௧
وَالصّٰۤفّٰتِ صَفًّاۙ ١
- wal-ṣāfāti
- وَٱلصَّٰٓفَّٰتِ
- அணிவகுப்பவர்கள் மீது சத்தியமாக!
- ṣaffan
- صَفًّا
- அணி அணியாக
அணி அணியாக நிற்பவர்கள் மீது சத்தியமாக! ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧)Tafseer
௨
فَالزّٰجِرٰتِ زَجْرًاۙ ٢
- fal-zājirāti
- فَٱلزَّٰجِرَٰتِ
- விரட்டுகின்றவர்கள் மீது சத்தியமாக!
- zajran
- زَجْرًا
- (கடுமையாக) விரட்டுதல்
(தீமைகளைத்) தீவிரமாக விரட்டுபவர்கள் மீது சத்தியமாக! ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௨)Tafseer
௩
فَالتّٰلِيٰتِ ذِكْرًاۙ ٣
- fal-tāliyāti
- فَٱلتَّٰلِيَٰتِ
- ஓதுபவர்கள் மீது சத்தியமாக!
- dhik'ran
- ذِكْرًا
- வேதத்தை
(இறைவனின் வசனங்களை) ஓதுபவர்கள் மீது சத்தியமாக! ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௩)Tafseer
௪
اِنَّ اِلٰهَكُمْ لَوَاحِدٌۗ ٤
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- ilāhakum
- إِلَٰهَكُمْ
- உங்கள் கடவுள்
- lawāḥidun
- لَوَٰحِدٌ
- ஒருவன்தான்
நிச்சயமாக உங்கள் வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஒருவன்தான். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௪)Tafseer
௫
رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ الْمَشَارِقِۗ ٥
- rabbu
- رَّبُّ
- இறைவன்
- l-samāwāti wal-arḍi
- ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ
- வானங்கள்/இன்னும் பூமி
- wamā baynahumā
- وَمَا بَيْنَهُمَا
- இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின்
- warabbu
- وَرَبُّ
- இன்னும் நிர்வகிப்பவன்
- l-mashāriqi
- ٱلْمَشَٰرِقِ
- அவன் சூரியன் உதிக்கும் இடங்களையும்
அவனே வானங்களையும், பூமியையும், அவைகளுக்கு மத்தியிலுள்ளவைகளையும் படைத்து வளர்ப்பவன். கீழ் திசை(கள் மேல் திசை)களின் இறைவனும் அவனே. ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௫)Tafseer
௬
اِنَّا زَيَّنَّا السَّمَاۤءَ الدُّنْيَا بِزِيْنَةِ ِۨالْكَوَاكِبِۙ ٦
- innā
- إِنَّا
- நிச்சயமாக நாம்
- zayyannā
- زَيَّنَّا
- அலங்கரித்துள்ளோம்
- l-samāa
- ٱلسَّمَآءَ
- வானத்தை
- l-dun'yā
- ٱلدُّنْيَا
- சமீபமான(து)
- bizīnatin
- بِزِينَةٍ
- அலங்காரத்தால்
- l-kawākibi
- ٱلْكَوَاكِبِ
- நட்சத்திரங்களின்
நிச்சயமாக (உங்கள் இறைவனாகிய) நாம், (பூமிக்குச்) சமீபமாக உள்ள வானத்தைப் பிரகாசிக்கும் நட்சத்திரங்களைக் கொண்டு அழகுபடுத்தி வைத்தோம். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௬)Tafseer
௭
وَحِفْظًا مِّنْ كُلِّ شَيْطٰنٍ مَّارِدٍۚ ٧
- waḥif'ẓan
- وَحِفْظًا
- பாதுகாப்பதற்காகவும்
- min kulli shayṭānin
- مِّن كُلِّ شَيْطَٰنٍ
- எல்லா ஷைத்தான்களிடமிருந்து
- māridin
- مَّارِدٍ
- அடங்காத
மிக்க விஷமிகளான ஷைத்தான்களுக்கு ஒரு தடையாகவும் (ஆக்கி வைத்தோம்). ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௭)Tafseer
௮
لَا يَسَّمَّعُوْنَ اِلَى الْمَلَاِ الْاَعْلٰى وَيُقْذَفُوْنَ مِنْ كُلِّ جَانِبٍۖ ٨
- lā yassammaʿūna
- لَّا يَسَّمَّعُونَ
- அவர்களால் செவியுற முடியாது
- ilā l-mala-i
- إِلَى ٱلْمَلَإِ
- கூட்டத்தினரின் பக்கம்
- l-aʿlā
- ٱلْأَعْلَىٰ
- மிக உயர்ந்த
- wayuq'dhafūna
- وَيُقْذَفُونَ
- இன்னும் எறியப்படுவார்கள்
- min
- مِن
- இருந்தும்
- kulli
- كُلِّ
- எல்லா
- jānibin
- جَانِبٍ
- பக்கங்களில்
மேல் உலகத்தில் உள்ளவர்களின் விஷயங்களை (ஷைத்தான்கள்) செவியுற முடியாது. (ஏனென்றால், அதனை நெருங்கும் ஒவ்வொருவரும்) பல பாகங்களிலிருந்தும் (கொள்ளி களால்) எறியப்பட்டு விரட்டப்படுகின்றனர். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௮)Tafseer
௯
دُحُوْرًا وَّلَهُمْ عَذَابٌ وَّاصِبٌ ٩
- duḥūran
- دُحُورًاۖ
- தடுக்கப்படுவதற்காக
- walahum
- وَلَهُمْ
- அவர்களுக்கு
- ʿadhābun
- عَذَابٌ
- வேதனை
- wāṣibun
- وَاصِبٌ
- நிரந்தரமான
அவர்களுக்கு நிலையான வேதனையுண்டு. ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௯)Tafseer
௧௦
اِلَّا مَنْ خَطِفَ الْخَطْفَةَ فَاَتْبَعَهٗ شِهَابٌ ثَاقِبٌ ١٠
- illā
- إِلَّا
- எனினும்
- man
- مَنْ
- யார்
- khaṭifa
- خَطِفَ
- திருடினான்
- l-khaṭfata
- ٱلْخَطْفَةَ
- திருட்டுத்தனமாக
- fa-atbaʿahu
- فَأَتْبَعَهُۥ
- அவரை பின்தொடரும்
- shihābun
- شِهَابٌ
- நெருப்புக் கங்கு
- thāqibun
- ثَاقِبٌ
- எரிக்கின்ற
(தப்பித் தவறி யாதொரு வார்த்தையை) இறாய்ஞ்சிச் செல்ல நெருங்கினால், உடனே அவனை(க் கொழுந்துவிட்டெரியும்) பிரகாசமான நெருப்பு பின்தொடர்கிறது. ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௦)Tafseer