Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௩௫

Qur'an Surah Ya-Sin Verse 35

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لِيَأْكُلُوْا مِنْ ثَمَرِهٖۙ وَمَا عَمِلَتْهُ اَيْدِيْهِمْ ۗ اَفَلَا يَشْكُرُوْنَ (يس : ٣٦)

liyakulū
لِيَأْكُلُوا۟
That they may eat
அவர்கள் புசிப்பதற்காக
min thamarihi
مِن ثَمَرِهِۦ
of its fruit
அவனுடைய கனிகளில் இருந்து
wamā ʿamilathu
وَمَا عَمِلَتْهُ
And not made it
இவற்றை செய்யவில்லை
aydīhim
أَيْدِيهِمْۖ
their hands
அவர்களின் கரங்கள்
afalā yashkurūna
أَفَلَا يَشْكُرُونَ
So will not they be grateful?
அவர்கள் நன்றி செலுத்த வேண்டாமா?

Transliteration:

Liyaakuloo min samarihee wa maa 'amilat-hu aideehim; afalaa yashkuroon (QS. Yāʾ Sīn:35)

English Sahih International:

That they may eat of His fruit. And their hands have not produced it, so will they not be grateful? (QS. Ya-Sin, Ayah ௩௫)

Abdul Hameed Baqavi:

இவர்கள் புசிப்பதற்காக கனி வர்க்கங்களை (நாம் உற்பத்தி செய்கின்றோமேயன்றி) இவர்களுடைய கைகள் செய்வதில்லை. (இதற்குக் கூட) இவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா? (ஸூரத்து யாஸீன், வசனம் ௩௫)

Jan Trust Foundation

அதன் பழவகைகளை அவர்கள் உண்பதற்காக; ஆனால் அவர்களுடைய கைகள் இதை உண்டாக்கவில்லை - ஆகவே அவர்கள் நன்றி செலுத்தமாட்டார்களா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவனுடைய (-அவன் படைத்த) கனிகளில் இருந்து அவர்கள் புசிப்பதற்காக (அவன் அவர்களுக்கு அவற்றை உற்பத்தி செய்து கொடுத்தான்). இவற்றை அவர்களின் கரங்கள் செய்யவில்லை. (அல்லாஹ் இவற்றை கொடுத்ததற்காக அவனுக்கு) அவர்கள் நன்றி செலுத்த வேண்டாமா?