Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௭௭

Qur'an Surah Ya-Sin Verse 77

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௭௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَوَلَمْ يَرَ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ نُّطْفَةٍ فَاِذَا هُوَ خَصِيْمٌ مُّبِيْنٌ (يس : ٣٦)

awalam yara
أَوَلَمْ يَرَ
Does not see
பார்க்கவில்லையா?
l-insānu
ٱلْإِنسَٰنُ
[the] man
மனிதன்
annā khalaqnāhu
أَنَّا خَلَقْنَٰهُ
that We [We] created him
நிச்சயமாக நாம் அவனை படைத்துள்ளோம்
min nuṭ'fatin
مِن نُّطْفَةٍ
from a sperm-drop
ஓர் இந்திரியத் துளியில் இருந்து
fa-idhā huwa
فَإِذَا هُوَ
Then behold! He
ஆனால், அவனோ
khaṣīmun
خَصِيمٌ
(is) an opponent
தர்க்கம் செய்பவனாக
mubīnun
مُّبِينٌ
clear
தெளிவாக

Transliteration:

Awalam yaral insaanu annaa khalaqnaahu min nutfatin fa-izaa huwa khaseemum mubeen (QS. Yāʾ Sīn:77)

English Sahih International:

Does man not consider that We created him from a [mere] sperm-drop – then at once he is a clear adversary? (QS. Ya-Sin, Ayah ௭௭)

Abdul Hameed Baqavi:

மனிதனை ஒரு துளி இந்திரியத்தால்தான் நாம் படைத்தோம் என்பதை அவன் கவனிக்கவில்லையா? அவ்வாறிருந்தும் அவன் பகிரங்கமான எதிரியாகி (நமக்கு மாறுசெய்ய முற்பட்டு) விடுகின்றான். (ஸூரத்து யாஸீன், வசனம் ௭௭)

Jan Trust Foundation

மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நாம் அவனை (-மனிதனை) ஓர் இந்திரியத் துளியில் இருந்து படைத்துள்ளோம் என்பதை மனிதன் (சிந்தித்து) பார்க்கவில்லையா? ஆனால், அவனோ தெளிவாக தர்க்கம் செய்பவனாக இருக்கின்றான்.