Skip to content

ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் - Page: 12

As-Saffat

(aṣ-Ṣāffāt)

௧௧௧

اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِيْنَ ١١١

innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவர்
min ʿibādinā
مِنْ عِبَادِنَا
நமது அடியார்களில்
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களான
நிச்சயமாக அவர் மிக்க நம்பிக்கையுள்ள நமது அடியாராகவே இருந்தார். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௧௧)
Tafseer
௧௧௨

وَبَشَّرْنٰهُ بِاِسْحٰقَ نَبِيًّا مِّنَ الصّٰلِحِيْنَ ١١٢

wabasharnāhu
وَبَشَّرْنَٰهُ
நாம் அவருக்கு நற்செய்தி கூறினோம்
bi-is'ḥāqa
بِإِسْحَٰقَ
இஸ்ஹாக்கைக் கொண்டு
nabiyyan
نَبِيًّا
நபி(யாகவும்)
mina l-ṣāliḥīna
مِّنَ ٱلصَّٰلِحِينَ
நல்லவர்களில் (ஒருவராகவும்)
இதன் பின்னர், நல்லடியார்களிலுள்ள இஸ்ஹாக் நபியை அவருக்கு (மற்றுமொரு மகனாகத் தருவதாக) நற்செய்தி கூறினோம். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௧௨)
Tafseer
௧௧௩

وَبٰرَكْنَا عَلَيْهِ وَعَلٰٓى اِسْحٰقَۗ وَمِنْ ذُرِّيَّتِهِمَا مُحْسِنٌ وَّظَالِمٌ لِّنَفْسِهٖ مُبِيْنٌ ࣖ ١١٣

wabāraknā ʿalayhi
وَبَٰرَكْنَا عَلَيْهِ
அருள் வளம் புரிந்தோம்/அவருக்கு(ம்)
waʿalā is'ḥāqa
وَعَلَىٰٓ إِسْحَٰقَۚ
இஸ்ஹாக்கிற்கும்
wamin dhurriyyatihimā
وَمِن ذُرِّيَّتِهِمَا
அவ்விருவரின் சந்ததியில்
muḥ'sinun
مُحْسِنٌ
நல்லவரும்
waẓālimun
وَظَالِمٌ
தீங்கிழைத்தவரும்
linafsihi
لِّنَفْسِهِۦ
தனக்கு
mubīnun
مُبِينٌ
தெளிவாக
அவர் மீதும், இஸ்ஹாக் மீதும் நாம் நமது பாக்கியங்களைச் சொரிந்தோம். அவர்களுடைய சந்ததிகளில் நல்லவர்களும் இருக்கின்றனர்; பகிரங்கமாக தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்(ட கெட்)டவர்களும் இருக்கின்றனர். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௧௩)
Tafseer
௧௧௪

وَلَقَدْ مَنَنَّا عَلٰى مُوْسٰى وَهٰرُوْنَ ۚ ١١٤

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
manannā
مَنَنَّا
அருள்புரிந்தோம்
ʿalā mūsā
عَلَىٰ مُوسَىٰ
மூஸாவிற்கு(ம்)
wahārūna
وَهَٰرُونَ
ஹாரூனுக்கு
நிச்சயமாக நாம் மூஸாவின் மீதும், ஹாரூனின் மீதும் அருள் புரிந்தோம். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௧௪)
Tafseer
௧௧௫

وَنَجَّيْنٰهُمَا وَقَوْمَهُمَا مِنَ الْكَرْبِ الْعَظِيْمِۚ ١١٥

wanajjaynāhumā
وَنَجَّيْنَٰهُمَا
அவ்விருவரையு(ம்) பாதுகாத்தோம்
waqawmahumā
وَقَوْمَهُمَا
அவ்விருவரின் மக்களையும்
mina l-karbi
مِنَ ٱلْكَرْبِ
துக்கத்தில் இருந்து
l-ʿaẓīmi
ٱلْعَظِيمِ
பெரிய
அவ்விருவரையும், அவர்களுடைய மக்களையும் கடுமையானதொரு துன்பத்திலிருந்து பாதுகாத்துக் கொண்டோம். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௧௫)
Tafseer
௧௧௬

وَنَصَرْنٰهُمْ فَكَانُوْا هُمُ الْغٰلِبِيْنَۚ ١١٦

wanaṣarnāhum
وَنَصَرْنَٰهُمْ
அவர்களுக்கு உதவினோம்
fakānū
فَكَانُوا۟
ஆகவே, ஆனார்கள்
humu
هُمُ
அவர்கள்தான்
l-ghālibīna
ٱلْغَٰلِبِينَ
வெற்றியாளர்களாக
அவர்களுக்கு உதவிபுரிந்தோம். ஆகவே, அவர்கள் (தங்கள் எதிரிகளை) வெற்றி கொண்டார்கள். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௧௬)
Tafseer
௧௧௭

وَاٰتَيْنٰهُمَا الْكِتٰبَ الْمُسْتَبِيْنَ ۚ ١١٧

waātaynāhumā
وَءَاتَيْنَٰهُمَا
அவ்விருவருக்கும் கொடுத்தோம்
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதத்தை
l-mus'tabīna
ٱلْمُسْتَبِينَ
தெளிவான
அவ்விருவருக்கும் தெளிவான வேதத்தையும் நாம் கொடுத்தோம். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௧௭)
Tafseer
௧௧௮

وَهَدَيْنٰهُمَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۚ ١١٨

wahadaynāhumā
وَهَدَيْنَٰهُمَا
அவ்விருவரையும் நேர்வழி நடத்தினோம்
l-ṣirāṭa
ٱلصِّرَٰطَ
பாதையில்
l-mus'taqīma
ٱلْمُسْتَقِيمَ
நேரான
அவ்விருவரையும் நேரான வழியிலும் நாம் செலுத்தினோம். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௧௮)
Tafseer
௧௧௯

وَتَرَكْنَا عَلَيْهِمَا فِى الْاٰخِرِيْنَ ۖ ١١٩

wataraknā
وَتَرَكْنَا
நற்பெயரை ஏற்படுத்தினோம்
ʿalayhimā
عَلَيْهِمَا
அவ்விருவருக்கும்
fī l-ākhirīna
فِى ٱلْءَاخِرِينَ
பின்னோரில்
பிற்காலத்திலும் அவ்விருவரின் கீர்த்தியை நிலைக்கச் செய்தோம். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௧௯)
Tafseer
௧௨௦

سَلٰمٌ عَلٰى مُوْسٰى وَهٰرُوْنَ ١٢٠

salāmun
سَلَٰمٌ
ஈடேற்றம் உண்டாகட்டும்
ʿalā mūsā
عَلَىٰ مُوسَىٰ
மூஸாவிற்கும்
wahārūna
وَهَٰرُونَ
ஹாரூனுக்கும்
(ஆகவே, உலகத்திலுள்ளவர்கள்) மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் "ஸலாம்" ஈடேற்றம் உண்டாவதாக! (என்று கூறுகின்றனர்). ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௨௦)
Tafseer