Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௬

Qur'an Surah Ya-Sin Verse 6

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لِتُنْذِرَ قَوْمًا مَّآ اُنْذِرَ اٰبَاۤؤُهُمْ فَهُمْ غٰفِلُوْنَ (يس : ٣٦)

litundhira
لِتُنذِرَ
That you may warn
நீர் எச்சரிப்பதற்காக
qawman
قَوْمًا
a people
ஒரு சமுதாயத்தை
mā undhira
مَّآ أُنذِرَ
not were warned
எச்சரிக்கப்படவில்லை
ābāuhum
ءَابَآؤُهُمْ
their forefathers
மூதாதைகள் அவர்களின்
fahum
فَهُمْ
so they
ஆகவே, அவர்கள்
ghāfilūna
غَٰفِلُونَ
(are) heedless
அலட்சியக்காரர்களாக இருக்கின்றனர்

Transliteration:

Litunzira qawmam maaa unzira aabaaa'uhum fahum ghaafiloon (QS. Yāʾ Sīn:6)

English Sahih International:

That you may warn a people whose forefathers were not warned, so they are unaware. (QS. Ya-Sin, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

(உங்களுடைய) இந்த மக்களின் மூதாதைகளுக்கு (யாதொரு தூதராலும்) எச்சரிக்கை செய்யப்படாததால் (மறுமையைப் பற்றி) முற்றிலும் கவலையற்று இருக்கின்றனர். இவர்களுக்கு நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள். (ஸூரத்து யாஸீன், வசனம் ௬)

Jan Trust Foundation

எந்த சமூகத்தினரின் மூதாதையர்கள், எச்சரிக்கப்படாமையினால் இவர்கள் (நேர்வழி பற்றி) அலட்சியமாக இருக்கின்றார்களோ இ(த்தகைய)வர்களை நீர் எச்சரிப்பதற்காக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஒரு சமுதாயத்தை நீர் எச்சரிப்பதற்காக (உமக்கு இந்த வேதம் அருளப்பட்டது). அவர்களின் மூதாதைகள் (இதற்கு முன்னர் இறைத்தூதர்களால்) எச்சரிக்கப்படவில்லை. ஆகவே, அவர்கள் அலட்சியக்காரர்களாக இருக்கின்றனர்.