குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௪௫
Qur'an Surah Ya-Sin Verse 45
ஸூரத்து யாஸீன் [௩௬]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِذَا قِيْلَ لَهُمُ اتَّقُوْا مَا بَيْنَ اَيْدِيْكُمْ وَمَا خَلْفَكُمْ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ (يس : ٣٦)
- wa-idhā qīla
- وَإِذَا قِيلَ
- And when it is said
- கூறப்பட்டால்
- lahumu
- لَهُمُ
- to them
- அவர்களுக்கு
- ittaqū
- ٱتَّقُوا۟
- "Fear
- நீங்கள் பயந்து கொள்ளுங்கள்!
- mā bayna aydīkum
- مَا بَيْنَ أَيْدِيكُمْ
- what (is) before you (is) before you
- உங்களுக்கு முன்னுள்ளதையும்
- wamā khalfakum
- وَمَا خَلْفَكُمْ
- and what (is) behind you
- உங்களுக்கு பின்னுள்ளதையும்
- laʿallakum tur'ḥamūna
- لَعَلَّكُمْ تُرْحَمُونَ
- so that you may receive mercy"
- நீங்கள் கருணை காட்டப்படுவீர்கள்
Transliteration:
Wa izaa qeela lahumuttaqoo maa baina aideekum wa maa khalfakum la'allakum turhamoon(QS. Yāʾ Sīn:45)
English Sahih International:
But when it is said to them, "Beware of what is before you and what is behind you; perhaps you will receive mercy..." (QS. Ya-Sin, Ayah ௪௫)
Abdul Hameed Baqavi:
"உங்களுக்கு முன்னும், உங்களுக்குப் பின்னும் (இருக்கும் இம்மை மறுமையில்) உள்ள வேதனைகளுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். (அதனால்) இறைவனின் கிருபையை நீங்கள் அடையலாம்" என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் (அதனை அவர்கள் பொருட்படுத்துவதில்லை.) (ஸூரத்து யாஸீன், வசனம் ௪௫)
Jan Trust Foundation
“இன்னும், நீங்கள் கிருபை செய்யப்பெறும் பொருட்டு, உங்களுக்குமுன் இருப்பதையும், உங்களுக்குப்பின் இருப்பதையும் அஞ்சி நடந்து கொள்ளுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டாலும் -
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உங்களுக்கு முன்னுள்ளதையும் (முந்திய சமுதாயத்திற்கு இறக்கப்பட்ட தண்டனையையும்) உங்களுக்கு பின்னுள்ளதையும் (மறுமையின் தண்டனையையும்) நீங்கள் பயந்து கொள்ளுங்கள்! நீங்கள் கருணை காட்டப்படுவீர்கள்! என்று அவர்களுக்கு கூறப்பட்டால்... (அவர்கள் புறக்கணித்து விலகிச் சென்று விடுகின்றனர்.)