Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௬௭

Qur'an Surah Ya-Sin Verse 67

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௬௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَوْ نَشَاۤءُ لَمَسَخْنٰهُمْ عَلٰى مَكَانَتِهِمْ فَمَا اسْتَطَاعُوْا مُضِيًّا وَّلَا يَرْجِعُوْنَ ࣖ (يس : ٣٦)

walaw nashāu
وَلَوْ نَشَآءُ
And if We willed
நாம் நாடியிருந்தால்
lamasakhnāhum
لَمَسَخْنَٰهُمْ
surely We (would have) transformed them
அவர்களை உட்கார வைத்திருப்போம்
ʿalā makānatihim
عَلَىٰ مَكَانَتِهِمْ
in their places
அவர்களின் இடத்திலேயே
famā is'taṭāʿū
فَمَا ٱسْتَطَٰعُوا۟
then not they would have been able
ஆக, அவர்கள் ஆற்றல் பெறமாட்டார்கள்
muḍiyyan
مُضِيًّا
to proceed
நடப்பதற்கு(ம்)
walā yarjiʿūna
وَلَا يَرْجِعُونَ
and not return
திரும்பி வரவும் மாட்டார்கள்

Transliteration:

Wa law nashaaa'u lamasakhnaahum 'alaa makaanatihim famas-tataa'oo mudiyyanw-wa laa yarji'oon (QS. Yāʾ Sīn:67)

English Sahih International:

And if We willed, We could have deformed them, [paralyzing them] in their places so they would not be able to proceed, nor could they return. (QS. Ya-Sin, Ayah ௬௭)

Abdul Hameed Baqavi:

நாம் விரும்பினால் அவர்கள் உருவத்தையே மாற்றி அவர்கள் இருந்த இடத்திலேயே இருக்கும்படி (கல்லாகவோ நொண்டியாகவோ) ஆக்கி விடுவோம். அச்சமயம் அவர்களால் முன் செல்லவும் முடியாது; பின் செல்லவும் முடியாது. (ஸூரத்து யாஸீன், வசனம் ௬௭)

Jan Trust Foundation

அன்றியும், நாம் நாடியிருந்தால், அவர்களுடைய இடத்திலேயே அவர்களை உரு மாற்றியிருப்போம். அப்போது, அவர்கள் முன் செல்லவும் சக்தி பெறமாட்டார்கள்; இன்னும் அவர்கள் மீளவும் மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நாம் நாடி இருந்தால் அவர்களை அவர்களின் இடத்திலேயே உட்கார வைத்திருப்போம். (அவர்களை உருமாற்றி (அழித்து) இருப்போம்) ஆக, அவர்கள் (முன்னால்) நடப்பதற்கும் ஆற்றல் பெறமாட்டார்கள். (வேதனை இறங்கும் போது அவர்கள் வெளியில் இருந்தால் தங்கள் இல்லங்களுக்கு) திரும்பி வரவும் மாட்டார்கள்.