குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௬௮
Qur'an Surah Ya-Sin Verse 68
ஸூரத்து யாஸீன் [௩௬]: ௬௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَنْ نُّعَمِّرْهُ نُنَكِّسْهُ فِى الْخَلْقِۗ اَفَلَا يَعْقِلُوْنَ (يس : ٣٦)
- waman nuʿammir'hu
- وَمَن نُّعَمِّرْهُ
- And (he) whom We grant him long life
- நாம் எவருக்கு நீண்ட வயதை கொடுக்கின்றோமோ
- nunakkis'hu
- نُنَكِّسْهُ
- We reverse him
- அவரை திருப்பி விடுவோம்
- fī l-khalqi
- فِى ٱلْخَلْقِۖ
- in the creation
- படைப்பில்
- afalā yaʿqilūna
- أَفَلَا يَعْقِلُونَ
- Then will not they use intellect?
- அவர்கள் சிந்தித்து புரிய வேண்டாமா?
Transliteration:
Wa man nu 'ammirhu nunakkishu fil-khalq; afalaa ya'qiloon(QS. Yāʾ Sīn:68)
English Sahih International:
And he to whom We grant long life We reverse in creation; so will they not understand? (QS. Ya-Sin, Ayah ௬௮)
Abdul Hameed Baqavi:
நாம் எவரையும் அதிக நாள்கள் உயிருடன் வாழ்ந்திருக்கும் படி செய்தால் அவருடைய நிலைமையைத் தலைகீழாக்கி (சிறிய குழந்தையைப் போல் ஆக்கி) விடுகின்றோம். (இதனை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? (ஸூரத்து யாஸீன், வசனம் ௬௮)
Jan Trust Foundation
மேலும், எவரை நாம் வயோதிகமாக்குகிறோமோ, அவருடைய நிலைமையைப் படைப்பில் (பலஹீனமான நிலைக்கு) மாற்றிவிடுகிறோம்; அவர்கள் (இதை) அறிந்து கொள்ள வேண்டாமா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நாம் எவருக்கு நீண்ட வயதை கொடுக்கின்றோமோ படைப்பில் (-உருவத்தில் பழைய நிலைக்கு) அவரை திருப்பி விடுவோம். (பலமுள்ளவராக இருந்தவரை பலவீனராக மாற்றிவிடுவோம். இதை) அவர்கள் சிந்தித்து புரிய வேண்டாமா? (இதை செய்பவன் படைப்புகளை அழித்து மீண்டும் படைக்க ஆற்றல் உள்ளவன்)