Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௨௦

Qur'an Surah Ya-Sin Verse 20

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَجَاۤءَ مِنْ اَقْصَا الْمَدِيْنَةِ رَجُلٌ يَّسْعٰى قَالَ يٰقَوْمِ اتَّبِعُوا الْمُرْسَلِيْنَۙ (يس : ٣٦)

wajāa
وَجَآءَ
And came
வந்தார்
min aqṣā
مِنْ أَقْصَا
from (the) farthest end
கடைக்கோடியில் இருந்து
l-madīnati
ٱلْمَدِينَةِ
(of) the city
பட்டணத்தின்
rajulun
رَجُلٌ
a man
ஓர் ஆடவர்
yasʿā
يَسْعَىٰ
running
விரைந்தவராக
qāla
قَالَ
He said
அவர் கூறினார்
yāqawmi
يَٰقَوْمِ
"O my People!
என் மக்களே!
ittabiʿū
ٱتَّبِعُوا۟
Follow
நீங்கள் பின்பற்றுங்கள்
l-mur'salīna
ٱلْمُرْسَلِينَ
the Messengers
தூதர்களை

Transliteration:

Wa jaaa'a min aqsal madeenati rajuluny yas'aa qaala yaa qawmit tabi'ul mursaleen (QS. Yāʾ Sīn:20)

English Sahih International:

And there came from the farthest end of the city a man, running. He said, "O my people, follow the messengers. (QS. Ya-Sin, Ayah ௨௦)

Abdul Hameed Baqavi:

இதற்கிடையில் அப்பட்டிணத்தின் கடைக்கோடியிலிருந்து "(ஹபீபுந் நஜ்ஜார்" என்னும்) ஒரு மனிதர் விரைந்தோடி வந்து (அப்பட்டிணவாசிகளை நோக்கிக்) கூறியதாவது: "என்னுடைய மக்களே! நீங்கள் இத்தூதர்களைப் பின்பற்றுங்கள். (ஸூரத்து யாஸீன், வசனம் ௨௦)

Jan Trust Foundation

(அப்பொழுது) ஒரு மனிதர் அப்பட்டணத்தின் கடைக்கோடியிலிருந்து விரைந்து வந்து (அவர்களிடம்); “என் சமூகத்தவரே! நீங்கள் இத்தூதர்களைப் பின்பற்றுங்கள்” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பட்டணத்தின் கடைக்கோடியில் இருந்து ஓர் ஆடவர் விரைந்தவராக வந்தார். அவர் கூறினார்: என் மக்களே! தூதர்களை நீங்கள் பின்பற்றுங்கள்.