனால்) தண்டனைக்குள்ளாக மாட்டார்கள். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௬௦)
Tafseer