குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௨௮
Qur'an Surah Ya-Sin Verse 28
ஸூரத்து யாஸீன் [௩௬]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ وَمَآ اَنْزَلْنَا عَلٰى قَوْمِهٖ مِنْۢ بَعْدِهٖ مِنْ جُنْدٍ مِّنَ السَّمَاۤءِ وَمَا كُنَّا مُنْزِلِيْنَ (يس : ٣٦)
- wamā anzalnā
- وَمَآ أَنزَلْنَا
- And not We sent down
- நாம் இறக்கவில்லை
- ʿalā
- عَلَىٰ
- upon
- மீது
- qawmihi
- قَوْمِهِۦ
- his people
- அவருடைய மக்கள்
- min baʿdihi
- مِنۢ بَعْدِهِۦ
- after him after him
- அவருக்குப் பின்னர்
- min jundin
- مِن جُندٍ
- any host
- ஒரு படையை
- mina l-samāi
- مِّنَ ٱلسَّمَآءِ
- from the heaven
- வானத்திலிருந்து
- wamā kunnā
- وَمَا كُنَّا
- and not were We
- நாம் இல்லை
- munzilīna
- مُنزِلِينَ
- (to) send down
- இறக்குபவர்களாகவும்
Transliteration:
Wa maaa anzalnaa 'alaa qawmihee mim ba'dihee min jundim minas-samaaa'i wa maa kunnaa munzileen(QS. Yāʾ Sīn:28)
English Sahih International:
And We did not send down upon his people after him any soldiers from the heaven, nor would We have done so. (QS. Ya-Sin, Ayah ௨௮)
Abdul Hameed Baqavi:
அ(வரைக் கொலை செய்த)தற்குப் பின்னர் அவருடைய மக்க(ளை அழிக்க அவர்)களுக்கு வானத்திலிருந்து யாதொரு படையையும் நாம் இறக்கி வைக்கவில்லை; அவ்வாறு செய்ய அவசியம் ஏற்படவுமில்லை. (ஸூரத்து யாஸீன், வசனம் ௨௮)
Jan Trust Foundation
தவிர, நாம் அவருக்குப் பின்னால் அவருடைய சமூகத்தார் மீது வானத்திலிருந்து எந்த சேனையையும் (அவர்களை அழிப்பதற்காக) இறக்கிவைக்கவில்லை; அப்படி இறக்கி வைப்பவராகவும் நாம் இல்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவருக்குப் பின்னர் அவருடைய மக்கள் மீது வானத்தில் இருந்து ஒரு படையை நாம் இறக்கவில்லை. நாம் (அப்படி) இறக்குபவர்களாகவும் இல்லை.