Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௭௮

Qur'an Surah Ya-Sin Verse 78

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௭௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَضَرَبَ لَنَا مَثَلًا وَّنَسِيَ خَلْقَهٗۗ قَالَ مَنْ يُّحْيِ الْعِظَامَ وَهِيَ رَمِيْمٌ (يس : ٣٦)

waḍaraba
وَضَرَبَ
And he sets forth
விவரிக்கின்றான்
lanā
لَنَا
for Us
நமக்கு
mathalan
مَثَلًا
an example
ஓர் உதாரணத்தை
wanasiya
وَنَسِىَ
and forgets
அவன் மறந்துவிட்டான்
khalqahu
خَلْقَهُۥۖ
his (own) creation
தான் படைக்கப்பட்டதை
qāla
قَالَ
He says
அவன் கூறுகின்றான்
man
مَن
"Who
யார்
yuḥ'yī
يُحْىِ
will give life
உயிர்ப்பிப்பான்?
l-ʿiẓāma
ٱلْعِظَٰمَ
(to) the bones
எலும்புகளை
wahiya ramīmun
وَهِىَ رَمِيمٌ
while they (are) decomposed?"
அவை மக்கிப்போன நிலையில் இருக்கின்றபோது

Transliteration:

Wa daraba lanaa maslanw-wa nasiya khalqahoo qaala mai-yuhyil'izaama wa hiya rameem (QS. Yāʾ Sīn:78)

English Sahih International:

And he presents for Us an example and forgets his [own] creation. He says, "Who will give life to bones while they are disintegrated?" (QS. Ya-Sin, Ayah ௭௮)

Abdul Hameed Baqavi:

(மரணித்தவர்களை உயிர்ப்பிக்க நம்மால் முடியாதென எண்ணிக்கொண்டு அவர்களில் ஒருவன்) ஓர் உதாரணத்தை நம்மிடம் எடுத்துக் காட்டுகின்றான். அவன் தன்னை படைத்த(து யார் என்ப)தை மறந்துவிட்டு "உக்கி மண்ணாகிப் போன இந்த எலும்பை உயிர்ப்பிப்பவன் யார்?" என்று (ஓர் எலும்பை எடுத்து அதனை தூளாக்கி ஊதிவிட்டு) அவன் கேட்கின்றான். (ஸூரத்து யாஸீன், வசனம் ௭௮)

Jan Trust Foundation

மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் நமக்கு ஓர் உதாரணத்தை விவரிக்கின்றான். தான் படைக்கப்பட்டதை அவன் மறந்துவிட்டான். அவன் கூறுகின்றான்: எலும்புகளை அவை மக்கிப்போன நிலையில் இருக்கின்ற போது யார் உயிர்ப்பிப்பான்?