Skip to content

ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் - Page: 11

As-Saffat

(aṣ-Ṣāffāt)

௧௦௧

فَبَشَّرْنٰهُ بِغُلٰمٍ حَلِيْمٍ ١٠١

fabasharnāhu
فَبَشَّرْنَٰهُ
ஆகவே, அவருக்கு நற்செய்தி கூறினோம்
bighulāmin
بِغُلَٰمٍ
ஒரு குழந்தையைக்கொண்டு
ḥalīmin
حَلِيمٍ
மிக சகிப்பாளரான
ஆதலால், மிகப் பொறுமையுடைய (இஸ்மாயீல் என்னும்) மகனைக் கொண்டு அவருக்கு நற்செய்தி கூறினோம். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௦௧)
Tafseer
௧௦௨

فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يٰبُنَيَّ اِنِّيْٓ اَرٰى فِى الْمَنَامِ اَنِّيْٓ اَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرٰىۗ قَالَ يٰٓاَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُۖ سَتَجِدُنِيْٓ اِنْ شَاۤءَ اللّٰهُ مِنَ الصّٰبِرِيْنَ ١٠٢

falammā balagha
فَلَمَّا بَلَغَ
பருவத்தை அடைந்தபோது
maʿahu
مَعَهُ
அவருடன்
l-saʿya
ٱلسَّعْىَ
உழைக்கின்ற
qāla
قَالَ
அவர் கூறினார்
yābunayya
يَٰبُنَىَّ
என் மகனே!
innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
arā
أَرَىٰ
பார்க்கிறேன்
fī l-manāmi
فِى ٱلْمَنَامِ
கனவில்
annī
أَنِّىٓ
நிச்சயமாக நான்
adhbaḥuka
أَذْبَحُكَ
உன்னை பலியிடுவதாக
fa-unẓur
فَٱنظُرْ
ஆகவே, நீ யோசி
mādhā
مَاذَا
என்ன
tarā
تَرَىٰۚ
நீ கருதுகிறாய்
qāla
قَالَ
அவர் கூறினார்
yāabati
يَٰٓأَبَتِ
என் தந்தையே!
if'ʿal
ٱفْعَلْ
நீர் செய்வீராக!
mā tu'maru
مَا تُؤْمَرُۖ
உமக்கு ஏவப்படுவதை
satajidunī
سَتَجِدُنِىٓ
என்னை நீர் காண்பீர்
in shāa
إِن شَآءَ
நாடினால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
mina l-ṣābirīna
مِنَ ٱلصَّٰبِرِينَ
பொறுமையாளர்களில் (ஒருவராக)
(அவருடைய அந்த மகன் அவருடன்) நடந்து திரியக்கூடிய வயதை அடைந்த பொழுது, அவர் (தன் மகனை நோக்கி) "என் அருமை மைந்தனே! நான் உன்னை (என்னுடைய கைகொண்டு) அறுத்துப் பலியிடுவதாக மெய்யாகவே நான் என்னுடைய கனவில் கண்டேன். (இதைப் பற்றி) நீ என்ன அபிப்பிராயப்படுகிறாய்?" என்று கேட்டார். அதற்கவர், "என்(னருமைத்) தந்தையே! உங்களுக்கு இடப்பட்ட கட்டளைப்படியே நீங்கள் செய்யுங்கள். அல்லாஹ் அருள் புரிந்தால் (அதனைச் சகித்துக்கொண்டு) உறுதியாயிருப் வனாகவே நீங்கள் என்னைக் காண்பீர்கள்" என்று கூறினார். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௦௨)
Tafseer
௧௦௩

فَلَمَّآ اَسْلَمَا وَتَلَّهٗ لِلْجَبِيْنِۚ ١٠٣

falammā aslamā
فَلَمَّآ أَسْلَمَا
அப்போது அவர்கள் இருவரும் முற்றிலும் பணிந்தனர்
watallahu
وَتَلَّهُۥ
அவர் அவரை கீழே சாய்த்தார்
lil'jabīni
لِلْجَبِينِ
கன்னத்தின் மீது
ஆகவே, அவ்விருவரும் (இறைவனின் விருப்பத்திற்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம் தன் மகன் இஸ்மாயீலை அறுத்துப் பலியிட) முகங்குப்புறக் கிடத்தினார். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௦௩)
Tafseer
௧௦௪

