குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௮
Qur'an Surah Ya-Sin Verse 8
ஸூரத்து யாஸீன் [௩௬]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّا جَعَلْنَا فِيْٓ اَعْنَاقِهِمْ اَغْلٰلًا فَهِيَ اِلَى الْاَذْقَانِ فَهُمْ مُّقْمَحُوْنَ (يس : ٣٦)
- innā
- إِنَّا
- Indeed We
- நிச்சயமாக நாம்
- jaʿalnā
- جَعَلْنَا
- [We] have placed
- ஏற்படுத்தி விட்டோம்
- fī aʿnāqihim
- فِىٓ أَعْنَٰقِهِمْ
- on their necks
- அவர்களின் கழுத்துகள் மீது
- aghlālan
- أَغْلَٰلًا
- iron collars
- அரிகண்டங்களை
- fahiya
- فَهِىَ
- and they
- அவை
- ilā l-adhqāni
- إِلَى ٱلْأَذْقَانِ
- (are up)to the chins
- தாடைகள் வரை
- fahum
- فَهُم
- so they
- ஆகவே, அவர்கள்
- muq'maḥūna
- مُّقْمَحُونَ
- (are with) heads aloft
- உயர்த்தியவர்களாக
Transliteration:
Innaa ja'alnaa feee a'naaqihim aghlaalan fahiya ilal azqaani fahum muqmahoon(QS. Yāʾ Sīn:8)
English Sahih International:
Indeed, We have put shackles on their necks, and they are to their chins, so they are with heads [kept] aloft. (QS. Ya-Sin, Ayah ௮)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக நாம் அவர்களுடைய கழுத்துகளில் மேல்வாய் கட்டைகள் வரையில் விலங்குச் சங்கிலிகளைப் போட்டுவிட்டோம். ஆதலால், அவர்களுடைய தலைகள் (குனிய முடியாதவாறு) நிமிர்ந்து விட்டன. (ஸூரத்து யாஸீன், வசனம் ௮)
Jan Trust Foundation
நிச்சயமாக நாம் அவர்களுடைய கழுத்துகளில் மோவாய்க் கட்டைகள் வரையில், அரிகண்டங்களைப் போட்டிருக்கின்றோம், ஆகவே அவர்கள் (குனிய முடியாதவாறு) தலை நிமிர்ந்து விட்டனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நாம் அவர்களின் கழுத்துகள் மீது அரிகண்டங்களை ஏற்படுத்தி விட்டோம். அவை (அவர்களின்) தாடைகள் வரை இருக்கின்றன. ஆகவே, அவர்கள் (தங்கள் தலைகளை) உயர்த்தியவர்களாக இருக்கின்றனர்.