Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௫௨

Qur'an Surah Ya-Sin Verse 52

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْا يٰوَيْلَنَا مَنْۢ بَعَثَنَا مِنْ مَّرْقَدِنَا ۜهٰذَا مَا وَعَدَ الرَّحْمٰنُ وَصَدَقَ الْمُرْسَلُوْنَ (يس : ٣٦)

qālū
قَالُوا۟
They [will] say
அவர்கள் கூறுவார்கள்
yāwaylanā
يَٰوَيْلَنَا
"O woe to us!
எங்கள் நாசமே!
man baʿathanā
مَنۢ بَعَثَنَا
Who has raised us
யார் எங்களை எழுப்பியது?
min marqadinā
مِن مَّرْقَدِنَاۗۜ
from our sleeping place?"
எங்கள் தூங்குமிடத்தில் இருந்து
hādhā
هَٰذَا
"This (is)
இது
mā waʿada
مَا وَعَدَ
what (had) promised
வாக்களித்தது(ம்)
l-raḥmānu
ٱلرَّحْمَٰنُ
the Most Gracious
பேரருளாளன்
waṣadaqa
وَصَدَقَ
and told (the) truth
உண்மையாகக் கூறியதும்
l-mur'salūna
ٱلْمُرْسَلُونَ
the Messengers"
தூதர்கள்

Transliteration:

Qaaloo yaa wailanaa mam ba'asanaa mim marqadinaa; haaza maa wa'adar Rahmanu wa sadaqal mursaloon (QS. Yāʾ Sīn:52)

English Sahih International:

They will say, "O woe to us! Who has raised us up from our sleeping place?" [The reply will be], "This is what the Most Merciful had promised, and the messengers told the truth." (QS. Ya-Sin, Ayah ௫௨)

Abdul Hameed Baqavi:

அன்றி "எங்களுடைய துக்கமே! எங்களை நித்திரையில் இருந்து எழுப்பியவர்கள் யார்?" என்று கேட்பார்கள். (அதற்கு மலக்குகள் அவர்களை நோக்கி) "ரஹ்மான் (உங்களுக்கு) வாக்களித்ததும், நபிமார்கள் (உங்களுக்குக்) கூறிவந்த உண்மையும் இதுதான்" (என்று கூறுவார்கள்). (ஸூரத்து யாஸீன், வசனம் ௫௨)

Jan Trust Foundation

“எங்களுடைய துக்கமே! எங்கள் தூங்குமிடங்களிலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?” என்று அவர்கள் கேட்பார்கள்; அர்ரஹ்மான் வாக்களித்ததும், (அவனுடைய) தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுதான்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் (-இறை மறுப்பாளர்கள்) கூறுவார்கள்: “எங்கள் நாசமே! யார் எங்களை எங்கள் தூங்குமிடத்தில் இருந்து எழுப்பியது?” (அதற்குப் பதிலாக நம்பிக்கையாளர்கள் கூறுவார்கள்:) “இது (-இந்த மறுமை நாள்) ரஹ்மான் வாக்களித்ததும் தூதர்கள் உண்மையாகக் கூறியதும் ஆகும்.