وَنَادَيْنٰهُ اَنْ يّٰٓاِبْرٰهِيْمُ ۙ ١٠٤

wanādaynāhu
وَنَٰدَيْنَٰهُ
நாம் அவரை அழைத்தோம்
an yāib'rāhīmu
أَن يَٰٓإِبْرَٰهِيمُ
இப்ராஹீமே! என்று
அச்சமயம் நாம் "இப்ராஹீமே!" என அழைத்து, ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௦௪)
Tafseer
௧௦௫

قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا ۚاِنَّا كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ ١٠٥

qad
قَدْ
திட்டமாக
ṣaddaqta
صَدَّقْتَ
உண்மைப்படுத்தினீர்
l-ru'yā
ٱلرُّءْيَآۚ
கனவை
innā
إِنَّا
நிச்சயமாக நாம்
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
najzī
نَجْزِى
கூலி கொடுப்போம்
l-muḥ'sinīna
ٱلْمُحْسِنِينَ
நல்லவர்களுக்கு
உண்மையாகவே நீங்கள் உங்களுடைய கனவை மெய்யாக்கி வைத்து விட்டீர்கள் என்றும், நன்மை செய்பவருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்" என்றும் கூறி, ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௦௫)
Tafseer
௧௦௬

اِنَّ هٰذَا لَهُوَ الْبَلٰۤؤُا الْمُبِيْنُ ١٠٦

inna
إِنَّ
நிச்சயமாக
hādhā lahuwa
هَٰذَا لَهُوَ
இதுதான்
l-balāu
ٱلْبَلَٰٓؤُا۟
சோதனையாகும்
l-mubīnu
ٱلْمُبِينُ
தெளிவான
"நிச்சயமாக இது மகத்தானதொரு பெரும் சோதனையாகும்" (என்றும் கூறினோம்). ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௦௬)
Tafseer
௧௦௭

وَفَدَيْنٰهُ بِذِبْحٍ عَظِيْمٍ ١٠٧

wafadaynāhu
وَفَدَيْنَٰهُ
அவரை விடுதலை செய்தோம்
bidhib'ḥin
بِذِبْحٍ
ஒரு பலிப் பிராணியைக்கொண்டு
ʿaẓīmin
عَظِيمٍ
மகத்தான
ஆகவே, மகத்தானதொரு பலியை அவருக்கு பகரமாக்கினோம். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௦௭)
Tafseer
௧௦௮

وَتَرَكْنَا عَلَيْهِ فِى الْاٰخِرِيْنَ ۖ ١٠٨

wataraknā ʿalayhi
وَتَرَكْنَا عَلَيْهِ
அவரைப் பற்றி அழகிய பெயரை ஏற்படுத்தினோம்
fī l-ākhirīna
فِى ٱلْءَاخِرِينَ
பின்னோரில்
அவருடைய கீர்த்தியைப் பிற்காலத்திலும் நிலைக்க வைத்தோம். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௦௮)
Tafseer
௧௦௯

سَلٰمٌ عَلٰٓى اِبْرٰهِيْمَ ١٠٩

salāmun
سَلَٰمٌ
ஈடேற்றம் உண்டாகட்டும்
ʿalā ib'rāhīma
عَلَىٰٓ إِبْرَٰهِيمَ
இப்றாஹீமுக்கு
(ஆகவே, உலகத்திலுள்ள அனைவருமே) "இப்ராஹீமுக்கு "ஸலாம்" ஈடேற்றம் உண்டாவதாகுக" (என்றும் கூறுகின்றனர்.) ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௦௯)
Tafseer
௧௧௦

كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ ١١٠

kadhālika
كَذَٰلِكَ
இப்படித்தான்
najzī
نَجْزِى
நாம் கூலி கொடுப்போம்
l-muḥ'sinīna
ٱلْمُحْسِنِينَ
நல்லவர்களுக்கு
இவ்வாறே, நன்மை செய்தவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௧௦)
Tafseer