Skip to content

ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் - Page: 13

As-Saffat

(aṣ-Ṣāffāt)

௧௨௧

اِنَّا كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ ١٢١

innā
إِنَّا
நிச்சயமாக நாம்
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
najzī
نَجْزِى
கூலி கொடுப்போம்
l-muḥ'sinīna
ٱلْمُحْسِنِينَ
நல்லவர்களுக்கு
நிச்சயமாக நாம் இவ்வாறே நன்மை செய்தவர்களுக்குக் கூலி கொடுக்கின்றோம். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௨௧)
Tafseer
௧௨௨

اِنَّهُمَا مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِيْنَ ١٢٢

innahumā
إِنَّهُمَا
நிச்சயமாக அவ்விருவரும்
min ʿibādinā
مِنْ عِبَادِنَا
நமது அடியார்களில் உள்ளவர்கள்
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களான
நிச்சயமாக அவ்விருவரும், நம்பிக்கை கொண்ட நமது அடியார்களாகவே இருந்தனர். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௨௨)
Tafseer
௧௨௩

وَاِنَّ اِلْيَاسَ لَمِنَ الْمُرْسَلِيْنَۗ ١٢٣

wa-inna
وَإِنَّ
இன்னும் நிச்சயமாக
il'yāsa
إِلْيَاسَ
இல்யாஸ்
lamina l-mur'salīna
لَمِنَ ٱلْمُرْسَلِينَ
தூதர்களில் உள்ளவர்தான்
நிச்சயமாக இல்யாஸும் நமது தூதர்களில் ஒருவர்தான். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௨௩)
Tafseer
௧௨௪

اِذْ قَالَ لِقَوْمِهٖٓ اَلَا تَتَّقُوْنَ ١٢٤

idh qāla
إِذْ قَالَ
அவர் கூறிய சமயத்தை
liqawmihi
لِقَوْمِهِۦٓ
தனது மக்களுக்கு
alā tattaqūna
أَلَا تَتَّقُونَ
நீங்கள் அஞ்சிக் கொள்ள மாட்டீர்களா?
அவர் தன் மக்களை நோக்கி, "நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்பட வேண்டாமா?" என்று கூறிய சமயத்தில், ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௨௪)
Tafseer
௧௨௫

اَتَدْعُوْنَ بَعْلًا وَّتَذَرُوْنَ اَحْسَنَ الْخَالِقِيْنَۙ ١٢٥

atadʿūna
أَتَدْعُونَ
நீங்கள் வணங்குகிறீர்களா?
baʿlan
بَعْلًا
பஃலை
watadharūna
وَتَذَرُونَ
விட்டுவிடுகிறீர்களா?
aḥsana
أَحْسَنَ
மிக அழகியவனை
l-khāliqīna
ٱلْخَٰلِقِينَ
படைப்பாளர்களில்
"படைப்பவர்களில் மிக அழகானவனை நீங்கள் புறக்கணித்து விட்டு, "பஅலு" என்னும் சிலையை வணங்கு கின்றீர்களா? ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௨௫)
Tafseer
௧௨௬

اللّٰهَ رَبَّكُمْ وَرَبَّ اٰبَاۤىِٕكُمُ الْاَوَّلِيْنَ ١٢٦

al-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
rabbakum
رَبَّكُمْ
உங்கள் இறைவனான
warabba
وَرَبَّ
இன்னும் இறைவனுமான
ābāikumu
ءَابَآئِكُمُ
உங்கள் மூதாதைகளின்
l-awalīna
ٱلْأَوَّلِينَ
முன்னோர்களான
அல்லாஹ்தான் உங்கள் இறைவனும், முன் சென்ற உங்கள் மூதாதையர்களின் இறைவனுமாவான்" (என்று கூறினார்). ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௨௬)
Tafseer
௧௨௭

فَكَذَّبُوْهُ فَاِنَّهُمْ لَمُحْضَرُوْنَۙ ١٢٧

fakadhabūhu
فَكَذَّبُوهُ
அவரை பொய்ப்பித்தனர்
fa-innahum
فَإِنَّهُمْ
ஆகவே நிச்சயமாக அவர்கள்
lamuḥ'ḍarūna
لَمُحْضَرُونَ
ஆஜர்படுத்தப்படுவார்கள்
ஆயினும், அவர்கள் (அவரைப் பொய்யாக்கி விட்டனர். ஆதலால், நிச்சயமாக அவர்கள் (மறுமையில் நம்மிடம் தண்டனைக்காகக்) கொண்டு வரப்படுவார்கள். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௨௭)
Tafseer
௧௨௮

اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ ١٢٨

illā
إِلَّا
எனினும்
ʿibāda l-lahi
عِبَادَ ٱللَّهِ
அல்லாஹ்வின் அடியார்கள்
l-mukh'laṣīna
ٱلْمُخْلَصِينَ
பரிசுத்தமான
கலப்பற்ற அல்லாஹ்வுடைய அடியார்களைத் தவிர, (நல்லடியார்களுக்கு நல்ல சன்மானமுண்டு.) ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௨௮)
Tafseer
௧௨௯

وَتَرَكْنَا عَلَيْهِ فِى الْاٰخِرِيْنَ ۙ ١٢٩

wataraknā
وَتَرَكْنَا
நற்பெயரை ஏற்படுத்தினோம்
ʿalayhi
عَلَيْهِ
அவருக்கு
fī l-ākhirīna
فِى ٱلْءَاخِرِينَ
பின்னோரில்
பிற்காலத்தில் உள்ளவர்களிலும் இவருடைய கீர்த்தியை நிலைக்கச் செய்தோம். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௨௯)
Tafseer
௧௩௦

سَلٰمٌ عَلٰٓى اِلْ يَاسِيْنَ ١٣٠

salāmun
سَلَٰمٌ
ஈடேற்றம் உண்டாகட்டும்
ʿalā ilyāsīna
عَلَىٰٓ إِلْ يَاسِينَ
இல்யாசுக்கு
(ஆகவே உலகத்திலுள்ளவர்கள்) "இல்யாஸுக்கு "ஸலாம்" ஈடேற்றம் உண்டாவதாகுக!" (என்று கூறுகின்றனர்). ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௩௦)
Tafseer