Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௫௪

Qur'an Surah Ya-Sin Verse 54

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَالْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْـًٔا وَّلَا تُجْزَوْنَ اِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ (يس : ٣٦)

fal-yawma
فَٱلْيَوْمَ
So this Day
இன்றைய தினம்
lā tuẓ'lamu nafsun
لَا تُظْلَمُ نَفْسٌ
not will be wronged a soul
அநீதி இழைக்கப்படாது/எந்த ஓர் ஆன்மாவும்
shayan walā
شَيْـًٔا وَلَا
(in) anything and not
சிறிதளவும்
tuj'zawna
تُجْزَوْنَ
you will be recompensed
கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்
illā mā kuntum taʿmalūna
إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ
except (for) what you used (to) do
நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கே தவிர

Transliteration:

Fal-Yawma laa tuzlamu nafsun shai'anw-wa laa tujzawna illaa maa kuntum ta'maloon (QS. Yāʾ Sīn:54)

English Sahih International:

So today [i.e., the Day of Judgement] no soul will be wronged at all, and you will not be recompensed except for what you used to do. (QS. Ya-Sin, Ayah ௫௪)

Abdul Hameed Baqavi:

அந்நாளில் யாதொரு ஆத்மாவுக்கும் (அதன் நன்மையைக் குறைத்தோ பாவத்தை அதிகரித்தோ) அநியாயம் செய்யப்பட மாட்டாது. அவர்கள் செய்தவைகளுக்கன்றி அவர்களுக்குக் கூலி கொடுக்கப்பட மாட்டாது. (ஸூரத்து யாஸீன், வசனம் ௫௪)

Jan Trust Foundation

அன்றியும், அந்நாளில் எந்த ஓர் ஆத்மாவுக்கும் ஏதும் அநியாயம் செய்யப்பட மாட்டாது; இன்னும், நீங்கள் செய்தவற்றிற்கேயன்றி (வேறு எதற்கும்) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்றைய தினம் எந்த ஓர் ஆன்மாவும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கே தவிர கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்.