Skip to content

ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் - Page: 10

As-Saffat

(aṣ-Ṣāffāt)

௯௧

فَرَاغَ اِلٰٓى اٰلِهَتِهِمْ فَقَالَ اَلَا تَأْكُلُوْنَۚ ٩١

farāgha
فَرَاغَ
ஆக, அவர் விரைந்தார்
ilā ālihatihim
إِلَىٰٓ ءَالِهَتِهِمْ
அவர்களின் தெய்வங்கள் பக்கம்
faqāla
فَقَالَ
கூறினார்
alā takulūna
أَلَا تَأْكُلُونَ
நீங்கள் சாப்பிட மாட்டீர்களா?
(பின்னர்) அவர், அவர்களுடைய கோயிலுக்குள் இரகசியமாகச் சென்றார். (விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட பல வகை உணவுகள் இருக்கக் கண்டு, சிலைகளை நோக்கி) "நீங்கள் இவைகளை ஏன் புசிப்பதில்லை? ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௯௧)
Tafseer
௯௨

مَا لَكُمْ لَا تَنْطِقُوْنَ ٩٢

mā lakum
مَا لَكُمْ
உங்களுக்கு என்ன ஏற்பட்டது?
lā tanṭiqūna
لَا تَنطِقُونَ
நீங்கள் ஏன் பேசுவதில்லை
உங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நீங்கள் ஏன் பேசுவதில்லை?" என்று கேட்டு(ப் பதில் கிடைக்காததனால்,) ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௯௨)
Tafseer
௯௩

فَرَاغَ عَلَيْهِمْ ضَرْبًا ۢبِالْيَمِيْنِ ٩٣

farāgha
فَرَاغَ
பாய்ந்தார்
ʿalayhim
عَلَيْهِمْ
அவற்றின் மீது
ḍarban
ضَرْبًۢا
அடிப்பதற்காக
bil-yamīni
بِٱلْيَمِينِ
வலக்கரத்தால்
அவைகளைப் பலமாக அடித்துத் தாக்கி (நொறுக்கிவிட்டு வெளியில் சென்று) விட்டார். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௯௩)
Tafseer
௯௪

فَاَقْبَلُوْٓا اِلَيْهِ يَزِفُّوْنَ ٩٤

fa-aqbalū
فَأَقْبَلُوٓا۟
அவர்கள் வந்தனர்
ilayhi
إِلَيْهِ
அவரை நோக்கி
yaziffūna
يَزِفُّونَ
விரைந்தவர்களாக
(திருநாள் கொண்டாடச் சென்றவர்கள் திரும்பி வந்து இதனைக் கண்டதும்) இப்ராஹீமிடம் ஓடி வந்து (அதைப் பற்றிக் கேட்கவே) ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௯௪)
Tafseer
௯௫

قَالَ اَتَعْبُدُوْنَ مَا تَنْحِتُوْنَۙ ٩٥

qāla
قَالَ
அவர் கூறினார்
ataʿbudūna
أَتَعْبُدُونَ
நீங்கள் வணங்குகிறீர்களா
mā tanḥitūna
مَا تَنْحِتُونَ
நீங்கள் செதுக்குகின்றவற்றை
அவர், (அவர்களை நோக்கி) "உங்கள் கைகளால் சித்தரித்த பொம்மைகளை நீங்கள் வணங்குகிறீர்களா? ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௯௫)
Tafseer
௯௬

وَاللّٰهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُوْنَ ٩٦

wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்தான்
khalaqakum
خَلَقَكُمْ
உங்களை(யும்) படைத்தான்
wamā taʿmalūna
وَمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்வதையும்
உங்களையும், நீங்கள் சித்தரித்த அவைகளையும் அல்லாஹ்வே படைத்தான்" என்றார். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௯௬)
Tafseer
௯௭

قَالُوا ابْنُوْا لَهٗ بُنْيَانًا فَاَلْقُوْهُ فِى الْجَحِيْمِ ٩٧

qālū
قَالُوا۟
அவர்கள் கூறினர்
ib'nū
ٱبْنُوا۟
கட்டுங்கள்
lahu
لَهُۥ
அவருக்கு
bun'yānan
بُنْيَٰنًا
ஒரு கட்டிடத்தை
fa-alqūhu
فَأَلْقُوهُ
அவரை எறிந்து விடுங்கள்
fī l-jaḥīmi
فِى ٱلْجَحِيمِ
அந்த நெருப்பில்
(அதற்கு அவர்கள் பதில் கூற வகையறியாது கோபம் கொண்டு,) "இவருக்காகப் பெரியதொரு (நெருப்புக்) கிடங்கை அமைத்து, அந்நெருப்பில் .அவரை எறிந்து விடுங்கள்" என்று கூறினார்கள். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௯௭)
Tafseer
௯௮

فَاَرَادُوْا بِهٖ كَيْدًا فَجَعَلْنٰهُمُ الْاَسْفَلِيْنَ ٩٨

fa-arādū
فَأَرَادُوا۟
அவர்கள் நாடினர்
bihi
بِهِۦ
அவருக்கு
kaydan
كَيْدًا
ஒரு சூழ்ச்சியை
fajaʿalnāhumu
فَجَعَلْنَٰهُمُ
நாம் அவர்களை(த்தான்) ஆக்கினோம்
l-asfalīna
ٱلْأَسْفَلِينَ
மிகத் தாழ்ந்தவர்களாக
இவ்வாறு அவர்கள், அவருக்குத் தீங்கிழைக்கக் கருதினார்கள். எனினும், நாம் அவர்களையே இழிவுபடுத்தி விட்டோம். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௯௮)
Tafseer
௯௯

وَقَالَ اِنِّيْ ذَاهِبٌ اِلٰى رَبِّيْ سَيَهْدِيْنِ ٩٩

waqāla
وَقَالَ
அவர் கூறினார்
innī
إِنِّى
நிச்சயமாக நான்
dhāhibun
ذَاهِبٌ
செல்கிறேன்
ilā rabbī
إِلَىٰ رَبِّى
என் இறைவனின் பக்கம்
sayahdīni
سَيَهْدِينِ
அவன் எனக்கு நேர்வழி காட்டுவான்
பின்னர், இப்ராஹீம் (அவ்வூரை விட்டு வெளிப்பட்டு,) "நான் என் இறைவனிடமே செல்கின்றேன். அவன் நிச்சயமாக எனக்கு நேரான வழியைக் காண்பிப்பான்" (என்று கூறி,) ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௯௯)
Tafseer
௧௦௦

رَبِّ هَبْ لِيْ مِنَ الصّٰلِحِيْنَ ١٠٠

rabbi
رَبِّ
என் இறைவா
hab lī
هَبْ لِى
எனக்கு தா!
mina l-ṣāliḥīna
مِنَ ٱلصَّٰلِحِينَ
நல்லவர்களில் (ஒருவராக இருக்கும் ஒரு குழந்தையை)
"என் இறைவனே! நல்லோர்களில் (ஒருவரை) நீ எனக்கு(ச் சந்ததியாக) வழங்கி அருள் புரிவாயாக!" என்றார். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௦௦)
Tafseer