Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௬௯

Qur'an Surah Ya-Sin Verse 69

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௬௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا عَلَّمْنٰهُ الشِّعْرَ وَمَا يَنْۢبَغِيْ لَهٗ ۗاِنْ هُوَ اِلَّا ذِكْرٌ وَّقُرْاٰنٌ مُّبِيْنٌ ۙ (يس : ٣٦)

wamā ʿallamnāhu
وَمَا عَلَّمْنَٰهُ
And not We taught him
நாம் அவருக்கு கற்றுத்தரவில்லை
l-shiʿ'ra
ٱلشِّعْرَ
[the] poetry
கவிதைகளை
wamā yanbaghī
وَمَا يَنۢبَغِى
and not it is befitting
தகுதியானதும் இல்லை
lahu
لَهُۥٓۚ
for him
அவருக்கு
in huwa
إِنْ هُوَ
Not it
இது இல்லை
illā dhik'run
إِلَّا ذِكْرٌ
(is) except a Reminder
அறிவுரை(யும்) அன்றி
waqur'ānun
وَقُرْءَانٌ
and a Quran
குர்ஆனும்
mubīnun
مُّبِينٌ
clear
தெளிவான(து)

Transliteration:

Wa maa 'allamnaahush shi'ra wa maa yambaghee lah; in huwa illaa zikrunw-wa Qur-aanum mubeen (QS. Yāʾ Sīn:69)

English Sahih International:

And We did not give him [i.e., Prophet Muhammad (^)] knowledge of poetry, nor is it befitting for him. It is not but a message and a clear Quran (QS. Ya-Sin, Ayah ௬௯)

Abdul Hameed Baqavi:

(நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவி கூறக் கற்றுக் கொடுக்கவில்லை. அது அவருக்குத் தகுமானதும் அல்ல; இது (நன்மை தீமைகளைத்) தெளிவாக்கக்கூடிய குர்ஆனும் நல்லுபதேசத்தையும் தவிர வேறில்லை. (ஸூரத்து யாஸீன், வசனம் ௬௯)

Jan Trust Foundation

(நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை; அது அவருக்குத் தேவையானதும் அல்ல; இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நாம் அவருக்கு கவிதைகளை கற்றுத்தரவில்லை. அது அவருக்கு தகுதியானதும் இல்லை. இது அறிவுரையும் தெளிவான குர்ஆனும் அன்றி வேறு எதுவும் இல்லை.