Skip to content

ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் - Page: 15

As-Saffat

(aṣ-Ṣāffāt)

௧௪௧

فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِيْنَۚ ١٤١

fasāhama
فَسَاهَمَ
குலுக்கிப் போட்டார்
fakāna
فَكَانَ
ஆகிவிட்டார்
mina l-mud'ḥaḍīna
مِنَ ٱلْمُدْحَضِينَ
குலுக்கலில் பெயர்வந்தவர்களில்
அ(க் கப்பலிலுள்ள)வர்கள் (திருவுளச்) சீட்டுப் போட்டதில் இவர் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௪௧)
Tafseer
௧௪௨

فَالْتَقَمَهُ الْحُوْتُ وَهُوَ مُلِيْمٌ ١٤٢

fal-taqamahu
فَٱلْتَقَمَهُ
அவரை விழுங்கியது
l-ḥūtu
ٱلْحُوتُ
திமிங்கிலம்
wahuwa
وَهُوَ
அவர்
mulīmun
مُلِيمٌ
பழிப்புக்குரியவர்
(அவ்வாறு அவர்கள் இவரை எறியவே) மீன் அவரை விழுங்கிவிட்டது. அச்சமயம், அவர் தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டிருந்தார். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௪௨)
Tafseer
௧௪௩

فَلَوْلَآ اَنَّهٗ كَانَ مِنَ الْمُسَبِّحِيْنَ ۙ ١٤٣

falawlā annahu kāna
فَلَوْلَآ أَنَّهُۥ كَانَ
நிச்சயமாக அவர் இருந்திருக்கவில்லை என்றால்
mina l-musabiḥīna
مِنَ ٱلْمُسَبِّحِينَ
துதிப்பவர்களில்
நிச்சயமாக அவர் நம்மைத் துதி செய்பவர்களில் ஒருவராக இல்லாதிருந்தால், ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௪௩)
Tafseer
௧௪௪

لَلَبِثَ فِيْ بَطْنِهٖٓ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَۚ ١٤٤

lalabitha
لَلَبِثَ
தங்கி இருந்திருப்பார்
fī baṭnihi
فِى بَطْنِهِۦٓ
அதனுடைய வயிற்றில்
ilā yawmi
إِلَىٰ يَوْمِ
நாள் வரை
yub'ʿathūna
يُبْعَثُونَ
எழுப்பப்படுகின்ற
(மறுமையில்) எழுப்பப்படும் நாள் (வரும்) வரையில் அவர் அதன் வயிற்றில் தங்கியிருந்திருப்பார். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௪௪)
Tafseer
௧௪௫

فَنَبَذْنٰهُ بِالْعَرَاۤءِ وَهُوَ سَقِيْمٌ ۚ ١٤٥

fanabadhnāhu
فَنَبَذْنَٰهُ
அவரை எறிந்தோம்
bil-ʿarāi
بِٱلْعَرَآءِ
பெருவெளியில்
wahuwa saqīmun
وَهُوَ سَقِيمٌ
அவர்/நோயுற்றவராக இருந்தார்
(அவர் துதி செய்திருப்பதன் காரணமாக) வெட்ட வெளியான பூமியில் (மீன் வயிற்றிலிருந்து) அவரை நாம் எறியச் செய்தோம். அச்சமயம் அவரோ மிக களைப்புடனும் சோர்வுடனும் இருந்தார். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௪௫)
Tafseer
௧௪௬

وَاَنْۢبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِّنْ يَّقْطِيْنٍۚ ١٤٦

wa-anbatnā
وَأَنۢبَتْنَا
முளைக்க வைத்தோம்
ʿalayhi
عَلَيْهِ
அவருக்கு அருகில்
shajaratan
شَجَرَةً
ஒரு செடியை
min yaqṭīnin
مِّن يَقْطِينٍ
சுரைக்காய்
ஆகவே, அவருக்கு (நிழலிடுவதற்காக) ஒரு சுரைச் செடியை முளைப்பித்தோம். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௪௬)
Tafseer
௧௪௭

وَاَرْسَلْنٰهُ اِلٰى مِائَةِ اَلْفٍ اَوْ يَزِيْدُوْنَۚ ١٤٧

wa-arsalnāhu
وَأَرْسَلْنَٰهُ
அவரைஅனுப்பினோம்
ilā mi-ati alfin
إِلَىٰ مِا۟ئَةِ أَلْفٍ
ஒரு இலட்சம்
aw
أَوْ
அல்லது
yazīdūna
يَزِيدُونَ
அதிகமானவர்களுக்கு
பின்னர், நாம் அவரை ஒரு நூறாயிரம் அல்லது அதற்கு அதிகமான மக்களிடம் நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௪௭)
Tafseer
௧௪௮

فَاٰمَنُوْا فَمَتَّعْنٰهُمْ اِلٰى حِيْنٍ ١٤٨

faāmanū
فَـَٔامَنُوا۟
நம்பிக்கைகொண்டனர்
famattaʿnāhum
فَمَتَّعْنَٰهُمْ
ஆகவே, நாம் அவர்களுக்கு சுகமளித்தோம்
ilā ḥīnin
إِلَىٰ حِينٍ
ஒரு காலம் வரை
அவர்கள் அனைவரும் நம்பிக்கை கொண்டார்கள். ஆதலால், நாமும் அவர்களை ஒரு (நீண்ட) காலம் வரையில் சுகமாக வாழவைத்தோம். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௪௮)
Tafseer
௧௪௯

فَاسْتَفْتِهِمْ اَلِرَبِّكَ الْبَنَاتُ وَلَهُمُ الْبَنُوْنَۚ ١٤٩

fa-is'taftihim
فَٱسْتَفْتِهِمْ
ஆகவே, அவர்களிடம் கேட்பீராக!
alirabbika
أَلِرَبِّكَ
உமது இறைவனுக்கு
l-banātu
ٱلْبَنَاتُ
பெண் பிள்ளைகளும்
walahumu
وَلَهُمُ
அவர்களுக்கு
l-banūna
ٱلْبَنُونَ
ஆண் பிள்ளைகளுமா
(நபியே!) அவர்களை நீங்கள் கேளுங்கள்: "(நீங்கள் வெறுக்கும்) பெண் மக்களை உங்கள் இறைவனுக்கும் உங்களுக்கு ஆண் மக்களையுமா? (விரும்புகின்றீர்கள்.) ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௪௯)
Tafseer
௧௫௦

اَمْ خَلَقْنَا الْمَلٰۤىِٕكَةَ اِنَاثًا وَّهُمْ شَاهِدُوْنَ ١٥٠

am
أَمْ
?
khalaqnā
خَلَقْنَا
நாம் படைத்தோம்
l-malāikata
ٱلْمَلَٰٓئِكَةَ
வானவர்களை
ināthan
إِنَٰثًا
பெண்களாகவா
wahum
وَهُمْ
அவர்கள்
shāhidūna
شَٰهِدُونَ
பார்த்துக்கொண்டு இருந்தார்களா?
அல்லது நாம் மலக்குகளைப் பெண்களாக படைத்த(தாகக் கூறுகின்றனரே அ)தை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா? ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௫௦)
Tafseer